"ஆல்ப்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,856 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
ஆல்ப்சின் மிகவும் உயரமான [[மலை]]யான [[மொன்ட் பிளாங்க்]] 4,808 [[மீட்டர்]] உயரமானது. இது பிரான்ஸ்-இத்தாலி எல்லையில் அமைந்திருக்கிறது.
 
ஆல்ப்ஸ் மலைத்தொடர் 1,200 கிலோமீட்டர்கள் (750 மைல்) நீண்டு அமைந்துள்ளது.இந்த மலைத்தொடர் இத்தாலி, மானக்கோ, ஆஸ்திரியா, ஸ்லோவேனியா, சுவிச்சர்லாந்து, லிச்செண்ஸ்டெய்ன், ஜெர்மனி,மற்றும் பிரான்ஸ் ஆகிய எட்டு நாடுகளிலும் அமைந்துள்ளது. இந்த எட்டு நாடுகளையும் 'அல்பைன் நாடுகள்' என்று அழைப்பர்.இந்த மலைத்தொடர் ஐரோப்பாவின் பெரிய மலைத்தொடர் அமைப்புகளுள் ஒன்று.அல்பைன் பகுதியில் பல சிகரங்கள் கடல் மட்டத்திலிருந்து 4,000 க்கும் அதிகமான மீட்டர் அளவு (13,123 அடி) கொண்டிருக்கிறது.இவை அனைத்தையும் "நான்கு ஆயிரங்கள்" என்று அம்மக்கள் அழைக்கின்றனர்.ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மொத்தம் எண்பத்து இரண்டு சிகரங்கள் 4000 மீட்டர் நீளத்திற்கு மேல் உள்ளது.
==உருவாக்கம்==
இந்த மலைகள் ஆப்பிரிக்கா மற்றும் யுரேசியா டெக்டோனிக் அடுக்குகள் நூற்றுக்கணக்கான மில்லியன் வருடங்கள்களுக்கு முன் மோதியதால் உருவாக்கப்பட்டது ஆகும்.பூமியின் இரண்டு அடுக்குகள் மோதும் பொழுது ஏற்படும் தீவிர சுருங்குதலினால் கடல் படிவ பாறைகள் ஒன்றன் மீது மற்றொன்று மோதி உயர் மலை சிகரங்களும், மடிப்பு மலைகளும் உருவாகும்.இதுபோன்று உருவானதே ஆல்ப்ஸ் மலைத்தொடரும், மோண்ட் பிளாங்க் மற்றும் மேட்டர்ஹார்ன் போன்ற மலை சிகரங்களும் ஆகும். மோண்ட் பிளாங்க் பிரஞ்சு-இத்தாலிய எல்லை பரவியிருக்கின்றது.
==காலநிலை==
ஐரோப்பாவின் மொத்த காலநிலையும் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் காலநிலை பாதிக்கும்.ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெய்யும் மழையெ ஐரோப்பாவின் மொத்த காலநிலையும் மாற்றுகின்றது.
==மனித வாழ்விடமும்,கலாச்சாரமும்==
ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மனித வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பாலியோலித்திக் காலம் வரை பின்னோக்கி செல்கின்றன.தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 5,000 ஆண்டுகள் பழமையான பதபடுத்தப்பட்ட மனித உடலை, 1991 இல் ஆஸ்திரிய-இத்தாலிய எல்லைப்பகுதியில் ஒரு பனிக்கட்டியின் உள்ளே கண்டுபிடித்தார்கள்.கி.மு. 6 ம் நூற்றாண்டுகளில், 'செல்டிக் லா தேனே' என்னும் கலாச்சாரம் இங்கு நிறுவப்பட்டு உள்ளது.
அல்பைன் பகுதிகள் ஒரு வலுவான கலாச்சார அடையாளத்தை இன்றும் கொண்டுள்ளது.அல்பைன் பகுதிகள் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சுற்றுலாத்துறையினால் வளரத் தொடங்கியது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் இப்பகுதிகள் பெரிதும் விரிவடைந்தது. எனினும், அல்ப்ஸில் வாழும் மக்கள் பாரம்பரிய தொழிலான விவசாயம்,பாலாடைக்கட்டி தயாரித்தல் (cheesemaking), மற்றும் மரப்பொருட்கள் செய்தல் போன்றவற்றையே பின்பற்றுகிறார்கள். தற்போது இந்த பிராந்தியத்தில் 14 மில்லியன் மக்கள் குடிமக்களாகவும், 120 மில்லியன் மக்கள் ஆண்டு பார்வையாளர்களாகவும் உள்ளனர்.
 
 
== பூகோளம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1476434" இருந்து மீள்விக்கப்பட்டது