கலோரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி திருத்தம்
வரிசை 1:
'''கலோரி''' (Calorie) அல்லது '''கனலி''' என்பது [[வெப்பம்|வெப்பத்திற்கான]] ஒரு அலகு ஆகும். இது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளுக்கு]] முந்தைய காலத்தில் [[1824]]ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு [[கிராம்]] [[நீர்|நீரின்]] [[வெப்பநிலை]]யை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் [[வெப்பம்|வெப்பத்தின்]] அளவு ஒரு கனலி ஆகும். தற்போது [[வெப்பம்]] அல்லது [[ஆற்றல்]] ஆகியவற்றை அளக்க அனைத்துலக முறை அலகான [[ஜூல்]] என்பதே பரவலாகப் பயன்படுகிறது. ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும். உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப்படுகிறது. நாம் உண்ணும் உணவு [[ஆக்ஸிஜன்|உயிர்வளி]]யுடன் சேர்ந்து எரி சக்தியாக மாற்றமடைகிறாதுமாற்றமடைகிறது. இவ்வுடல் சக்தி உருவாகக் காரணமாக அமையும் எரிபொருள் சக்தியே கனலி ஆகும்.[[செல்|செல்லில்]] உள்ள [[மைட்டோகாண்டிரியா]] என்ற பகுதியில் தான் எரிதல் நடைபெறுகிறது. நம் உடல் நன்கு செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு கனலி நமக்குத் தேவை. இத்தேவை நம் [[உடல் பருமன்]], நாம் செய்யும் [[வேலை]] இவற்றைப் பொருத்து அமையும்.<br />
 
== உணவும் கனலியும் ==
 
நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ள கனலியின் அளவு வெவ்வேறு எண்ணிக்கையுடையனவாகும். நாம் உட்கொள்ளும் உணவு உடலுள் எரிந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கனலியை வெளிப்படுத்தும். சான்றாக ஒரு [[கிராம்]] [[புரோட்டீன்|புரத]] உணவு நான்கு கனலிகளை வெளியாக்கும். அதே சமயத்தில் ஒரு [[கிராம்]] [[கொழுப்பு]] உணவு ஒன்பது கனலிகளை வெளியாக்கும். கனலி வெப்பம் வெளிப்பட ஆதாரமான எரிபொருள்களைப் பற்றி உடல் கவலைப்படுவதே இல்லை. எவ்வகை உணவுப் பொருளாயினும் அதிலிருந்து எரிசக்தியாக கனலி வெளிப்பட்டு உடல் இயக்கம் செம்மையாக அமைய ஆற்றல் ஊட்டுகிறது.
 
== வேலையும் கனலியும் ==
 
10000 கலோரி – 1 கிலோ எடையாகும். நம் உடல் பருமன், நாம் மேற்கொள்ளும் பணி இவைகளுக்கேற்ப நமக்குக் கனலிகள் தேவைப்படுகின்றன. சான்றாக 45 கிலோ எடையுள்ள ஒருவன் ஓய்வாக இருக்கும்போது அவனுக்கு ஒரு நாளைக்கு 1,680 கிலோ கனலி வெப்பம் தேவைப்படுகிறது. அதே மனிதன் ஒரு சாதாரண வெலையைச் செய்வதென்றால் அவனுக்கு ஒரு நாளைக்கு 3,360 கனலி தேவைப்படும். அதே மனிதன் மிகக் கடினமான வேலையைச் செய்ய நேர்ந்தால் அவனுக்கு 6,720 கனலிகள் தேவைப்படும். இவாறு செய்யும் வேலைக்கேற்ப கனலி தரும் உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம்தான் அவரவர் உடலை நன்முறையில் பெணுதலாக வைத்துக் கொள்ளவும் ஆற்றலோடு உடலை இயக்கச் செய்யவும் முடியும். கோடைக் காலத்தைவிட குளிர் காலத்தில் நாம் அதிக அளவு கனலிகளைப் பயன்படுத்துகிறோம் பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிக கனலி தேவைப்படும். காரணம் , முதியவர்களை விட சிறுவர்களுக்கு வேகமாக உண்ணும் உணவு எரிந்து வெப்ப சக்தியாக மாறுவதேயாகும்.<br />
 
== உடலில் கனலி சேமிப்பு ==
 
உடலின் முக்கிய எரிபொருட்களாக [[கார்போஹைட்ரேட்|மாவுச் சத்து]], [[ஸ்டார்ச்சு]], [[சர்க்கரை]] ஆகியன அமையும். ஒரு வேளைக்கு நம் உடலுக்குத் தேவைப்படும் கனலி அளவை விட அதிக அளவு எரிபொருளை நம் உடல் பெற நேர்ந்தால், உடல் தன் தேவைக்கானது போக மீதமுள்ள கனலிகளை சேமித்து வைத்துக் கொள்ளும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் சேமிக்கும் எரிபொருள் மூன்றில் ஒரு பங்கு மட்டுமேயாகும். மீதமுள்லவை கொழுப்பாக மாறிவிடும். எனவே, நாம் உட்கொள்ளும் உணவின் மூலம் பெறக்கூடிய கனலிகளின் அளவை சரியாகக் கணக்கிட்டு கவனித்துக் கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு தேங்காமல் பார்த்துக் கொள்ளமுடியும். இதன் மூலம் கொழுப்புகளால் விளையும் தொல்லைகளோ உடல் உபாதைகளோ இல்லாமல் செம்மையாக உடலை வைத்துக்கொள்ள முடியும்.
 
வரி 71 ⟶ 76:
 
== உசாத்துணை ==
 
* [[மணவை முஸ்தபா]] , இளையர் [[அறிவியல்]] களஞ்சியம், மணவை பதிப்பகம். 1995
* மரு. கோ இராமநாதன் 'இன்றைய மருத்துவம்' மருத்துவ விழிப்புணர்வு மாத இதழ் இணைய தள வெளியீடு.
 
== மேலும் காண்க ==
* http://usetamil.forumotion.com/t4120-topic
"https://ta.wikipedia.org/wiki/கலோரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது