பெ. கருணாகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பெ. கருணாகரன்''' (பிறப்பு: ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
'''பெ. கருணாகரன்''' (பிறப்பு: [[சூலை 15]], [[1965]]) என்பவர் தமிழக எழுத்தாளர் மற்றும் கவிஞர். ட் பத்திரிகையாளர்.
[[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்திலுள்ள]] [[விருத்தாசலம்]] எனும் ஊரில் பிறந்த இவர் [[கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி]]யில் இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கியம் படித்தார். கல்லூரி நாட்களில் கவிதை, சிறுகதைகள் எழுதத் தொடங்கிய இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளார். இவர் இதுவரை சுமார் 100 சிறுகதைகளும், 200க்கும் மேற்பட்ட கவிதைகளும் எழுதியுள்ளார். செய்தி தொடர்பான 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். [[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] மாணவப் பத்திரிகையாளராக அறிமுகமாகி, பிறகு அதே இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராகப் பணியாற்றினார். அதன் பிறகு, கடந்த 25 ஆண்டுகளாக [[நக்கீரன் (இதழ்)|நக்கீரன்]], [[தினமணி]], [[குமுதம்]] போன்ற பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் [[2009]]ம் ஆண்டு [[ஜூலை]] மாதத்திலிருந்து [[புதிய தலைமுறை]] வார இதழில் இணையாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
 
==எழுதியுள்ள நூல்கள்==
வரிசை 10:
==பாராட்டும் பரிசும்==
 
# *இவர் எழுதிய “அமேசான் காடுகளும் சஹாராப் பாலைவனமும் எப்படித் தோன்றின?” எனும் நூல் திருப்பூர்த் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், கம்பம் பாரதி இலக்கியப் பேரவை, நொய்யல் இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளின் மூலம் 2009ம் ஆண்டின் சிறந்த குழந்தைகள் இலக்கிய நூலாகத் தேர்வு பெற்று பரிசுகள் பெற்றுள்ளது. இந்நூலுக்கு [[2013]] ஆம் ஆண்டு தமிழ்ப் பேராயத்தின் [[அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது|அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதும்]] கிடைத்துள்ளது.
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெ._கருணாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது