மாசில்லா குழந்தைகள் படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{editing}}
[[Image:0 Le Massacre des Innocents d'après P.P. Rubens - Musées royaux des beaux-arts de Belgique (2).JPG|thumb|300px|மாசில்லா குழந்தைகள் படுகொலை, ஓவியர்: [[பீட்டர் பவுல் ரூபென்ஸ்]], 1611–12 ([[ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம்]]).]]
'''மாசில்லா குழந்தைகள் படுகொலை''' என்பது [[விவிலியம்|விவிலியத்தின்படி]] யூதர்களின் அரசனான [[முதலாம் ஏரோது]], பெத்லகேமில் இருந்த குழந்தைகளை கொன்ற நிகழ்வினைக்குறிக்கும். [[மத்தேயு நற்செய்தி]]யின் படி<ref>Matthew 2:16-18</ref> [[விவிலிய ஞானிகள்|ஞானிகள்]] தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் [[பெத்லகேம்|பெத்லகேமிலும்]] அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். அப்பொழுது ' ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை ' என்று இறைவாக்கினர் [[எரேமியா]] உரைத்தது<ref name=Jer3115>[[எரேமியா (நூல்)|எரேமியா]] {{bibleverse-nb||Jeremiah|31:15|NIV}}</ref> நிறைவேறியது.
 
கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை எணினும், அச்சமயத்தில் ஏராது அரசன் 14 ஆயிரம் சிறுவர்களையும் குழந்தைகளையும் கொன்றான் எனக் கிரேக்க மரபு கூறுகிறது. ஆனால், சிரியா நாட்டினரின் நம்பிக்கையின்படி இவ்வாறு கொல்லப்பட்ட சிறுவர்கள் 64 ஆயிரம் எனவும், மத்தியகால எழுத்தாளர்களின் கூற்றுப்படி இவ்வாறு கொல்லப்பட்ட சிறுவர்கள் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் எனவும் சொல்லப்படுகின்றது. இருந்தபோதிலும், நவீன எழுத்தாளர்கள் இந்த எண்ணிக்கையைக் குறைத்தே சொல்கின்றனர். பெத்லகேம் ஏறக்குறைய ஆயிரம் பேரைக் கொண்ட சிறிய நகரம், அதனால் அச்சமயத்தில் ஏறக்குறைய இருபது பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.
 
கொல்லப்பட்ட இக்குழந்தைகள் கிறித்தவ [[மறைசாட்சி]]களாக ஏற்கப்படுகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாசில்லா_குழந்தைகள்_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது