சிச்சென் இட்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 64 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 12:
}}
 
[[படிமம்:Head_of_serpent_columnHead of serpent column.jpg|thumb|250px|கோட்டையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள படிகள்]]
'''சிச்சென் இட்சா''' (''Chichen Itza'') என்பது [[மெக்சிகோ]] நாட்டின், யுகட்டான் (Yucatán) என்னுமிடத்திலுள்ள, [[கொலம்பஸ்|கொலம்பசு]]க்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது [[மாயன் நாகரீகம்|மாயன் நாகரீகக்]] காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயம் நாகரீகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், [[கி.பி.]] 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், [[தொல்ட்டெக்]] அரசனான குவெட்சால்கோட்டில் (''Quetzalcoatl'') என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். [[1221]] ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் (Mayapan) என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது.
 
 
[[படிமம்:El Castillo, Chichén Itzá.jpg|thumb|left|250px|சுற்றுலாப் பயணிகள் கோட்டை என அழைக்கப்படும் [[எல் காஸ்ட்டிலோ பிரமிட்]] மீது ஏறும் காட்சி]]
சிச்சென் இட்சா அழிபாடுகள் நடுவண் அரசின் சொத்து. எனினும் களத்தைக் காக்கும் பொறுப்பை மெக்சிக்கோவின் மானிடவியல், வரலாற்றுத் தேசிய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நினைவுச் சின்னங்கள் இருக்கும் நிலங்கள் 29 மார்ச் 2010 வரை தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்நிலங்களை இப்போது யுக்கட்டான் மாநிலம் விலைகொடுத்து வாங்கியுள்ளது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிச்சென்_இட்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது