கேதாரகௌரி விரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
வரிசை 2:
கேதாரம் என்பது இமயமலைசாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தெவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்நாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே '''கேதார கௌரி விரதமாகும்'''. வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரிவிரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது.
 
முன்னொருகாலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ [[சிவன்]], [[பார்வதி]] தேவியோடு வீற்றிருக்கின்றார். பிருங்கிகிருடி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பியைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலைமலையை விட்டுத் தவம் செய்வதற்காக [[கௌதமமுனிவர்|கௌதமுனிவரின்]] ஆச்சிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விழங்கியது. ஓமத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வீடுதிரும்பிய மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆச்சிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து செய்துவிட்டு அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் என்று எல்லாரும்போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்து எமக்கு அருள் புரிகின்றாள். இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனின் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார்.
 
==கேதாரேஸ்வர விரதம் அனுஷ்டிக்கும் முறை==
வரிசை 8:
 
==இவ்விரத்தை அனுஷ்டிக்கக் கூடியவர்கள்==
ஐந்து மாதங்களிற்கு மேல் கர்ப்பிணியாக இல்லாத பெண்களும் [[மாதவிலக்கு]] நீக்கப்பெற்ற பெண்களும் 21 நாட்கள் விரதமிருக்கலாம். ஏனையோர் மாதவிலக்கு அம்முறை வந்தபின் [[அமாவாசை]]த் திதிக்கு முன்னுள்ள 9 நாட்களோ 7 நாட்களோ மூன்று நாட்களோ அல்லது அன்றைய தினமோ இவ் விரத்த்தை அனுஷ்டித்து 21 முடிச்சிட்ட கயிற்றை இடது புஜத்திலோ அல்லது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம். கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபடவேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்ட்க்கலாம்.
 
==பூலோகத்தில் இவ்விரதம் பரவிய முறை==
சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்ர்வராஜனுக்கு கூறியருளினார். விரத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து வைசிய குலத்துப் பெண்களான புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தாகள். மிகவும் வறுமையினால் வாடிய இவ்விரத்த்தை அனுஷ்டிக்க சிவபெருமான் தோன்றி இவர்களுக்கு வேண்டிய செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் கொடுத்தருளினார்.
 
 
''{{'''அனைவருக்கும் வணக்கம். இந்த விரதம் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இங்கு ஆவணிமாதம் வளர்லிறை நவமியில் ஆரம்பித்து புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு முன்தினம்வரை 21 நாட்கள் நடைபெறுகிறது. வாய்ப்பு உள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவேண்டுகிறேன்'''.
வரி 148 ⟶ 147:
 
எழுதியவர்- நீர்வை.தி.மயூரகிரிசர்மா
 
 
[[பகுப்பு:சிவ விரதங்கள்]]
[[பகுப்பு:இந்துசமய விழாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கேதாரகௌரி_விரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது