வட அமெரிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 23:
'''வட அமெரிக்கா''' ஒரு [[கண்டம்|கண்டமாகும்]]. [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[மெக்சிகோ]], [[கியூபா]] ஆகியவை இந்த கண்டத்தில் உள்ள நாடுகளுள் சில.
இக்கண்டமானது வடக்கே [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலாலும்]] கிழக்கே வட [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலாலும்]] மேற்கே [[பசிபிக் பெருங்கடல்|பெருங்கடலாலும்]] தெற்கே [[கரீபியன் கடலாலும்]] சூழப்பட்டுள்ளது. இது [[பரப்பளவு|பரப்பளவில்]] மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும். இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 454,225,000.
==வட அமெரிக்க நாடுகள்==
வட அமெரிக்கவில் உள்ள முக்கிய நாடுகள் கனடா,அமெரிக்கா,மெக்‌சிகோ,பனாமா,கியுபா மற்றும் பல
===கனடா===
:கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும், கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.
:கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. 1999ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும்.
===அமெரிக்க ஐக்கிய நாடு===
:அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பது United States of America, USA, US, பொதுவாக யுனைடெட் ஸ்டேட்ஸ் , யு.எஸ். , யு.எஸ்.ஏ, அல்லது அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. இது. ஐம்பது மாநிலங்களும் ஓர் ஐக்கிய மாவட்டமும் கொண்ட ஐக்கிய அரசியல் சட்ட குடியரசு நாடாகும். இந்நாடு வட அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் 48 மாநிலங்களும் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யும் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. அலாஸ்கா வட அமெரிக்க கண்டத்தின் வடமேற்கே அமைந்துள்ளது, இது கிழக்கில் கனடாவையும் மேற்கில் ரஷ்யாவையும் கொண்டுள்ளது. ஹவாய் மாநிலம் பசிபிக்கின் மையத்தில் அமைந்திருக்கும் ஒரு தீவுக் கூட்டமாகும். அமெரிக்கா கரீபியன் மற்றும் பசிபிக்கிலும் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் தனிமைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது.
:3.39 மில்லியன் சதுர மைல்கள் (9.83 மில்லியன் சதுர கிமீ) மற்றும் 306 மில்லியன் மக்களுடன், அமெரிக்கா மொத்த பரப்பளவில் மூன்றாவது அல்லது நான்காவது மிகப் பெரிய நாடாகவும், நிலப் பரப்பு மற்றும் மக்கள்தொகையில் மூன்றாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது. உலகில் பன்முக இனங்களையும் பலவித பண்பாடுகளையும் மிக அதிகளவில் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும்.[7] அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது,
===[[மெக்சிக்கோ]]===
:[[மெக்சிக்கோ]] (எசுப்பானியம்: México, "மெஹிக்கோ") வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும். முறைப்படி இது ஐக்கிய மெக்சிக்க நாடுகள் என அழைக்கப்படுகிறது.[1] ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. தெற்கிலும், மேற்கிலும் பசிபிக் பெருங்கடல் உள்ளது. தென்கிழக்கு எல்லையில் குவாத்தமாலா, பெலிசே ஆகிய நாடுகளும் கரிபியக் கடலும் உள்ளன. கிழக்கு எல்லையில் மெக்சிக்கோ குடா அமைந்துள்ளது.[2] ஏறத்தாழ இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் (760,000 சதுர மைல்களுக்கு மேல்)[3] பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ, பரப்பளவு அடிப்படையில் அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஐந்தாவது பெரிய நாடும், உலகில் 13 ஆவது பெரிய விடுதலை பெற்ற நாடும் ஆகும். 113 மில்லியன் மக்கள் தொகையுடன்[4] உலகின் 11 ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இது விளங்குவதுடன், உலகில் அதிக மக்கள் எசுப்பானிய மொழி பேசும் நாடும் இதுவாகும். இதன் தலைநகரம் மெக்சிகோ நகரம். மெக்சிக்கோவின் கூட்டாட்சி அமைப்பில் 31 மாநிலங்கள் இணைந்துள்ளன. இவற்றோடு தலைநகரம் கூட்டாட்சி மாவட்டமாக இருக்கிறது.
==புவியியல்==
===[[நயாகரா அருவி]]===
:[[நயாகரா அருவி]] அல்லது நயாகரா நீர்வீழ்ச்சி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம் கொண்டது, உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த அருவியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது.
:குதிரை லாட நீர்வீழ்ச்சி சுமார் 173 அடியிலிருந்து (53 மீ) விழுகிறது. அமெரிக்க நீர்வீழ்ச்சியின் உயரம் அதற்கு கீழே இருக்கும் பெரிய கற்பாறைகளால் வேறுபடுகிறது. இதன்காரணமாக நீர்வீழ்ச்சியின் உயரம் 70-100 அடி (21-30 மீ) என வேறுபடுகிறது. பெரிய குதிரை லாட அருவியின் அகலம் 2,600 அடியாகவும் (790 மீ), அமெரிக்க நீர்வீழ்ச்சியின் அகலம் 1.060 அடியாகவும் (320 மீ) இருக்கிறது. நயாகரா நீர்வீழ்ச்சியின் அமெரிக்க உச்சிநிலைக்கும் கனடிய உச்சிநிலைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 3,409 அடியாகும் (1,039 மீ) ஆகும்.
உச்ச பருவநிலை காலங்களில் நீர்வீழ்ச்சியிலிருந்து விழுகின்ற நீரின் அளவு வினாடிக்கு 202,000 என கன அடி (5,700 மீ 3) அளவு கூட சில சமயங்களில் இருக்கிறது. இவ்வாறு நீர்வீழ்ச்சியில் விழுகின்ற நீரானது அதிரிப்பதன் காரணமாக எறீ (Erie) ஏரியின் நீர்மட்ட உயர்வும் அதிகமாகிறது, எனில் இவை நேரடியாக தொடர்பில் உள்ளன. இந் நிகழ்வு பொதுவாக வசந்த காலத்தின் பிற்பகுதி அல்லது கோடையின் துவக்கத்தில் நிகழ்கிறது.
===[[ஆப்பலேச்சிய மலைத்தொடர்]]===
:ஆப்பலேச்சியன்ஸ் அல்லது [[ஆப்பலேச்சிய மலைத்தொடர்]] வட அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெரும் மலைத்தொடர்களில் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் அலபாமா மற்றும் ஜோர்ஜியா மாநிலங்களிலிருந்து தென்கிழக்கு கனடாவிலிருக்கும் நியூஃபென்லேன்ட் தீவு வரை தொடரும் ஆப்பலேச்சியங்களில் மிகவும் உயரமான மலை, 2,037 மீட்டர் அளவில் உயரமான வட கரொலைனாவின் மௌண்ட் மிச்சல் ஆகும்.
1528ல் ஒரு எசுப்பானிய நாடுகாண் பயணி "அப்பலாச்சென்" என்று பெயருடன் ஒரு பழங்குடி நகரத்தைப் பார்த்து இந்த மலைத்தொடருக்கு பெயர்வைத்தார்.இந்த மலைத்தொடரில் சில சிறு மலைத்தொடர்கள் ஜோர்ஜியாவின் புளூ ரிஜ், நியூ யோர்க்கின் அடிராண்டாக், டென்னசியின் பிரதான ஸ்மோக்கிகள் ஆகும்.
===[[டெட்ரோயிட் ஆறு]]===
'''டெட்ரோயிட் ஆறு''' (''Detroit River'') என்பது பேரேரிகள் தொகுதியில் உள்ள 32 மைல்கள் நீளமும், 0.5 - 2.5 மைல்கள் (1-4 கிமீ) அகலமும் கொண்ட ஆறு ஆகும். இதன் பெயர் நீரிணை ஆறு (Rivière du Détroit) என்னும் [[பிரெஞ்சு]]ப் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்த ஆறு, [[சென். கிளையர் ஏரி]]யையும் (St. Clair ), [[ஈரி ஏரி]]யையும் (Lake Erie) இணைப்பதன் காரணமாக இப் பிரெஞ்சுப் பெயர் ஏற்பட்டது. ஆனாலும் வரைவிலக்கணப்படி இது ஒரு [[நீரிணை]] அல்ல. [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]], [[கனடா]] ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைக்கோடு இந்த ஆற்றினூடாக நீளவாட்டில் செல்கிறது. இது கடல்மட்டத்தில் இருந்து 579 அடி (175 மீட்டர்) உயரத்தில் உள்ளது.
===[[ராக்கி மலைத்தொடர்]]===
ராக்கி மலைத்தொடர் (Rocky Mountains) வட அமெரிக்காவின் மேற்கு பகுதியில் ஒரு பெரும் மலைத்தொடர் ஆகும். இம்மலைத் தொடர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் வடக்கில் தொடங்கி ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலம் வரை நீண்டுள்ளது. கொலராடோ மாநிலத்தில் உள்ள எல்பர்ட் மலை ராக்கி மலைத்தொடரின் மிக உயரமான மலையாகும்
===[[கிராண்ட் கன்யன்]]===
:கிராண்ட் கன்யன் அல்லது மாபெரும் பள்ளம் என்பது அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளமாகும். கொலராடோ ஆற்றின் போக்கில் அமைந்துள்ள இது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் இயற்கையாக அமைந்த ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த 2 பில்லியன் ஆண்டுகளில் கொலராடோ ஆறு இப்பள்ளத்தினை உருவாக்கியுள்ளது. 350 கிமீ நீளமுள்ள கிராண்ட் கன்யன் ஒரு மைல் வரை சில இடங்களில் ஆழமுள்ளது.
:இதனைப் பார்க்க உலகெங்குமிலிருந்து மக்கள் வருகின்றனர். கொலராடோ ஆற்றில் படகுகளில் பயணித்துக் கொண்டும் இதனைக் கண்டு களிக்கலாம். சிலர் இங்கு நடைப்பயணம் மேற்கொள்வதையும் விரும்புகின்றனர். கிராண்ட் கன்யன் வடக்குப்பகுதியில் உள்ள நிலம் வடக்கு விளிம்பு (North Rim)என அழைக்கப்படுகிறது.தென்பகுதி தெற்கு விளிம்பு எனப்படுகிறது.இந்த விளிம்புகளிலிருந்துஅடிப்பகுதிக்குச் செல்ல பாதைகள் உள்ளன. இவை முடிவடையும் அடிப்பாகம் பான்டம் ரான்ச்(Phantom Ranch) எனப்படுகின்றன. இங்கு நடைப்பயணிகள் இரவு தங்க வசதிகள் உள்ளன.
===[[பெரிங் பாலம்]]===
:பெரிங் பாலம் (Bering land bridge) சுமார் ஆயிரம் மைல்கள் நீளம் கொண்ட நிலப்பரப்பு. இப்பாலம் (இயற்கை கட்டிய பாலம்) இன்றைய அலாஸ்காவையும் கிழக்கு சைபீரியாவையும் இணைக்கும் பகுதியாக பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் அதாவது பனிக்காலத்தில் (ice age) இருந்தது. இப்பகுதி தற்போது பனியால் சூழப்பட்டு பாலம் மூடிக் கிடக்கிறது. காரணம், தொடர்ந்து வரும் பனித்தூறலாலும் பனிசூழ்ந்த அலாஸ்காவிலிருந்து வரும் தென்மேற்குக் காற்றாலும் பாலம் மூடிவிட்டது. மனித இனம் கண்டம் விட்டு கண்டம் நகர்ந்த முதல் நிகழ்ச்சியும் இங்கு நடந்ததுவே. கீழ்க்கண்ட அசை படத்தில் இப்பாலத்தின் காலவரலாறும் அது எப்படி மூடியது என்று தெளிவாகச் சொல்லுகிறது.
:பனிக்காலத்தில் தப்பிய மனித இனம் இவ்வழியாக அலாஸ்காவில் புகுந்தனர். காலப்போக்கில் பனிசூழ்ந்து இணைப்புப் பாலமாகிய பெரிங் பாலம் காணாமல் போயிற்று, இதைப் போன்றே மாறுதல்கள் உலகின் பல இடங்களிலும் நடைபெற்றிருக்கிறது. இதன் கால அளவும் உத்தேசமாகவே குறிக்கப்பட்டுவருகிறது. ஒரு சிலர் முப்பதாயிரம் வருடங்கள் என்றும் சிலர் பன்னிரண்டாயிரம் முதல் முப்பத்தையாயிரம் வரையிலும் என்று குறிப்பிடுகிறார்கள். என்றாலும் பெரிங் இயற்கைப் பாலம் இருந்தது என்னவோ உண்மைதான். மனித இனத்தின் முதல் இடம்பெயர்தலும் இதன் வழிதான் என்று குறிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
===[[யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா]]===
:யெலோஸ்டோன் தேசியப் பூங்கா (Yellowstone National Park, "Yellowstone" என்ற பொருள் "மஞ்சக்கல்") அமெரிக்காவில் முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா ஆகும். மார்ச் 1, 1872 இன்றிய பூங்கா இருக்கும் இடத்தை அமெரிக்க அரசு தேசிய பூங்காவாக படைத்தது. இப்பூங்காவின் மிக புகழான இடம் ஓல்ட் ஃபெய்த்ஃபுல் நீர் சூடேற்றி ஆகும். இது தவிர பல காடு, விலங்கு வகைகளும் யெலோஸ்டோன் ஏரியும் பார்க்க சுற்றுலா பயணிகள் இப்பூங்காவுக்கு வருகின்றனர். ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இப்பூங்காவுக்கு வருகின்றனர்.
11,000 ஆண்டுகளாக அமெரிக்கப் பழங்குடி மக்கள் இந்த இடத்தில் வசிக்கின்றனர். இன்று இப்பூங்கா 8,987 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் பெரும்பான்மை வயோமிங் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஆனால் வடக்கிலும் மேற்கிலும் சிறிய பகுதிகள் ஐடஹோ மற்றும் மொன்டானா மாநிலங்களிலும் அமைந்துள்ளன.
:உலகில் வடக்கு மிதவெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய கெடுக்காத சூழ்நிலை இப்பூங்காவில் உள்ளது. கிரிசிலி கரடி, ஓநாய், எருமை போன்ற விலங்குகள் இப்பூங்காவில் வாழ்கின்றன. இப்பூங்காவிலுள்ள பெரிய காடுகள் மற்றும் புன்னிலங்களில் பல தாவர இனங்களும் வாழ்கின்றன. ஆண்டுதோரும் காட்டுத்தீ நடைபெறும்; 1988இல் நடந்த காட்டுத்தீயில் பூங்காவின் 36% எரிந்தது. மீன்பிடிப்பு, கப்பல் ஓட்டம், முகாம் செய்வது, நெடுந்துர நடப்பு போன்ற பொழுது போக்கு நடவடிக்கைகள் சுற்றுலா பயணிகளால் செய்யமுடியும். குளிர் காலத்தில் பனிவண்டியை பயன்படுத்தி பூங்காவை பார்க்கமுடியும்.
===[[மெக்சிகோ வளைகுடா]]===
:மெக்சிகோ வளைகுடா (Gulf of Mexico) வட அமெரிக்காவின் தென்பகுதியில் அட்லான்டிக் பெருங்கடலுக்கும் கரிபியக் கடலுக்கும் நீட்சியாக ஒரு வளைகுடா ஆகும். கிழக்கில் ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், மேற்கு டெக்சஸ் மாநிலம் மற்றும் மெக்சிகோ, தென்கிழக்கு கூபா, வடக்கு லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, புளோரிடா ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்ட இந்த வளைகுடாவில் மிசிசிப்பி, ரியோ கிராண்டே, சாட்டஹூச்சி, மற்றும் வேறு சில ஆறுகள் பாய்கின்றன
 
{{பிரதேசங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/வட_அமெரிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது