அரிசுட்டாட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
'''அரிசுட்டாட்டில்''' (அல்லது '''அரிஸ்டாட்டில்''' (''Aristotle'')) ([[கிமு 384]] - [[மார்ச் 7]], [[கிமு 322]]) ஒரு [[பண்டைய கிரீஸ்|கிரேக்க]]த் [[தத்துவஞானி]] மற்றும் பல்துறை வல்லுநர். அவரது எழுத்துக்களில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, தர்க்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், மற்றும் விலங்கியல் ஆகியன இடம் பெற்றிருக்கும். [[பிளேட்டோ]]வும், இவரும் மேலைத்தேசச் சிந்தனையில் மிகஅதிக செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள்.அரிஸ்டாட்டில் மேற்கத்திய தத்துவத்தின் மிக முக்கியமான நிறுவனர் ஆவார்.அரிஸ்டாட்டிலின் படைப்புக்களே மேற்கத்திய தத்துவம், ஒழுக்கவியல், அழகியல், தர்க்கம், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின.அரிஸ்டாட்டிலின் இயற்பியல் கருத்துக்கள், ஆழ்ந்த அறிவைத்தரும் இடைக்கால வடிவ இயற்பியல் கோட்பாடுகளாக அமைந்தன. நியூட்டனின் இயற்பியல் தத்துவங்கள் அரிஸ்டாட்டில் தத்துவத்தின் ஒரு நீட்ச்சியே ஆகும்.அரிஸ்டாட்டிலின் அவதானிப்புகள் விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமான இருப்பதை, 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாலர்கள் உறுதி செய்துள்ளனர். அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன.
இவ்விருவரும், [[சாக்கிரட்டீஸ்|சாக்கிரட்டீசும்]] முப்பெரும் கிரேக்கத் தத்துவஞானிகளாவர். [[பிளேட்டோ]], அரிஸ்டாட்டிலின் குரு. [[சாக்கிரட்டீஸ்|சாக்கிரட்டீசின்]](கிமு 470-399) சிந்தனைகள் மற்ற இருவரின் மீதும் ஆழமான தாக்கம் கொண்டிருந்தன. மாவீரன் அலெக்சாண்டர் இவருடைய சீடர் ஆவார்.
அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் இடைக்காலத்திய இஸ்லாமிய மற்றும் யூத மரபுகளில் தத்துவ மற்றும் இறையியல் சிந்தனையில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அதுவும் குறிப்பாக கிரிஸ்துவர்களின் இறையியலில் அவரின் தாக்கம் அதிகமாக இருந்தது. அரிஸ்டாட்டிலை இடைக்கால முஸ்லீம் அறிவுஜீவிகள் "முதல் ஆசிரியர்"( 'المعلم الأول') என போற்றினர்.அரிஸ்டாட்டில் எழுதிக்குவித்த நூல்களின் எண்ணிக்கை 170 என்று ஒரு பண்டையப் பட்டியல் கூறுகிறது.அரிஸ்டாடிலின் சிந்தனைகள் தமிழ்,ஆங்கிலம்,லத்தீன், சிரியாக், அராபிக், இத்தாலியன், ஃபிரெஞ்ச், ஹீப்ரு, ஜெர்மன் போன்ற பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
 
==பிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/அரிசுட்டாட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது