"தேன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,246 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
தேன்மது அல்லது தேன் பீர் போன்ற தேன் – நீர் கலவையான மதுவகையின் முக்கிய உட்பொருளாக தேன் உள்ளது. இயற்கையாகத் தேனிலிருந்து கிடைக்கும் புளிப்பூட்டும் நொதிதான் வரலாற்று ரீதியாகத் தேன்மதுவை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பர். இம்மது வகைகளை தயாரிக்க தேனும் நீரும் சேர்ந்த கலவையுடன் சிறிதளவு புளிப்பு நொதி ஈச்டு சேர்த்து ஊறவைக்கவேண்டும். நாற்பது நாட்களில் முதலாவது நொதித்தல் நிகழ்ந்த பிறகு ஊறலை இரண்டாவது நொதித்தல் கலத்திற்கு மாற்றி மீண்டும் 35 முதல் 40 நாட்களுக்கு நொதிக்க விடவேண்டும். இவை சரியாக நிகழும் நேர்வுகளில் நொதித்தல் முழுமையடைகிறது. தேவைப்படின் சர்க்கரை சேர்த்தி மீண்டும் சில நாட்களுக்கு நொதித்தலுக்கு விடப்படுகிறது
 
=== தேன் ஒரு ஊட்டச்சத்து:- ===
 
சக்கரை மற்றும் இதர சில கூட்டுப்பொருள்களின் கலவையாக தேன் உள்ளது. மாவுச்சத்துகள் என்ற அடிப்படையில் தேனை பகுக்கும்போது தேனில் பிரதானமாக பிரக்டோச் 38.5 சதவீதமும் குளுக்கோச் 31.0 சதவீதமும் கலந்துள்ளதாக அறியப்படுகிறது. செயற்கையான ஒரு சர்க்கரை திரவமாக தயாரிக்கும்போது அதில் தோராயமாக 48% பிரக்டோச், 47% குளுக்கோச் மற்றும் 5% சுக்ரோச் கலக்கப்படுகிறது. எஞ்சியுள்ள தேனில் மாவுச்சத்துகளான மால்டோச், சுக்ரோச் மற்றும் இதர சிக்கலான மாவுச்சத்துகள் அடங்கியுள்ளன. பிற சத்துள்ள இனிப்புச் சாறுகளைப் போலவே தேனும் அதிக அளவிளான சர்க்கரையும் சிறிய அளவில் உயிர்சத்துக்கள் அல்லது கனிமங்களைக் கொண்டுள்ளது.மேலும் தேனில் சிறிதளவு கலந்துள்ள பல்வேறு கூட்டுப்பொருள்கள் ஆக்சிச்னேற்ற எதிர்ப்பிகளாக செயலாற்றுகின்றன. தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனின் கூட்டுப்பொருள்கள் தேனீக்களுக்கு கிடைக்கும் பூக்களின் தன்மையை பொறுத்தே அமைகிறது.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1485836" இருந்து மீள்விக்கப்பட்டது