அலாவுதீன் கில்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
 
'''அலாவுதீன் கில்சி''' :- பிறப்பு: ? - இறப்பு: 1316. இவரது இயற் பெயர்: சுனா கான் கில்சி (Juna Khan Khilji). இந்தியாவை ஆண்ட இரண்டாவது துருக்கி-ஆப்கானிய கலப்பினத்தை சேர்ந்தவர். கில்சி குல (Dynasty) சுல்தான்களில் மிகவும் வளுவான ஆட்சியாளர். 1290 முதல் 1320 முடிய இருபது ஆண்டுகள் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தை]] ஆண்டவர்.
வரி 20 ⟶ 19:
இறுதியாக இரு படைத்தலைவர்களும் சித்தூர் எனும் இடத்தில் ஒன்று சேர்ந்தனர். இவர்களது படை, ’வனசா’ (Vanasa) ஆற்றைக் கடந்து ‘இராவோசா’ (Ravosa Fort) எனும் கோட்டையை இராசபுத்திரர்களிடமிருந்து கைப்பற்றினர். பின்னர் குசராத்து மன்னர் வகேலா குலத்தின் (Vaghela Dynasty) இரண்டாம் கர்ணதேவ வகேலாவுடன் நடந்த போரில், கர்ணதேவன் தோற்று தனது மகள் தேவலா தேவியுடன் தேவகிரியை நோக்கி தப்பி ஓடிவிட்டார். அலாவுதீன் கில்சியின் படைகள் குசராத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த [[சோமநாதபுரம் (குசராத்து)]] சிவன் கோயிலை உடைத்தெறிந்தனர். மேலும் [[துவாரகை]]யில் இருந்த [[கிருட்டிணன்]] கோயிலையும் இடித்து தரைமட்டம் ஆக்கினர். அரண்மனை மற்றும் கோயில்களின் கருவூலங்களில் (Treasury) இருந்த பெருஞ்செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
 
அத்துடன் நில்லாது, குசராத்து மன்னன், இரண்டான் கர்ணதேவ வகேலாவின் பட்டத்தரசி கமலாதேவியை, கில்சியின் படைத்தலைவர்கள் சிறை பிடித்து அலாவுதீன் கில்சி முன் நிறுத்தினர். கில்சி, கமலாதேவியின் அழகில் மயங்கி, அவளை இசுலாமிய சமயத்திற்கு கட்டாயமாக மதம் மாற்றி அவளது ஒப்புதல் இன்றி கில்சி அவளை திருமணம் செய்துகொண்டு, பட்டத்தரசியாக்கினார்தனது பட்டத்தரசியாக்கிக் கொண்டார்.
 
===இரந்தம்பூர் கோட்டை (Ranthambor Fort), இராசபுதனம்===
 
அலாவுதீன் கில்சியின் பல மனைவிகளில் ஒருத்தியான ’சிம்னா’ என்பவர், முகமது சா என்ற படைத் தலைவருடன் (அலாவுதீன் கில்சியின் அண்ணன் மகனும், தில்லியின் முதல் சுல்தானுமான சலாலுதீன் கில்சி என்பவரை கொன்று, அலாவுதீன் கில்சியை தில்லி சுல்தானாக கொண்டுவருவதற்கு சதி திட்டம் தீட்டியவர்தான் இந்த முகமது சா) கூட்டு சேர்ந்து அலாவுதீன் கில்சியை கொன்று நாட்டை கைப்பற்ற வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினர். இந்த சதி திட்டத்தை தனது உளவாளிகள் மூலம் அலாவுதீன் கில்சி அறிந்து கொண்ட செய்தியை அறிந்த முகமது சா உடனடியாக தில்லியை விட்டு தப்பி ஓடி, இராசபுதன அரசர்களில் உறுதியான கோட்டைகள் மற்றும் அதிக படைபலம் மிக்க இராசபுத்திர அரசனான, இரந்தம்பூர் (Ranthambor ) நாட்டை ஆண்டுவரும் (பிருதிவிராசு) சௌகான் குல அரசன், அமிர் தேவனிடம் (Hamir Dev) அடைக்கலம் புகுந்தார். (1290ல் தில்லியின் முதல் சுல்தான் என்ற பெயர் படைத்த ’சுல்தான் சலாலுதீன் கில்சி (’Sultan Jalaluddin Khilji) என்பவர், இராசபுதனத்தின் இரந்தம்பூர் கோட்டையை பல ஆண்டுகள் முற்றுகையிட்டும் கைப்பற்ற முடியாது தில்லிக்கு திரும்பிச் சென்றவர் என்பது குறிப்பிடதக்கது)
 
வரிசை 38:
 
===மேவார்===
 
வடமேற்கு இந்தியாவில் மேவார் நாடு, மற்ற இராசபுத்திரர்களின் நாடுகளைவிட அதிக வலிமை மிக்கது. மேவார் நாட்டு மன்னர் பெயர் இரத்தன் சிங். அவரது பட்டத்து அரசியின் பெயர் பத்மினி. சுல்தான் அலாவுதீன் கில்சி 28. 01. 1303ல் மேவார் நாட்டின் மீது படையெடுத்தார். மேவார் கோட்டையை பல மாதங்களாக முற்றுகையிட்டு, வெளியில் இருந்து கோட்டைக்குள் செல்லும் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை தடுத்து நிறுத்தினார் கில்சி. எனவே வேறு வழியின்றி மேவாரின் படைகள் கோட்டையை திறந்து கொண்டு வெளியே வந்து கில்சி படைகளுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டு போரிட்டனர். மிகக் கடுமையான போரில் மேவார் நாட்டு அரசர் இரத்தன் சிங் மற்றும் தலைமைப் படைத்தலைவர்கள் போரில் மாண்டனர். இதை அறிந்த பட்டத்தரசி பத்மினி உட்பட அனைத்து இராசபுத்திரகுலப் பெண்கள் சத்திரிய குல மரபுப்படி தீக்குளித்து (Jauhar) (புனித தற்கொலை) மாண்டனர். எஞ்சிய மேவார் நாட்டுப் படைவீரர்கள் இறக்கும் வரை (Shaka) போரிட்டு மாண்டனர். போரில் தோற்ற மேவார் நாட்டை தன் தில்லி சுல்தானகத்துடன் (Delhi Sultanate) இணைத்துக் கொண்டார் கில்சி.
 
===மாளவம்===
 
சுல்தான் அலாவுதீன் கில்சி, குசராத்து, இரந்தம்பூர், மேவார் நாடுகளைக் கைப்பற்றியதன் மூலம், மீதமுள்ள வட இந்திய மன்னர்களின் மனதில் தில்லி சுல்தானகத்தின் மீது பயத்தை ஏற்படுத்தினார்.
கில்சிக்கு அடிபணியாத மாளவ நாட்டின் மீது படையெடுக்க அயின்–உல்-முல்க் முல்தானி எனும் படைத்தலைவர் தலைமையில், 1,60,000 படைவீரர்களை அனுப்பினார். மாளவ நாட்டு அரசர் 20,000 குதிரைப்படை வீரர்களும், 90,000 தரைப்படை வீரர்கள் கொண்ட படைகளுக்கு, அரனந்த கோகா (Harnanda Koka) என்பவரை தலைமைப் படைத்தலைவராக நியமித்து, கில்சியின் படைகளை எதிர் கொள்ள காத்திருந்தார். கில்சியின் படைகளுக்கும், மாளவ நாட்டுப் படைகளுக்கும் நடந்த கொடும் போரில், மாளவ படைத்தலைவர் அரனந்த கோகா கொல்லப்பட்டவுடன், அவரது படைவீரர்கள் சிதறி ஓடினார்கள். போரில் தோற்ற மாளவ நாட்டுடன், மந்து (Mandu) , தாரா (Dhara) மற்றும் சந்தோரி (Chanderi) போன்ற நாடுகள் கில்சியின் காலடியில் தானாக வீழ்ந்தது. கில்சியின் படைகள், கைப்பற்றிய நாடுகளின் அரசு கருவூலத்தில் இருந்த பெருஞ்செல்வங்களை கைப்பற்றிக்கொண்டார். மாளவ நாட்டு ஆளுனராக அயின் – உல்-முல்க் முல்தானியை, சுல்தான் அலாவுதீன் கில்சி நியமித்தார்.
 
===மார்வார்===
 
அலாவுதீன் கில்சி 1308ல் இராசபுத்திர நாடுகளில் ஒன்றான மார்வார் நாட்டின் மீது படையெடுத்து வெல்ல, தலைமைப்படைத்தலைவராக மாலிக் கமலுதீன் என்பவரை நியமித்து தனது படைகளை அனுப்பினார். சிவானா கோட்டைக்குள் (Siwana Fort) இருந்த மார்வார் மன்னன் சத்தல் தேவன் (Satal Dev) கில்சியின் படைகளை எதிர்கொண்டு தாக்கினார். இறுதிப்போரில் மார்வார் நாட்டுப்படைகள் தோற்றது. மார்வார் மன்னர் உயிருடன் பிடிக்கப்பட்டார். மார்வார் நாட்டு அரண்மனை கருவூலத்தில் இருந்த பெருஞ்செல்வங்கள் கில்சி படைகள் கவர்ந்தனர். மார்வார் நாடு தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது.
 
===சலோர் (Jalore)===
 
இராசபுத்திர நாடுகளில் ஒன்றான சலோர் நாட்டின் மீது அலாவுதீன் கில்சி படையெடுத்தார். சலோர் நாட்டு மன்னர் கன்னாத்து தேவன் சோன்கரன் (Kanhad Dev Songara) என்பவர், கில்சியின் படைகளை தோற்கடித்தார்.
பின்னர் இரண்டாம் முறையாக மாலிக் கமலுதீன் என்ற படைத்தலைவரின் தலைமையில் மிகப்பெரிய படையை, சலோர் நாட்டை தாக்க அனுப்பி வைத்தார் கில்சி. கில்சியின் பெரும்படைகள் சலோர் நாட்டுப் படைகளுடன் போரிட்டு வென்று சலோர் நாட்டை கைப்பற்றி தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது.
வரி 54 ⟶ 58:
 
===தேவகிரி===
 
1306 மற்றும் 1307 ஆகிய இரண்டு ஆண்டுகளில், கில்சி தென்னிந்திய படையெடுப்புகள் நடத்தினார். முதல் படையெடுப்பு, குசாராத்து நாட்டை விட்டு வெளியேறி “பாக்லானா’ (Baglana) பகுதியை ஆண்டுவந்த இராய்கரண் எனும் மன்னரை போரில் வென்று, மன்னர் இராய்கரணின் இளையமகள் தேவலா தேவியை தில்லிக்கு கொண்டு சென்று, மதம் மாற்றி தனது மகன் கிசிர் கானுக்கு (Khijir Khan) திருமணம் செய்து வைத்தார்.
 
வரி 63 ⟶ 68:
 
===வாரங்கல்===
 
தேவகிரியை கைப்பற்றிய [[மாலிக் கபூர்]], அடுத்து 1309ல் [[வாரங்கல்]] நாட்டு “காகாதீய குல” மன்னர் பிரதாப ருத்திர தேவன் மீது படையெடுத்தார். கடுமையான போரில் வாரங்கல் நாடு தோற்றது. போரில் தோற்ற வாரங்கல் நாட்டு மன்னருக்கும் மாலிக்கபூருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தப்படி, வாரங்கல் அரசின் கருவூலத்தில் இருந்த அனைத்து செல்வங்கள் மாலிக்கபூர் கைப்பற்றிக் கொண்டார். [[வாரங்கல்]] நாட்டு அரசர் தில்லி சுல்தானுக்கு அடிபணிந்து ஆண்டு தோறும் ஒரு பெரும்தொகை கப்பம் கட்ட வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, வாரங்கல் நாடு, [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்திற்கு]] ஆண்டு தோறும் கப்பம் கட்டும் நாடாக (Vassal State) விளங்கியது.
 
மேலும் வாரங்கல் நாட்டு மன்னர் பிரதாப ருத்திர தேவனிடமிருந்த விலை மதிக்க முடியாததும், உலகப்புகழ் பெற்றதும், மிகப்பெரியதும் ஆன “ [[கோஹினூர்]] வைரத்தை” [[மாலிக் கபூர்]] கைப்பற்றி சுல்தான் அலாவுதீன் கில்சியின் காலடியில் காணிக்கையாக சேர்த்தார். ( பின்னர் இந்த பெரும்புகழ் கொண்ட [[கோஹினூர்]] வைரத்தை, இந்தியாவை ஆண்ட ஆங்கில கிழக்கிந்திய கும்பினியர்களால் ( East India Company of England) கைப்பற்றப்பட்டு, [[இங்கிலாந்து]] நாட்டு [[விக்டோரியா மகாராணி]]யின் மணிமகுடத்தில் 1877ல் பதிக்கப்பட்டது).
 
===துவார சமுத்திரம் (Halebeedu), மற்றும் மதுரை===
 
தேவகிரி மற்றும் வாரங்கல் நாடுகளைக் கைப்பற்றிய [[மாலிக் கபூர்]], சுல்தான் அலாவுதீன் கில்சியின் ஆணையின்படி 1311ல் துவார சமுத்திர (அலபீடு) நாட்டை ஆண்டு வந்த வீர வல்லாளன் மீது படையெடுத்தார். ஆனால் வீரவல்லாளன் மாலிக் கபூரின் பெரும்படைகளுக்கு அஞ்சி போரிடாது, மாலிக் கபூருடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி துவார சமுத்திர அரசின் கருவூலத்தில் (Treasury) இருந்த அனைத்து செல்வங்களும் மாலிக் கபூர் கைப்பற்றினார். மேலும் துவார சமுத்திர நாடு, தில்லி சுல்தானகத்திற்கு அடங்கி, ஆண்டு தோறும் பெருந்தொகை கப்பம் செலுத்த வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்பட்டது. மாலிக் கபூர் அத்துடன் நில்லாது அந்நாட்டில் உள்ள அனைத்து இந்து, சமண மற்றும் பௌத்த கோயில்களை இடித்துத் தள்ள தனது படையினர்களுக்கு கட்டளையிட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/அலாவுதீன்_கில்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது