மிதிவண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 118 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 12:
 
== வரலாறு ==
பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac) என்பவர் பொழுது போக்காக வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டார். ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி. 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி உருளச்செய்ய வேண்டும். ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகைமிதிவண்டியில் திசைமாற்றி, மிதிஇயக்கி, தடை, என எதுவும் கிடையாது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி ஷிவ்ராக் விளக்கிக்காட்டினார். <ref>Baudry de Saunier, Louis (1891). Histoire Générale de la Vélocipédie. Ollendorff Paris. pp. 4–8.</ref>இந்த நிகழ்வு மிதிவண்டி உருவாவதற்கு காரணமாக இருந்தது
 
== திசைமாற்றியுடன் கூடிய மிதிவண்டி ==
கோம்டி ஷிவ்ராக்கின் சைக்கிள் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் (Karl Von Drais) என்பவர் 1817-ஆம் ஆண்டு ஒரு மிதிவண்டியை வடிவமைத்தார். ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது மிதிவண்டியில் தான் முதன் முதலாக திசைமாற்றி எனப்படும் ஸ்டீயரிங் (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த சைக்கிள் 1818- ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான்.<ref>"Canada Science and Technology Museum: from Draisienne to Dandyhorse". Retrieved 2008-12-31.</ref>
"https://ta.wikipedia.org/wiki/மிதிவண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது