"நிறப்புரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

127 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(உள்ளிணைப்பு)
(*விரிவாக்கம்*)
 
மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்கருவில் இருக்கும் நிறப்புரியானது புரதங்களுடன் இணைக்கப்பட்டு மிக நெருக்கமாக அடுக்கப்படும்போது [[நிறமியன்]] (Chromatin) என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நெருக்கமான, ஒடுக்கப்பட்ட அமைப்பைக் கொண்டிருப்பதனால் கருவினுள் அடக்கப்படுகின்றது. [[கலப்பிரிவு|கலப்பிரிவின்போது]], இந்த நிறப்புரிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கலப்பிரிவின்போது தாய்க்கலத்தில் இருந்து, மகட்கலங்களுக்கு மரபியல் கூறுகள் கடத்தப்பட வேண்டி இருப்பதனால், நிறப்புரிகள் இரட்டிப்பாதலும், பின்னர் பிரிதலும் நிகழ வேண்டும். எனவே உயிரணுக்களில் நிறப்புரிகளை இரட்டிப்பான நிலையிலும், அவ்வாறு இரட்டிப்பாகாத நிலையிலும் காணலாம். இரட்டிப்பாகாத நிலையில் தனி இழையாகவும், இரட்டிப்பான நிலையில் ஒன்றையொன்று ஒத்த, சோடியான இரு பிரதிகள் காணப்படும். இப்பிரதிகள் அரைநிறவுருக்கள் (Chromatids or Sister chromatids) என அழைக்கப்படும். இந்த அரைநிறவுருக்கள் மையப்படி (Centromere) என்னும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைக்கப்பட்டிருக்கும். இது நடுவில் இருக்கையில் நிறப்புரி நான்கு கைகளையும், ஒரு முடிவுக்கு அருகில் இருப்பின் இரு கைகளையும் கொண்டிருக்கும். நீண்ட இழைகள் நெடுங்கை இழைகள் எனவும், குறிகியவை குறுங்கை இழைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
 
==வெளி இணைப்புக்கள்==
[http://www.johnkyrk.com/chromosomestructure.html Chromosome structure]
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
23,839

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1485907" இருந்து மீள்விக்கப்பட்டது