"இசுலாமியத் தமிழ் இலக்கியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

222 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("செம்மொழியான தமிழ் ,உலகத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
--[[சிறப்பு:Contributions/83.110.228.249|83.110.228.249]] 12:22, 20 ஆகத்து 2013 (UTC)--[[சிறப்பு:Contributions/83.110.228.249|83.110.228.249]] 12:22, 20 ஆகத்து 2013 (UTC)செம்மொழியான தமிழ் ,உலகத்தின் முதன் மொழியான தமிழ் ,சர்வ சமயங்கள் சார்ந்த,மற்றும் சமயம் சாரா இலக்கியங்களால் செறிவு பெற்று திகழ்கிறது .எல்லா சமயத்தை சார்ந்த இலக்கியங்களும் தமிழில் காணப்படுவது தமிழின் சிறப்பாகும் .சைவம் ,வைணவம் ,இஸ்லாம் ,பௌத்தம் ,சமணம் மற்றும் சமயம் சாரா நெறிகளும் ,தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன .
கி .பி . ஏழாம் நூற்றாண்டில் பக்தி இலக்கியங்கள் பரிணமித்த கால கட்டத்தில், அரபு நாட்டிலே தோன்றிய ஏகத்துவ மார்க்கம் ,தமிழ் மண்ணுக்குள் அறிமுகமானது .சங்க காலம் தொட்டு தொடர்பு கொண்டிருந்த அரபு நாட்டவர் ,யவனர் என்றும் பின்னர் சோனகர் ,துலுக்கர் ,முஸ்லிம்கள் என்றும் அழைக்கப்பட்டனர் .இவர்கள் தமிழ்நாட்டிலும் ,இலங்கையிலும் , சிங்கப்பூர் ,மலேசியா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளிலும் ,தென் ஆப்ரிக்காவிலும் பரவிக்கிடக்கிறார்கள் .இன்றைய உலகமயமான காலத்தில் ,அவர்கள் இல்லாத நாடில்லை எனலாம் .அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு புதிய சிந்தனைகளையும் ,புதிய பரிமாணங்களையும் வழங்கியுள்ளனர் .இன்றும் அவர்களின் பங்கு வாணிபம் ,கலை, அறிவியலில் சிறந்து விளங்குவதுபோல் ,இலக்கியத்திலும் போற்றுதற்குரியது .தமிழ் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம்கள் ,தங்கள் தாய் மொழியான ,தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியது . இஸ்லாமியர்கள் தமிழுக்கு புதிய இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தினர் .
1)மசலா, 2)நாமா 3)கிஸ்ஸா4)முனாஜாத்து 5)படைப்போர் 6)திருமண வாழ்த்து 7)நொண்டி நாடகம் ஆகியவை அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவையாகும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1483446" இருந்து மீள்விக்கப்பட்டது