எக்சு-கதிர்க் குழாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 21:
இவற்றை இணைத்து,
::<math> I \propto \frac{Z mA s}{d^2}</math> என்று எழுதலாம்
குழாயிலுள்ள எதிர்மின் முனை ,கட்டி '''நிக்கலால்''' ஆனது.இந்த நிக்கல் கட்டியில் '''குவிக்கும்''' '''கோப்பையும்'''(Focusing cup) உள்ளது.இந்த கோப்பையில் வெப்ப எலக்ட்ரான்களை உமிழும் டங்சுடன் இழை உள்ளது. இந்த இழையில் மின்சாரம் பாயும் போது ,இழை வெப்பமுற்று ,எலக்ட்ரான்களை உமிழ்கின்றன.இவையே குழல் மின்னோட்டத்திற்குக் காரணமாகும்.கோப்பை சிறிய எதிர் மின் அழுத்தத்தில் இருப்பது எலக்ரான்களைக் குவிக்க உதவுகிறது.
டங்சுடன் தூயநிலையில் கடைப்பது,இதன் உருகு வெப்ப நிலை அதிகமாக இருப்பது, எளிதில் ஆவியாகாதத் தன்மை,மிகமெல்லிய கம்பியாக மாற்றமுடிவது,டங்சுடனே இழையைத் தாங்கவும் செய்வது முதலிய பண்புகளாலேயே அது இழையாகப் பயன்படக் காரணம்
'''நேர்மின் முனை''' எதிர்மின் முனைக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது. நேர்மின் முனை கட்டிச் செம்பால் ஆனது. எலக்ட்ரான் மோதுமிடம் மெல்லிய 1*1*0.2 செ.மீ. கனமுள்ளள டங்சுடன் தகட்டால் ஆனது.இந்த தகடு செம்புக் கட்டியில்நன்றாக இணைந்து இருக்கிறது.இதுவே இலக்காகும்.நேர்முனையில் செம்பு,டங்சுடன் முதலிய தனிமங்கள் இருப்பதால் இது '''கூட்டு நேர்மின்''' '''முனை''' (Compound anode ) எனப்படுகிறது..
|