பிரீட்ரிக் நீட்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 117 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 20:
}}
 
'''பிரீட்ரிக் நீட்சே''' எனச் சுருக்கமாக அறியப்படும் '''பிரீட்ரிக் வில்ஹெல்ம் நீட்சே''' (Friedrich Wilhelm Nietzsche - அக்டோபர் 15, 1844 – ஆகஸ்ட் 25, 1900) 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஜேர்மானிய[[செருமனி|ஜெர்மானிய]] [[மெய்யியலாளர்|மெய்யியலாளரும்]], [[மொழியியலாளர்|மொழியியலாளரும்]] ஆவார். இவர் [[மதம்]], [[ஒழுக்கநெறி]], சமகாலப் [[பண்பாடு]], [[மெய்யியல்]], [[அறிவியல்]] ஆகியவை தொடர்பில் பல முக்கிய ஆக்கங்களை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஒரு தனித்துவமான [[ஜெர்மன் மொழி]]ப் பாணியில் அமைந்திருந்தன. நீட்சேயின் செல்வாக்கு மெய்யியலுக்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்துவருகிறது. சிறப்பாக [[இருப்பியல்வாதம்]], [[பின்நவீனத்துவம்]] ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவரது பாணியும்; உண்மை தொடர்பான [[விழுமியம்]], [[புறநிலைநோக்கு]] என்பவை குறித்த அவரது கேள்விகளும்; அவற்றை விளக்குவது தொடர்பில் பல சிக்கல்களை ஏற்படுத்தின. இதனால் அக்காலத்து ஐரோப்பிய மெய்யியலிலும், [[பகுப்பாய்வு மெய்யியல்]] துறையிலும் பல துணை நூல்கள் உருவாகின.
 
பேரிடர்களை வாழ்வின் உறுதிப்பாட்டு நிகழ்வுகளாக விளக்குதல்; மீழ்நிகழ்வின் நிலைபேறு (eternal recurrence); [[பிளேட்டோனிசம்|பிளேட்டோனிசத்துக்கான]] மறுப்பு; [[கிறிஸ்தவம்]], [[சமநோக்குவாதம்]] (Egalitarianism) என்பவற்றை மறுத்தல் என்பவை இவருடைய முக்கியமான எண்ணக்கருக்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பிரீட்ரிக்_நீட்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது