சீர்காழி இரா. அரங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
 
==தொழில்==
கல்வியை முடித்துக்கொண்ட அரங்கநாதன், [[மங்களூர்]], [[கோயம்புத்தூர்]] ஆகிய இடங்களில் இருந்த அரசாங்கப் பள்ளிகளிலும், பின்னர் மதராசு பிரெசிடென்சி கல்லூரியிலும் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்பித்து வந்தார். ஆசிரியத் தொழிலில் அவருக்கு விருப்பம் இருந்தது. ஆனாலும், வருமானம் போதியதாக இருக்கவில்லை. அதனால்,

===நூலகர்===
தனது வருமானத்தை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் மதராசுப் பல்கலைக்கழகத்தில், நல்ல சம்பளத்துடன் கூடிய நூலகர் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். 1924 சனவரியில் [[மதராசுப் பல்கலைக்கழகம்|மதராசுப் பல்கலைக்கழகத்தில்]] நூலகராக நியமனம் பெற்றார்கிடைத்தது. இவருக்கு நூலகருக்கான கல்வித் தகைமையோ, அனுபவமோ இருக்கவில்லை. அத்துடன், பள்ளிகளில் காணப்பட்ட கலகலப்பான சூழலுக்கு எதிராக நூலகத்தின் அமைதியான சூழல் அவருக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் ஆசிரியத் தொழிலுக்கே செல்ல முடிவு செய்தார். ஆனாலும், பிரெசிடென்சிக் கல்லூரியின் அதிபரின் ஆலோசனையின்படி, நூலகர் பயிற்சிக்காக இலண்டனுக்குச் சென்று திரும்பும்வரை அந்த முடிவை நிறுத்தி வைத்தார்.
 
9 மாதங்கள் பயிற்சிக்காக இலண்டனுக்குச் சென்ற அரங்கநாதன் 1925 ஆம் ஆண்டில் நாடு திரும்பினார். அக்காலத்தில் மதராசுப் பல்கலைக்கழக நூலகம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சரியான ஒழுங்கமைப்போ போதிய ஊழியர்களோ இருக்கவில்லை. நூலகத்தைப் பயன்படுத்துவோரும் மிகவும் குறைவாகவே இருந்தனர். இந்த நிலையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்ட அரங்கநாதன், நூலகத்தின் குறைபாடுகளை நீக்குவதற்காகப் பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதுடன், அங்கிருந்த நூல்களை வகைப்படுத்தி, விபரப் பட்டியல்களையும் தயாரித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சீர்காழி_இரா._அரங்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது