கல்பதுக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
சங்ககாலத்து நினைவுக் கற்கள் பற்றி ஆராய்ந்த கிருஷ்ணமூர்த்தி, அக்காலத்தில் நினைவுக் கற்களின் வழர்ச்சியினை 4 கட்டங்களாகப் பார்க்கலாம் என்கிறார். இவற்றில் முதற்கட்டம் கிமு 8 ஆம் நூற்றாண்டு முதல் கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்றும், இரண்டாம் கட்டம் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி முதலாம் நூற்றாண்டு வரை என்றும், மூன்றாம் கட்டம் கிபி முதல் நூற்றாண்டிலிருந்து கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை என்றும் இதற்குப் பிந்திய காலத்தை நான்காம் கட்டமாகவும் அவர் பிரித்துள்ளார்.<ref>கிருஷ்ணமூர்த்தி, ச., 2004. பக். 34-38</ref> இக்கால கட்டங்களினூடாகப் பல்வேறு வகையான நினைவுச் சின்னங்களுடன் கற்பதுக்கைகளும் வளர்ச்சியடைந்து வந்தன. காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காகப் பிணங்களைக் கற்களால் மூடிய ஒரு நிலையில் இருந்து, சடங்குகளோடு கூடிய நினைவுச் சின்ன அமைப்புமுறை வளர்ச்சியடைந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. நடுகல் எடுப்பது குறித்து, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என்னும் ஆறு நிலைகள் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றன. இங்கே நடுகல் என்பது தற்காலத்தில் நடுகல் என்று புரிந்து கொள்ளப்படுவதை விட, கற்பதுக்கையை உள்ளடக்கிய பிற நினைவுக் கற்களுக்கே பொருந்தும் எனப்படுகிறது.<ref>கிருஷ்ணமூர்த்தி, ச., 2004. பக். 37</ref>
 
==தென்னிந்தியப் கற்பதுக்கைகள்==
தென்னிந்தியாவில் தொல்லியல் ஆய்வுகள் மூலம் பல கற்பதுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இடுதுளைகளுடன் கூடிய கற்பதுக்கைகள், கற்குவையுடன் கூடிய கற்பதுக்கைகள் எனப் பல்வேறு வகைகளில் இவ்வாறான கற்பதுக்கைகள் உள்ளன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கல்பதுக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது