யாழ்ப்பாணச் சரித்திரம் (இராசநாயகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"செ. இராசநாயகம் எழுதிய '''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 12:
 
இவற்றுள் முதல் மூன்று அதிகரங்கள் ஆசிரியரது ஆங்கில ஆய்வு நூலின் முடிவுகளைத் தழுவியவை. நான்காம், ஐந்தாம் அதிகாரங்கள் சுவாமி ஞானப்பிரகாசரின் ஆய்வுகளைத் தழுவியவையாயினும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட போர்த்துக்கேயர் கால ஆவணங்களையும் ஆய்வு செய்து எழுதியிருப்பதாகவும் ஆசிரியர் தனது முன்னுரையில் தெளிவாக்கியுள்ளார். இதே போல ஆறாம் அதிகாரம் ஒல்லாந்தர் கால ஆவணங்களை ஆராய்ந்து இந்நூலுக்காக எழுதப்பட்டவை.
 
வரலாற்றுக்கு முந்திய காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு தனித் தீவாக இருந்தது என்றுன் அக்காலத்தில் இத் தீவிலும் இலங்கையின் மேற்குப் பகுதியிலும், நாகர் எனப்படும் சாதியார் வசித்து வந்ததாகவும், அவர்களின் இராசதானி தற்போது கந்தரோடை எனப்படும் கதிரமலை என்றும் இந்நூலில் இராசநாயகம் கூறுகிறார். அக்காலத்தில் இலங்கையில் இயக்கர் என்னும் இன்னொரு சாதியினரும் வாழ்ந்தனர் என்பதும், இராமாயணத்தில் வரும் இராவணன் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவன் என்பதும் அவரது கருத்து. சிங்களவரின் முன்னோனான விசயன் கலிங்கத்தில் இருந்து இலங்கையில் இறங்கி முதலில் இயக்க இளவரசி ஒருத்தியை மணந்து இயக்க அரசைக் கைப்பற்றினான் என்றும், பின்னர் அவளை விலக்கிவிட்டுப் பாண்டிநாட்டு இளவரசியொருத்தியை மணந்தான் என்பதும் மகாவம்சத்தின் கூற்று. இது பொருந்தாது என்பதும், விசயன் யாழ்ப்பாணத்தில் அரசாண்ட நாகர்குல இளவரசியையே மணந்திருக்க வேண்டும் என்பதும் இராசநாயகத்தின் கருத்து. இயக்கரும் நாகரும் ''ஈழு'' என்னும் மொழியைப் பேசிவந்தனர் எனவும், இச் சொல்லில் இருந்தே ''ஈழம்'' என்னும் சொல்லும் அதில் இருந்து ''சிங்களம்'', ''செரென்டிப்'', ''சிலோன்'' போன்ற சொற்கள் மருவின என்பதும் இந்நூலின் முதல் அதிகாரத்தில் உள்ள சில கருத்துக்கள்.
 
[[பகுப்பு:ஈழத்து நூல்கள்]]