அமெரிக்க உள்நாட்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி பதிப்புரிமை மீறல் http://www.tamilpaper.net/?tag=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%B2%E0%AF%80
வரிசை 43:
{{legend|#E9B96E| கூட்டமைப்பினால் கோரப்பட்டுச் சில சமயங்களில் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகள்}}]]
 
கிழக்குப் பகுதியில் கூட்டமைப்பின் தளபதி [[ராபர்ட் ஈ. லீ]] (Robert E. Lee), ஐக்கிய அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பல தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். எனினும் 1863 ஜூலை மாதத்தில் [[கெட்டிஸ்பர்க் போர்|கெட்டிஸ்பர்க்]] என்னுமிடத்தில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு திருப்பு முனையாக அமைந்தது.லீயின் முதல் படையெடுப்பு தோல்வியில் முடிவடைந்தாலும் அவர் தன் படைகளைப் பத்திரமாகக் காப்பாற்றிப் பின்வாங்கிவிட்டார். ஆனால் தனது படையெடுப்பின் தாக்கம் போர்க்களத்தை விட ஒன்றிய மக்களின் மனதில் தான் அதிகமாக இருந்தது என்பதைப் புரிந்துகொண்டார். தொடர்ந்து தோல்விகள் கிடைத்தால் அவர்கள் போர் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதை உணர்ந்தார். எனவே அடுத்த ஆண்டு (1863) மீண்டும் வடக்கு நோக்கிப் படையெடுத்தார். அவரை எதிர்க்க அனுப்பப்பட்ட ஒன்றியப்படைகள் அனைத்தையும் முறியடித்து வேகமாக முன்னேறினார். [[விக்ஸ்பர்க்]] கையும் (Vicksburg), [[ஹட்சன் துறை]]யையும் (Port Hudson) [[யுலிசீஸ் கிராண்ட்]] (Ulysses S. Grant) கைப்பற்றியதுடன் [[மிசிசிப்பி ஆறு|மிசிசிப்பி ஆற்றின்]] முழுமையான கட்டுப்பாடு ஐக்கிய அமெரிக்காவிடம் வந்தது.
 
1864 இல் கிராண்ட் நடத்திய தாக்குதல்களால், லீ, [[வர்ஜீனியா]]வின் [[ரிச்மண்ட்]]டிலிருந்த கூட்டமைப்பின் தலைநகரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் தளபதி [[வில்லியம் ஷெர்மன்]] (William Sherman) [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]]வின் [[அட்லான்டா]]வைக் கைப்பற்றிக்கொண்டு, ஜோர்ஜியாவின் நூறு மைல் அகலப் பரப்பில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, புகழ் பெற்ற [[ஷெர்மனின் கடல் நோக்கிய படையெடுப்பு|கடல் நோக்கிய படையெடுப்பைத்]] தொடங்கினார்.1864-65ல் கான்ஃபெடரசியின் படைகள் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்பட்டு அதன் பகுதிகள் ஒன்றியப் படைகளால் கைப்பற்றப்பட்டன. போரின் இறுதிக் கட்டத்தில் வேறு வழியில்லாமல் கறுப்பின அடிமைகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களைப் படைகளில் சேர்த்துக்கொள்ளலாமா என்று யோசிக்கத் தொடங்கினார் லீ. 1865 ஏப்ரலில் [[ஆப்பொமாட்டக்ஸ் மாளிகைப் போர்|ஆப்பொமாட்டக்ஸ் மாளிகை]]யில் தளபதி கிராண்டின் முன்னிலையில் லீ சரணடைந்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் எதிர்ப்புக்கள் வலுவிழந்தன.
 
அமெரிக்க வரலாற்றிலேயே அதிக தொகையினரைக் காவுகொண்ட இப் போரில் 620,000 படையினரும் எண்ணிக்கை அறியப்படாத குடிமக்களும் இறந்தனர். இதன் முடிவில் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்படதுடன், ஐக்கிய அமெரிக்க அரசின் கட்டுப்பாடும் வலுப்பெற்றது. எனினும், போரினால் ஏற்பட்ட, தீர்க்கப்படாத சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் தொடர்ந்தும் சமகால அமெரிக்கச் சிந்தனையைத் தீர்மானித்தன.
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_உள்நாட்டுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது