"பிரெஞ்சு மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,729 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
 
கியூபெக்கில் பேசப்படும் பிரெஞ்சு மொழிக்கும், பிரான்சில் பேசப்படும் பிரெஞ்சு மொழிக்குமான வித்தியாசம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஆங்கிலங்களுக்கிடையிலான வேறுபாட்டை ஒத்தது. பெரும்பான்மை பிரெஞ்சு மொழி பேசுவோர் வசிக்கும் பகுதியான கியூபெக்கில் அமைந்துள்ள பிரெஞ்சு மொழிக்கான கியூபெக் சபை, கியூபெக் பிரெஞ்சுக்கான நெறிமுறைகளைச் செயற்படுத்தி வருவதுடன், பிரெஞ்சு மொழிக்கான பட்டயம் (சட்டமூலம் 101 & 104) மதிக்கப்படுவதையும் உறுதிப் படுத்துகிறது.
 
==== எயிட்டி ====
 
எயிட்டியின் இரண்டு உத்தியோகபூர்வ மொழிகளில் பிரெஞ்சும் ஒன்றாகும். எழுத்து, பாடசாலை நெறிமுறைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் இது முதன்மை மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அனைத்து கல்விகற்ற எயித்தியர்களாலும் பேசப்படுவதுடன் வணிகத்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், திருமணம், பட்டமளிப்பு விழா மற்றும் தேவாலயப் பிரார்த்தனை போன்ற நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் மக்கள்தொகையில் 10-15%மானோர் பிரெஞ்சைத் தமது தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஏனையோர் இதனை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனன்ர். இரண்டாவது உத்தியோகபூர்வ மொழி அண்மையில் தரப்படுத்தப்பட்ட, எயித்தியின் அனைத்து மக்களும் பேசும் எயித்திய கிரியோல் ஆகும். எயித்திய கிரியோல் என்பது பிரெஞ்சை அடிப்படையாகக் கொண்ட கிரியோல் மொழிகளில் ஒன்றாகும். இதிலுள்ள பெரும்பாலான சொற்கள் பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளதோடு, மேற்கு ஆபிரிக்க மொழிகள் மற்றும் சில ஐரோப்பிய மொழிகளின் தாக்கத்தையும் கொண்டுள்ளன. எயித்திய கிரியோல் மொழியானது லூசியானா கிரியோல் மற்றும் ஏனைய பிரெஞ்சு கிரியோல் மொழிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.
 
== மேலும் காண்க ==
3,301

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1477911" இருந்து மீள்விக்கப்பட்டது