"சௌராட்டிர நாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,313 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(சோமநாதபுரம் (குசராத்து) கட்டுரையில் இத்தகவல்கள் உள்ளன)
== சௌராஷ்ட்ர தேசத்தை ஆண்ட மன்னர்கள் ==
சௌராட்டிர தேசத்தை, மகத நாட்டு, நந்த குல, மெளரிய குல, குப்த குல, சுங்க குல, சக குல மன்னர்கள், யாதவ குல, கூர்சர பிரதிகர குல, மைத்திரக குல, சாளுக்கிய சோலாங்கி அரச குலம் மற்றும் வகேலா குல மன்னர்கள், தில்லி [[சுல்தான்]]களும், [[மொகலாயர்]]களும், இராச புத்திர வம்சத்தார்களும், சாளுக்கிய மன்னர்கள், சாதவாகனர்கள் மற்றும் [[மராத்தியர்|மராத்திய]] மன்னர்களும் ஆண்டனர்.
 
 
* கி.மு. 322ல் [[சந்திரகுப்த மௌரியர்]] ஆட்சியின் கீழ் சௌராஷ்ட்ர தேசம் மேற்கிந்தியப் பகுதியில் அடங்கி இருந்த்து. பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் மைத்துனரான புஷ்யமித்ர சுங்கன் சௌராஷ்ட்ர தேசத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். கி.மு. 155 வரை சுங்க வம்சம் சௌராஷ்ட்ர தேசத்தை ஆண்டனர்.
 
 
* பின்னர் ‘ மேனாண்டர் ‘ (Medander) என்ற அன்னியர்கள் சௌராஷ்ட்ர தேசத்தை கைப்பற்றி சில காலம் ஆண்டனர்.
 
 
* கி.மு. 72ல் சக வமிசத்தவர்கள் சௌராஷ்ட்ர தேசத்தை வென்று, சக அரச பரம்பரையை தோற்றுவித்தனர். இந்நாட்டை புமகன் முதல் சுவாமி ருத்ர சிங்கன் ஈறாக 26 சக வம்ச அரசர்கள் ஆண்டனர்.
 
 
* பாரசீகர்கள் கி.பி.35 முதல் 405 வரை சௌராஷ்ட்டிர தேசத்தின் ஒரு பகுதியை ஆண்டனர்.
 
 
* கி.பி. 126ல் ஆந்திரா நாட்டு நபான அரசன் சௌராஷ்ட்ரா தேசத்தை கைப்பற்றி ஆண்டனர்.
 
 
* கி.பி. 145ல் ருத்ரதாமன் என்ற சௌராஷ்ட்ர தேசத்து மன்னன், ஆந்திர அரசனை வென்று, கி.பி. 390 வரை சௌராஷ்ட்ர தேசத்தை சுதந்திரமாக ஆண்டான்.
 
 
* மகத நாட்டு மாமன்னர் இரண்டாவது [[சந்திர குப்த மௌரியர்]] என்ற ([[விக்கிரமாதித்தன் கதைகளின் கட்டமைப்பு|விக்கிரமாதித்தன்]]), சௌராஷ்ட்ர தேசத்தை வென்று, தனது மகனான [[குமார குப்தரை]] சௌராஷ்ட்ர தேசத்தின் ஆளுனராக நியமித்தார்.
 
 
* கி.பி. 413ல் ’குமார குப்தர்’ மகத நாட்டின் அரியணை ஏறி சௌராஷ்ட்ர தேசத்தை ஆண்டார். அவரது மறைவுக்குப் பின் ’ஸ்கந்த குப்தர்’ ஆட்சிக்காலத்தில், ’பர்ணதத்தன்’ என்பவர் சௌராஷ்ட்ர தேசத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின் ’சக்ரபலிதன்’ சௌராஷ்ட்ரத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார்.
 
 
* கி.பி. 470க்குப்பின் ’மைத்ரக’ குடியைச் சேர்ந்த (Maitraka Clan) ’பட்டாரகன்’ என்னும் படைத்தலைவர் சௌராஷ்ட்ர நாட்டை வென்று, பட்டாரகன் முதல் சிலாதித்யன் முடிய இருபது அரசர்கள், 300 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இந்த அரச வம்சத்தை வல்லபிபுரம் வம்சம் என்பர். கி.பி. 766 வரை நீடித்த வலபீபுர வம்சம் முகமதியர்களின் படையெடுப்பால் அழிந்தது. சீன பௌத்த துறவியான [[யுவான் சுவாங்]] என்பவர், வலபீபுரத்தை பற்றி, [[நாலந்தா பல்கலைக்கழகம்|நாலந்த பல்கலைக் கழகத்திற்கு]] நிகரான ’வலபீபுரம்’ திகழ்ந்தாக தமது குறிப்புகளில் குறித்துளார்.
 
 
* கி.பி. முதல் நூற்றாண்டு முதல் சௌராஷ்ட்ர தேசத்தை மாளவ மற்றும் மராட்டிய ’சோலங்கி’, கொய்க்வாட்’ மற்றும் போன்சுலே அரசப்பரம்பரையினர், தில்லி சுல்தான்கள் சௌராஷ்ட்ரத்தின் மீது படையெடுத்து கைப்பற்றும் வரை ஆண்டனர்.
 
 
* வெள்ளையர்கள் இந்தியாவை முழுமையாக கைப்பற்றும் வரை, சௌராஷ்ட்ர தேசம், [[தில்லி சுல்தானகம்|டெல்லி சுல்தான்களின்]] ஆட்சியிலும், பின்னர் [[மொகலாயர்]]கள்ஆட்சிக்குட்பட்டும் இருந்தது.
 
 
* ஆங்கிலேயர்கள் காலத்தில், ஆங்கிலேய அரசுக்கு கப்பம் கட்டும் 122 இந்து, இசுலாமிய பெருநில மன்னர்களும், குறுநிலமன்னர்களும் மற்றும் ஜமீந்தார்களும் பெரும்பாலான சௌராஷ்ட்டிர தேசத்தின் பகுதிகளை, சமஸ்தானங்கள் என்ற பெயரில் ஆண்டனர். அவைகளில் குறிப்பிடத்தக்க சமஸ்தானங்கள், [[பரோடா]], [[ஜினாகாட்]], [[பவநகர்]], [[போர்பந்தர்]], [[ராஜ்கோட்]], [[ஜாம்நகர்]], கட்ச், காம்பே, சோட்டா உதய்பூர், [[மோர்வி]], நவநகர், பாலன்பூர் ஆகும்.
 
* [[மார்கோ போலோ]] என்ற இத்தாலிய வணிகர், சௌராஷ்ட்டிர பகுதியில் வணிகம் செய்கையில், அப்பகுதியில் இருந்த இந்து [[யோகி]]கள் 100 முதல் 125 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் என்று தனது பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
* [[கசினி முகமது]] உடன் [[இந்தியா]] வந்த [[அரபு]] வரலாற்று ஆசிரியரும் கவியுமான ’[[அல்பரூணி]]’ என்பவரும், பாரசீக அறிஞரான [[இபின் அசிர்]] என்பவரும், சௌராஷ்ட்டிர தேசத்தில் உள்ள [[சோமநாதபுரம் (குசராத்து)]] கோயிலைப் பற்றியும், அதன் செல்வச் சிறப்புகள் பற்றியும் குறித்துள்ளார்.
 
 
* [[யுவான் சுவாங்]] என்ற சீன பெளத்த துறவி சௌராஷ்ட்டிர தேசத்தில் இருந்த [[வலபீபுர கல்விச்சாலையை]] [[நாலந்தா பல்கலைக்கழகம்|நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு]]நிகராக உள்ளது என்று தமது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
* மேலும் சௌராட்டிர தேசத்தை ஆண்ட மன்னர்கள் சிலர், வலிமையான ஆட்களை [[ஆப்பிரிக்கா]]விலிருந்து அழைத்து வந்து தங்கள் மெய்க்காவல் படையில் சேர்த்தார்கள். [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கர்களின்]] குடியிருப்புகள் சௌராஷ்ட்ர தேசத்தில் பார்த்தாக வரலாற்று அறிஞர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர்.
 
 
==இந்திய விடுதலைக்குப் பின் சௌராஷ்ட்ர தேசம்==
 
==சௌராஷ்ட்டிர தேசத்தில் [[பார்சி மக்கள்]]==
 
[[பாரசீகம்|பாரசீகத்தை]] கி.பி. 651ல் முழுவதுமாக வெற்றி கொண்ட [[கலிபா]] உமர் தலைமையிலான [[அரபு]] இசுலாமியர்கள், அங்கு வாழ்ந்த ஜோரோஸ்ட்ரீய (Zorostrianism) மதத்தை பின்பற்றும் மக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர். பலர் கட்டாய மதமாற்றத்திற்கு அஞ்சி, பாரசீகத்தை விட்டு வெளியேறி [[இந்தியா]]வில், [[சிந்து]] பகுதியிலும், சௌராஷ்ட்ர தேசத்தின் [[குசராத்து| குசராத்து கடற்கரை பகுதிகளில்]] 775ல் அடைக்கலம் அடைந்தனர். இவர்களைத்தான் [[பார்சி மக்கள்]] என்பர். பின்னர் இவர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சூரத், பம்பாய் போன்ற பகுதிகளில் குடியேறி தொழில் தொடங்கினர்.
 
==புகழ்பெற்ற சில சௌராஷ்ட்ர தேசத்தவர்கள்==
* [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணன்]], [[துவாரகை]]
* [[பலராமர்]], [[துவாரகை]]
* [[குசேலர்]] என்ற சுதாமர் (கண்ணனின் குருகுல நண்பர்), [[போர்பந்தர்]]
* [[உத்தவர்]], கிருஷ்ணரின் பக்தர் மற்றும் அமைச்சர்.
* நேமிநாதர், சமணர்களின் 22வது சமண சமய தீர்த்தாங்கரர்
* நரசிங் மேத்தா, சாது மற்றும் கவி
* [[தயானந்த சரசுவதி]], [[ஆரிய சமாஜம்|ஆரிய சமாஜத்தை]] நிறுவியவர்
* ஜலராம் பாபா, சாது
* ஸ்ரீமத் ராஜேந்திரநாத், சமண சமய தத்துவ ஆசிரியர்
* முராரி பாபு, சாது, ஆன்மீக குரு, சிந்தனையாளர்
* [[காந்தியடிகள்|மோகன்தாஸ் கரம் சந்த காந்தி]], இந்திய தேசப்பிதா
* [[முகமது அலி ஜின்னா]], [[பாகிஸ்தான்]] நாட்டு முதல் குடியரசுத் தலைவர்
* யு. என். தேபர்
* வீர் சந்த் காந்தி, சுதந்திர போராட்டத் தியாகி
* பாபா பாலக் நாத், சௌரசி சித்தர்
* [[திருபாய் அம்பானி]], பெருந்தொழில் அதிபர்
* [[சாம் பிட்ரோடா]] (Sam Pitrada), அறிவியல் அறிஞர்
* துளசி தந்திரி (Tulsi Tanri (Chairman and Managing Director, Suzlon Engery)
* [[நரேந்திர மோடி]], [[ராஜ்கோட்]] , [[குசராத்து]] மாநில முதல்வர்
 
==தற்கால சௌராட்டிர தேசம்==
* [[சோமநாதபுரம் (குசராத்து)]]
* [[சௌராட்டிரர்]]
 
 
 
[[பகுப்பு:சௌராட்டிரர்]]
304

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1490437" இருந்து மீள்விக்கப்பட்டது