கச்சத்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 43:
 
{{stub}}
இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் இடைய கடுமையான போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள கச்சத்தீவில் மீன்பிடிக்கச் ல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான மீனவர்கள் இறந்துள்ளனர். இந்த நிகழ்வு தற்பாது வரை நடந்து வருகிறது.
இந்தியாவிற்குச் சொந்தமான கச்சத்தீவை மத்திய அரசு கடந்த 1974ல் ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்திருந்தது. ஆனால், தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிக்கலாம் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது யாராலும் மறைக்க முடியாத உண்மையாகும். கச்த்தீவு குறித்து இலங்கை அரடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக மீனவர்கள் தங்குதடையின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் அரக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தன.
1992ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில் கச்த்தீவை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வரவண்டும். அப்போதுதான் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித்தொழிலைச் செய்ய முடியும் என்று கடிதம் எழுதினார். அதற்குப் பதில் எழுதிய பிரதமர் நரசிம்மராவ், கச்சத்தீவு இலங்கையிடம் இருந்தாலும் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும், அங்கு வலைகளைக் காயவைப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் ஒப்பந்தத்தில் பாதுமான ரத்துக்கள் உள்ளது. இருந்தாலும், கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவருவது தொடர்பாக மத்திய அமைச்சரவையில் ஆலோசனை செய்யப்படும் என்று உறுதியளித்தி ருந்தார். இந்தக் கடிதங்கள் இன்னும் தமிழக அரசின் காப்புகளில் இருக்கிறது. இதையெல்லாம் முதலமைச்ர் கருணாநிதி எடுத்துப் பார்க்க வண்டும்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையைப் பறித்த கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பதிலளித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இரு நாடுகளும் முறையாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. இலங்கை நமது நட்பு நாடு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
எஸ்.எம்.கிருஷ்ணாவின் குரல், இந்திய அரசின் நீண்ட காலக்கொள்கை நிலையை வெளிப்படுத்துகிறது என்பது, தமிழர்களின் நலனை விட இலங்கையின் நட்பையே டெல்லி பெரிதாக நினைக்கிறது என்பதும் தமிழர்களுக்கோ அல்லது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கோ தெரியாதது அல்ல.
ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் முறையாக செய்துகொண்ட ஒப்பந்தம் என்று அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளாரே அதுதான் வேடிக்கையாகவுள்ளது.
1974ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திராகாந்திக்கும், இலங்கையின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், கையெழுத்திடப்படும் வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையை வரையறை செய்ய போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிற்குச் சொந்தமான கச்சத்தீவை, இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதி என்று கூறி, இலங்கைக்கு டெல்லி தாரை வார்த்தது.
கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டபோது, அப்போது பேசிய தமிழக உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், இரா.செழியன், பி.கே.மூக்கையாத் தேவர், விஸ்வநாதன் ஆகியோர் கச்சத் தீவு தமிழ்நாட்டிற்குச் சொந்தமானது என்பதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டிப் பேசினர். ஆனால், அதற்கு உரிய பதில் தராமல் அப்பாதைய பிரதமர் இந்திரா காந்தி அரசு தட்டிக் கழித்தது. ஏனென்றால் கச்சத் தீவு நமது நாட்டின் ஒரு பகுதி என்றால், அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் வேறொரு நாட்டிற்குத் தாரை வார்த்திட முடியாது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதைத் தவிர்க்கவே, அதாவது ரகசியமாக வைத்து ஒப்பந்தம் போட்டு இலங்கைக்கு கொடுத்துவிடுவதற்காகவே, கச்சத் தீவு இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்கு உட்பட்டத் தீவு என்று மத்திய அரசு நிலையெடுத்தது.
அதுமட்டுமல்ல, எல்லைக் கோடு வரைவில் கூட ஒரு மோசடி செய்துதான் கச்சத் தீவை இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் கடற்கரைகளில் இருந்து சம தூரத்தில் புள்ளிகளை வைத்து, அந்தப் புள்ளியை இணைத்து கோடு போட்டு எல்லை நிர்ணயம் செய்து கொள்வது என்று ஒப்புக் கொண்டுவிட்டு, கச்சத் தீவை இலங்கையின் கடல் எல்லைக்குள் வருவதற்கு ஏற்றார்போல் கோட்டை இழுத்து போட்டார்கள் என்று இந்திய அரசின் சர்வதேச ஒப்பந்தங்கள் ஆவணக் காப்பக இயக்குனராக இருந்த எஸ்.பி. ஜகோட்டா கூறியுள்ளார். இப்படியெல்லாம் மோசடி செய்து கொடுக்கப்பட்டதுதான் கச்சத் தீவு. 1971ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடைய நடைபெற்ற போரின்போது, தனது விமானத் தளங்களை பாகிஸ்தான் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்று இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடந்த இலங்கை அரசு அனுமதி அளித்தது.
அப்படிப்பட்ட நிலை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, இலங்கையை நட்பு நாடாக்கிக் கொள்ள கச்சத் தீவைக் கொடுத்து இந்த ஒப்பந்தத்தை இந்திரா காந்தி போட்டதாகக் கூறினார்கள். இதுதான் அதற்கான அடிப்படை என்றால், அதே காரணத்தைக் கூறி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? என்று தமிழ்நாட்டின் தலைவர்கள் எழுப்பிய கேள்விக்கு இதுவரை டெல்லியால் பதில் தர முடியவில்லை.
1974ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவை ஒட்டிய கடற்பரப்பில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உள்ளது என்று அன்றைய வெளியுறவு அமைச்சர் சுவரண் சிங் கூறினார். அந்த உரிமையை 1976ம் ஆண்டு இந்திய வெளியுறவுச் செயலாளரும், இலங்கை வெளியுறவுச் செயலாளரும் செய்துகொண்ட கடித பரிமாற்றத்தில் டெல்லி அரசு விட்டுத் தந்துவிட்டது. இதைத்தான் தி.மு.க. உறுப்பினர் பாலுவும், அ.தி.மு.க. உறுப்பினர் தம்பித்துரையும் மக்களவையில் கேள்வியாக எழுப்பி, கச்சத்தீவைக் தானம் கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழக மீனவர்கள் வரலாற்றுக் காலத்திலிருந்து அனுபவித்துவந்த பாரம்பரிய மீன் பிடி உரிமையை அவர்களின் சம்மதமின்றியும், தமிழக அரசின் ஒப்புதலின்றியும் எவ்வாறு விட்டுக் கொடுத்தீர்கள் என்பதற்கு கிருஷ்ணாவிடம் பதில் இல்லை. ஆனால் முறையாக செய்துகொண்ட ஒப்பந்தம்" என்று கூறுகிறார்
.
இலங்கை நட்பு நாடென்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றும் அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார். எப்படி அது நட்பு நாடென்று விளக்கவில்லை.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லைப் பிரச்சனையில் இருந்து பல பிரச்சனைகள் உள்ளன. இன்றளவும் சீனாவுடனான உறவு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அந்த சீனாவுடன் இலங்கை அரசு நட்பு பாராட்டி வருகிறது. இந்தியப் பெருங்கடலில் தனது கட்டுப்பாட்டைக் கொண்டுவர நீண்ட காலம் முயற்சித்த சீன நாட்டிற்கு அம்மன்தோட்டத்தில் துறைமுகம் வசதியையும் அளித்து, அதனை மேம்படுத்தி பயன்படுத்திக் கொள்ள அனுமதியும் அளித்துள்ளது இலங்கை அரசு. இது இந்தியாவிற்கு ஏற்புடையதா என்ன? இப்படி ஒரு ஒப்பந்தம் நடந்தவுடன் இந்தியாவின் கடற்படை எந்த அளவிற்கு பதற்றப்பட்டது என்பது தெரியாதா? போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கொழும்பு சென்ற அன்றைய வெளியுறவு அமைச்சரிடம், வடக்கின் மேம்பாட்டுப் பணிகள் முழுவதும் இந்தியாவிற்குத்தான் வழங்கப்படும் என்று மகிந்திர ராஜபக்ச உறுதியளித்தார். இப்போது நடப்பது என்ன? அங்குள்ள உள்கட்டமைப்புப் பணிகள் பல சீன அரசு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி. முல்லைத் தீவு கடற்பகுதில் மீன் பிடி உரிமை சீன நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு பாதுகாப்பா? அச்சுறுத்தலா? யாரை ஏமாற்றுகிறது டெல்லி அரசு?
இந்தியாவிற்குப் பாகிஸ்தான் பகை நாடு, ஆனால் இலங்கைக்கு நட்பு நாடு. இதையும் டெல்லி ஏற்கிறதா? அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது இலங்கைக்கு? இன்றைக்கு இந்தியாவிடம் உள்ள அதி நவீன ஏவுகணைகள் இலங்கைப் பகுதியில் இருந்து எழும் அச்சுறுத்தலை நொடியில் சிதைக்க வல்லனவாயிற்றே? டீகோ கார்சியா வரை தாக்கும் திறன் கொண்ட இந்தியாவிற்கு இலங்கை அச்சுறுத்தலாகிவிடுமா? எல்லாம் ஏமாற்றுச் சொற்கள். இந்தியாவின் பெரு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்து தங்கள் வணிக நலனைப் பெருக்கிக் கொள்ள ராஜபக்ச அரசு அனுமதிக்கிறது. அதை வைத்து அந்நாட்டை இந்தியாவின் நட்பு நாடு என்று அமைச்ர் எம்.எஸ். கிருஷ்ணா கூறுகிறாரோ? அப்படியென்றால் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.
"https://ta.wikipedia.org/wiki/கச்சத்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது