பிபின் சந்திர பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
அவர் 1907 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். அங்கே இந்தியா ஹவுஸ் -ல் இருந்து "சுயராஜ்யா" என்ற பத்திரிக்கையை வெளியிட்டார். [[இந்தியா ஹவுஸ்]] லண்டனின் வடக்குப் பகுதியில் மாணவர்கள் தங்கும் ஓர் இடம். அங்கே இந்திய விடுதலைக்காக தீவிரமாக செயல்பட்ட [[வ. வே. சுப்பிரமணியம்]], [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்]], மதன்லால் திங்கரா போன்றோர் இணைந்து பணியாற்றினர்.
 
1909 ஆம் ஆண்டு கர்ஸன் வில்லி என்பவர் மதன்லால் திங்கராவினால் கொலை செய்யப்பட்ட பிறகு "சுயராஜ்யா" பத்திரிக்கை நின்று போனது. விபின் சந்திர பால் காந்திஜியை எதிர்த்தவர்களுள் முதமையானவர்முதன்மையானவர். அவர் காந்தியை "சர்வாதிகாரி" என்று குறிப்பிடுகிறார். மேலும் கூறுகிறார்," சுதந்திரம் ஒரு நாளும் மந்திரத்தால் கிடைக்காது". மக்களைத் தவறாக வழி நடத்தும் செயலைத் தான் ஒரு போதும் செய்ய மாட்டேன் என்றும் கூறுகிறார். அவர் காந்தி ஒரு "சர்வாதிகாரி" என்ற கருத்தை அவர் இறக்கும் வரை மாற்றிக்கொள்ளவில்லை.
 
அவர் இந்தியாவிலிருந்தும் வெளி நாட்டில் இருந்தும் பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதியுள்ளார். அவரது நூற்றாண்டு விழாவின் போது நாட்டிற்கும் மதத்திற்கும் அவர் ஆற்றிய பணி மகத்தானது என்று நேருஜி குறிப்பிடுகிறார். அவர் தமிழ் நாட்டுக்கும் வந்து உணர்ச்சிகரமான பேச்சினால் மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார். வந்தே மாதரம் பத்திரிக்கை சம்பந்தமான வழக்கில் ஸ்ரீ [[அரவிந்தர்]] அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்ததால் ஆறு மாத சிறைத்தண்டனை பெற்றார். அவர் விடுதலை நாளைக் கொண்டாடும் பொழுதுதான் [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]] கைது செய்யப்பட்டார்.
பிபின் சந்திர பால் மே 20, 1932 ல் அவர் மறைந்தார்.
 
முக்கிய நிகழ்வுகள்:
* 1886 ஆம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்தார்.1887 ல் சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் உணர்ச்சிகரமாகப் பேசினார்.
* லால்-பால்-பால் கூட்டணியில் இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார்.
* வங்காளத்தைச் சேர்ந்த இவர் ஸ்ரீ அரவிந்தருடன் சேர்ந்து பணியாற்றினார்.
* இவர் சுதந்திரம், அயல் நாட்டுப் பொருள் பகிஷ்கரிப்பு, ஏழ்மை ஒழிப்பு, கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தார்.
* இவருக்கு மிதவாதத்தில் நம்பிக்கை இல்லை.
* இவரைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் "வீரம் பொருந்திய தீர்க்கதரிசி" என்று கூறுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/பிபின்_சந்திர_பால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது