மஸ்ஜிதுல் ஹராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 40:
 
== வரலாறு: ==
இந்த பள்ளிவாசல் மனிதகுலம் தோன்றுவதற்கு முன்பே [[தேவதை]]களால் கட்டப்பட்டதாக இஸ்லாமிய பாரம்பரியம் கூறுகிறது. புவியில் [[தொழுகை]]க்காக இடம் அமைக்கவேண்டி இறைவன் நினைத்த பொழுது உதித்த சுவர்க்க பூமியின் பெயர் அல்-பயது ல்-மௌமூர் (Arabic: البيت المعمور, "The Worship Place of Angels"). காலபோக்கில் இயற்க்கை சீற்றங்களால் அழிந்து போன பள்ளிவாசல் ஒவ்வொருமுறையும் புதுபிக்கபட்டது. இஸ்லாமிய நம்பிக்கைகளின்படிக்கு இந்த பள்ளிவாசல் [[ஆபிரகாம்|இப்ராஹிமால்]] அவரது மகன் [[இஸ்மவேல்|இஸ்மாயில்]] உதவியுடன் மீண்டும் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. கடவுளின் ஆணைப்படி அவர்களிருவரும் பள்ளிவாசலையும் காபாவையும் கட்டினார்கள். காபாவின் கிழக்கு முனையில் சற்று கீழிறங்கி அமைக்கபட்டிருக்கும் கருங்கல் (ஹஜார்-உல்-அஸ்வத்) மட்டுமே இப்ராஹிமால் கட்டப்பட்ட பள்ளிவாசலின் மிச்சமாகும். காபா இருக்கும் திசையே உலகின் அனைத்து [[இஸ்லாமியர்]]களின் தொழுகை திசை ஆகும். இந்த பாலைவன சோலையின் ஜம்ஜம் நீரூற்றானது கண்டறியப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை வற்றியதே இல்லை என்று இஸ்லாம் அதன் புகழ் விளக்குகிறது.
 
இஸ்லாமிய நம்பிக்கையின் படிக்கு இஸ்மாயில் அவர்களின் சரித்திர கதையில் அவரது அன்னையும் இப்ராஹிமின் மனைவியுமான ஹாகர் அவர்கள் நீரை தேடி பள்ளிவாசல் கட்டபட்டிருக்கும் இடத்தை சுற்றியும் சஃபா மற்றும் மர்வாஃஹ் இடங்களுக்கிடையேயும் ஓடித்திரிந்தார். இதற்கிடையில் கடவுளின் கருணையால் அங்கு [[ஜம்ஜம் நீரூற்று]] தோன்றியது. அன்று முதல் அந்த நீரூற்று வற்றாமல் இருப்பதாக நம்பப்படுகிறது. ஹிஜ்ரா முடித்து வெற்றியுடன் மெக்கா திரும்பிய முகம்மதுவும் அவரது மருமகன் அலி இப்ன் அபி தலிப் - உம் காபாவினுள்ளும் புறமும் இருந்த தெய்வச்சிலைகளை அகற்றி அந்த இடத்தை சுத்தபடுதினார். அன்று முதல் காபாவில் இஸ்லாமியம் செழித்தது.
"https://ta.wikipedia.org/wiki/மஸ்ஜிதுல்_ஹராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது