கரிபியக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 113 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 1:
[[படிமம்:Central america (cia).png|thumb|250px|right|மத்திய அமெரிக்காவினதும் கரிபியக்கடாலினதும் வரைப்படம்]]
 
'''கரிபியக் கடல்''' [[மேற்கு அரைக்கோளம்|மேற்கு அரைக்கோளத்தில்]] [[மெக்சிகோ குடா]]விற்கு தென்கிழக்கில் அமைந்துள்ள அயனமண்டல ஒரு [[கடல்|கடலாகும்]]. இது [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலின்]] ஒரு பகுதியாகும். இக்கடல் [[கரிபிய புவியோடு|கரிபிய புவியோட்டின்]] பெரும் பகுதியை அடைத்துக் கொண்டிருக்கிறது. இதன் எல்லைகளாக தெற்கில் [[தென் அமெரிக்கா]]வும், மேற்கே [[மத்திய அமெரிக்கா]]வும் , [[மெக்சிகோ]]வும், வடக்கிலும் கிழக்கிலும் [[அண்டிலுசு]]: [[பாரிய அண்டிலிசு]] தீவுகளான [[கியூபா]], [[இஸ்பனியோலா]] , [[யமேக்கா]] , [[போட்ட ரிக்கோ]] வடக்கிலும் [[சிறிய அண்டிலுசு]]த் தீவுகள் கிழக்கிலும் அமைந்துள்ளன. கரிபியக்கடலின் முழுமையும் அதில் அமைந்துள்ள [[மேற்கிந்தியத் தீவுகள்]] அனைத்தும், அருகே அமைந்துள்ள கடற்கரைகளும் கூட்டாக [[கரிபியம்]] என அழைக்கப்படுகிறது.
 
2,754,000 சதுர கிலோமீட்டர் (1,063,000 சதுர மைல்).<ref>[http://www.allthesea.com/Caribbean-Sea.html கரிபியக் கடல்] All The Sea. URL last accessed May 7, 2006</ref> பரப்பளவைக் கொண்ட கரிபியக்கடல் உலகில் பாரிய உப்புக்கடல்களில் ஒன்றாகும். கடல் மட்டத்துக்குக் கீழ் 7,686 [[மீட்டர்|மீ.]] (25,220 [[அடி]]) ஆழமுடைய கரிபியக் கடலின் ஆழமான புள்ளி கியுபாவுக்கும் யமேக்காவுக்குமிடையே அமைந்துள்ள [[கேமன் ஆழி]]யாகும். கரிபியக் கடற்கரை பல குடாக்களையும், விரிகுடாக்களையும் கொண்டுள்ளது.
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
<div class="references-small">
<references/>
</div>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கரிபியக்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது