கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
1618 முதல் 1648 வரை கத்தோலிக்க ஹாப்ஸ்பர்க் குடி செருமானிய சீர்திருத்த வாதிகளுக்கெதிராக போரில் ஈடுபட்டது. இக்குடிக்கு [[டென்மார்க்]], [[சுவீடன்]] மற்றும் [[பிரான்சு]] ஆதரவளித்தது. [[எசுப்பானியா]], [[ஆசுதிரியா]], [[செருமனி]]யின் பெரும்பகுதி மற்றும் [[இத்தாலி]]யில் ஆட்சிசெய்த இக்குடி, கத்தோலிக்கத்தின் பெரும் ஆதரவு ஆகும். பிரான்சு இவர்களுக்கு அளித்த ஆதரவை சிறிது சிறிதாக நிறுத்தியபோதும், இவர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே போராடியபோதும் சீர்திருத்த இயக்கத்தின் முடிவு நெறுங்கிவிட்டதாக பலர் நம்பினர்.{{sfn|Simon|1966|pp=120-121}} இதுவே முதன் முதலாக அதன் மகளின் நம்பிக்கைக்கு எதிராக பிரான்சு அரசு செயல்பட்டது.
 
[[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்]] முப்பதாண்டுப் போரினை முடிவுக்கு கொணர்ந்தது. இவ்வொப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
* ஒவ்வொரு அரசும் தத்தம் நாட்டின் சமயத்தினை முடிவு செய்யவும்<ref name="westphal">[http://www.yale.edu/lawweb/avalon/westphal.htm The Avalon Project: Treaty of Westphalia]</ref>
* தங்களின் சமயம் நாட்டின் சமயத்தோடு ஒத்திராதவர்கள் அந்த நாட்டில் எவ்வகை இடையூறும் இன்றி வாழவும் இது வழிவகுத்தது<ref name="westphal" />
 
இவ்வியக்கதின் தாக்கம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்திலும்]] [[பகுத்தறிவியம்|பகுத்தறிவியத்திலும்]] காணப்பட்டது. இது சமுதாயத்தில் சமயத்தின் பங்கினை பின்னுக்குத்தள்ளியது.
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவச்_சீர்திருத்த_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது