கிறித்தவத் தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
ஆதிகிறித்தவர்கள் [[இயேசு கிறித்து]] போலவே [[இரண்டாம் கோவில் (யூதம்)|எருசலேம் கோவிலில்]] வழிபாடும், தொழுகைக்கூடங்களில் இறைவேண்டலும் செய்துவந்தனர். கோவிலில் வழிபாட்டில் [[யாவே]] கடவுளுக்கு பலிசெலுத்துவதும், பாவப்பரிகாரம் செய்வதும் வழக்கமானதாகும். [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] [[இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்]] முதலாக பல இடங்களில் இயேசு கோவிலுக்கு செல்வதாக அமைந்துள்ளது. இவ்வலயமானது உரோமையர்களால் இடிக்கப்பட்டபின்னர் வீடுகளிலும் கல்லரைகளிலும் கிறித்தவர்கள் வழிபாடு நடத்தினர். உரோமையர்கள் கிறித்தவர்களுக்கெதிராக கிளப்பிய வேதகலாபனை இதற்கு மிகமுக்கிய காரணியாகும். உரோமை பேரரசால் கிறித்தவம் அங்கிகரிக்கப்பட்ட பின்பு, பேகன் கோயில்கள் பல கிறித்தவ ஆலயங்களாக்கப்பட்டன. கி.பி 235 முதல் [[திருமுழுக்கு]] வழங்க தனி இடங்கள் தேவாலயங்களில் அமைக்கப்பட்டன.
 
மத்தியக்காலத்தில் மிகப்பெரும் கோவில்கள் கட்டுவது அரசனுடைய வெற்றியையும் அவனின் செல்வத்தையும் குறிப்பதாக இருந்தது. பல்வேறுகாலக்கட்டதின் சூழ்நிலைக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்ப கோவில்களின் வடிவமைப்பு மாற்றமடைந்துள்ளது. துவக்க காலத்தில் சிலுவை வடிவிலும், கிழக்கை நோக்கியுமே கோவில்கள் அமைந்தன. இயேசுவின் இரண்டாம் வருகையின்போது அவர் கிழக்கில் வருவார் என்னும் நம்பிக்கைக்காகவே இது நிகழ்ந்தது. கோவில்கள் மிக அழகானதாகவும், ஒரு ஊரின் மிக உயரியக்கட்டிடமாகவும் இருந்து வந்தது. அரசனின் மாளிகை கூட கோவிஐ விட தாழ்ந்தே இருக்கும். அரசர்களும் மக்கள் பலரும் கோவில்களைக்கட்ட நற்கருணையின்மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையே முக்கிய காரணியாக பார்கப்படுகின்றது. [[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|கிறித்தவச் சீர்திருத்த இயக்த்திற்கு]] பின் கோவில்கள் விசுவாசிகள் கூடும் இடமாக மட்டும் பார்கப்பட்டதால், அதன் கலை மற்றும் அழகு தேவையற்றதாக அமைந்தது.
 
== தேவாலய வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_தேவாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது