இலங்கைத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 33:
}}
 
இலங்கையில், '''இலங்கைத் தமிழர்''' என்னும் தொடர், இலங்கையைத் தமது மரபுவழிப் பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்களைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. இலங்கையின் உத்தியோக முறை ஆவணங்களிலும் இந்தப் பொருளிலேயே இத் தொடர் பயன்பட்டு வருகிறது. இவர்களை '''இலங்கை வம்சாவழித் தமிழர்''' எனவும் குறிப்பிடுவது உண்டு. [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியர்]] ஆட்சிக்காலத்தில் [[கோப்பி]], [[தேயிலை]] தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு [[தமிழ்நாடு|தமிழ் நாட்டிலிருந்து]] கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட [[இலங்கையின் இந்தியத் தமிழர்|இந்திய வம்சாவழித் தமிழரிடம்]] இருந்து வேறுபடுத்தி காட்டும் பொருட்டே '''வம்சாவழித் தமிழர்''' எனும் தொடர் பயன்படுத்தப்பட்டது. [[இலங்கை|இலங்கையின்]] [[வட மாகாணம், இலங்கை|வடக்கு]] [[கீழ் மாகாணம், இலங்கை|கிழக்கு]] மாகாணங்களில் பல் நூற்றாண்டுகளாக ஆண்டுகளாகப்நூற்றாண்டுகளாகப் பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர் இலங்கையின் பிற பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
 
பொதுப் பொருளில் இலங்கையில் குடியுரிமையுடைய, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருமே இலங்கைத் தமிழர் ஆதல் வேண்டும் எனினும், இலங்கையைப் பொறுத்தவரை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இலங்கை முசுலிம்கள் மொழிவழியே தம்மை அடையாளம் காண்பதில்லை. அவர்களை [[இலங்கை முசுலிம்கள்]] என வகைப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் தமிழ் பேசும் முசுலிம்களும், முன்னர் குறிப்பிட்ட அண்மையில் இலங்கையைத் தாயகமாக ஏற்றுக்கொண்ட [[மலையகத் தமிழர்]]களும், இலங்கைத் தமிழர் என்னும் வகைப்பாட்டினுள் அடங்குவது இல்லை. பிரதேசம், சாதி, சமயம் முதலியன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில், இலங்கைத் தமிழரிடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும், மொழியாலும், வேறு பல அம்சங்களின் அடிப்படையிலும் ஒரே குழுவாக இலங்கையின் பிற இனத்தவரிடம் இருந்து தனித்துவமாகக் காணப்படுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது