பிபின் சந்திர பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"=விபின் சந்திர பால்= விபி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
=விபின் சந்திர பால்=
விபின் சந்திர பால் [[லால்-பால்-பால்]] என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர். மற்ற இருவர் [[பால கங்காதர திலகர்]], [[லாலா லஜபதிலஜபத் ராய்]]. [[தாதாபாய் நௌரோஜி]] சுதந்திரம் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொன்னார். திலகர் "சுயராச்சியம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன்", என்றார். விபின் சந்திர பால் தனது உணர்ச்சி மிக்க பேச்சால் மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார். அவர் செப்டம்பர் 7, 1958 ல் வங்காளத்தில் ஹபிகஞ்ஜ் மாவட்டத்தில் போய்ல் என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தையார் பெயர் ராம் சந்திர பால். அவர் வசதியான வைஷ்ணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கல்கத்தா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கல்லூரியில் பயின்று அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அவரது ஒரே மகன் நிரஞ்சன் பால்.
 
அவர் மிகச் சிறந்த பேச்சாளர். வங்கப்பிரிவினையின் போது மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர். "வந்தே மாதரம்" என்ற பத்திரிக்கையின் ஆசிரியர். எழுத்தாளர். அவர் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் புரட்சியாளராக வாழ்ந்தார். அவர் ஒரு விதவையை மணந்தார். அவர் "புரட்சிக் கருத்துக்களின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
வரிசை 8:
1909 ஆம் ஆண்டு கர்ஸன் வில்லி என்பவர் மதன்லால் திங்கராவினால் கொலை செய்யப்பட்ட பிறகு "சுயராஜ்யா" பத்திரிக்கை நின்று போனது. விபின் சந்திர பால் காந்திஜியை எதிர்த்தவர்களுள் முதமையானவர். அவர் காந்தியை "சர்வாதிகாரி" என்று குறிப்பிடுகிறார். மேலும் கூறுகிறார்," சுதந்திரம் ஒரு நாளும் மந்திரத்தால் கிடைக்காது". மக்களைத் தவறாக வழி நடத்தும் செயலைத் தான் ஒரு போதும் செய்ய மாட்டேன் என்றும் கூறுகிறார். அவர் காந்தி ஒரு "சர்வாதிகாரி" என்ற கருத்தை அவர் இறக்கும் வரை மாற்றிக்கொள்ளவில்லை.
 
அவர் இந்தியாவிலிருந்தும் வெளி நாட்டில் இருந்தும் பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதியுள்ளார். அவரது நூற்றாண்டு விழாவின் போது நாட்டிற்கும் மதத்திற்கும் அவர் ஆற்றிய பணி மகத்தானது என்று நேருஜி குறிப்பிடுகிறார். அவர் தமிழ் நாட்டுக்கும் வந்து உணர்ச்சிகரமான பேச்சினால் மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார். வந்தே மாதரம் பத்திரிக்கை சம்பந்தமான வழக்கில் ஸ்ரீ [[அரவிந்தர்]] அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்ததால் ஆறு மாத சிறைத்தண்டனை பெற்றார். அவர் விடுதலை நாளைக் கொண்டாடும் பொழுதுதான் [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] கைது செய்யப்பட்டார்.
மே 20, 1932 ல் அவர் மறைந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிபின்_சந்திர_பால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது