அண்ணீரகச் சுரப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள் இணைப்புக்கள்
No edit summary
வரிசை 21:
 
'''அண்ணீரகச் சுரப்பி''' (தமிழக வழக்கு: அட்ரீனல் சுரப்பி அல்லது அதிரீனல் சுரப்பி) என்பது, [[சிறுநீரகம்|சிறுநீரகத்தின்]] மேல் இருக்கும் [[முக்கோணம்|முக்கோண]] வடிவான [[அகச்சுரப்பி]] ஆகும். இது [[நாளமில்லாச் சுரப்பி]] ஆகும். இவை ஒவ்வொரு சிறுநீரகத்துக்கும் மேற்புறத்தில் ஒன்று வீதம் வலது, இடமாக இருபுறமும் அமைந்திருக்கும். இவை ஒவ்வொன்றும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளன. உட்புறப்பகுதிக்கு அகணி என்று பெயர். வெளிப்புறப் பகுதிக்கு புறணி என்பது பெயர். இச்சுரப்பியின் எடை 12 கிராம்களாகும். அட்ரீனல் அகணியிலிருந்து அட்ரீனலின் மற்றும் நார் அட்ரீனலின் என்ற இருவகை [[இயக்குநீர்]]கள் சுரக்கின்றன. புறணியிலிருந்து 'ஸ்டீராய்ட்ஸ்' (Steroids) என்னும் இயக்குநீர்கள் சுரக்கின்றன. இவை நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இவற்றின் முக்கியப் பணி [[இழையம்|இழையங்களைத்]] தூண்டுவதும், உடம்பின் [[வளர்சிதைமாற்றம்|வளர்ச்சிதைமாற்றத்தை]]ச் சீராக நடைபெறச் செய்வதும் ஆகும். இச்சுரப்பியிலிருந்து [[ஈத்திரோசன்]], [[Progesterone]] இயக்குநீர்களும் மிகச் சிறிய அளவில் சுரக்கின்றன. [[கார்ட்டிசால்]], [[எபிநெப்ரின்]] ஆகியவற்றை உள்ளடக்கிய [[கார்ட்டிகோஸ்டெரோய்டு]]கள், [[கட்டெகோலமைன்]]கள் என்பவற்றை உற்பத்தி செய்வதன்மூலம், நெருக்கடிகளுக்கான எதிர்வினைகளை நெறிப்படுத்துவதே இதன் முக்கிய பொறுப்பு ஆகும்.
 
{{உடற்கூறியல்}}
 
[[பகுப்பு:உடல் உறுப்புக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அண்ணீரகச்_சுரப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது