சால்வதோர் தாலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 121 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[படிமம்:Salvador Dalí 1939.jpg|thumb|200px|சல்வடோர் டாலி]]
'''சல்வடோர் டாலி''' (''Salvador Dali'', [[மே 11]], [[1904]] - [[ஜனவரி 23]], [[1989]]) [[ஸ்பெயின்]] நாட்டைச் சேர்ந்த [[கட்டலன் மக்கள்|கட்டலன்]] இனத்தவரான, [[அடிமன வெளிப்பாட்டியம்|அடிமன வெளிப்பாட்டிய]] ஓவியர் ஆவார். இவரது முழுப்பெயர் '''சல்வடோர் டொமிங்கோ பிலிப்பே ஜசிண்டோ டொமெனிக்''' என்பதாகும். ஸ்பெயினின் [[கட்டலோனியா]]வில் உள்ள [[பிக்கரெஸ்]] (Figueres) என்னுமிடத்தில் பிறந்த இவர் ஒரு திறமையான படவரைவாளர். இவரது கவர்ச்சியான அடிமன வெளிப்பாட்டிய ஆக்கங்கள் பெரிதும் புகழ் பெற்றவை. சல்வடோர் டாலியின் ஓவியத் திறன் [[மறுமலர்ச்சி]] ஓவியர்களின் செல்வாக்கினால் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. மிகவும் அறியப்பட்ட இவரது ஓவியமான [[நீங்கா நினைவு]] (''The Persistence of Memory'') 1931 ஆம் ஆண்டில் தீட்டி முடிக்கப்பட்டது. இவருக்குத் [[திரைப்படம்]], [[சிற்பம்]], [[நிழற்படக்கலை]] போன்ற கலைகளிலும் ஈடுபாடு இருந்தது. [[வால்ட் டிஸ்னி]]யுடன் சேர்ந்து [[அக்கடமி விருது]]க்கு முன்மொழியப்பட்ட ''டெஸ்டினோ'' எனப்படும் குறுங் கார்ட்டூன் படம் ஒன்றைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார் எனினும் இது முற்றுப்பெறும் முன்னரே இவர் இறந்து விட்டார். இதன்பின் இப்படம் முழுமையாக்கப்பட்டு 2003 இல் வெளியிடப்பட்டது.
 
==திரைத் துறை==
இவரது சிறு வயது முதலே திரைப்படங்கள் மீது தீரக் காதல் இருந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படம் பார்ப்பதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார். அந்த ஈடுபாடு பின்னாட்களிள் இவர் திரைத்துறையில் நுழையக் காரணமாய் இருந்தது.
 
[[லூயி புனுவல்|லூயி புனுவலுடன்]] இணைந்து ஆந்தலூசிய நாய் (Un Chien Andalou) என்று பெயரிடப்பட்ட 17 நிமிட நீளம் கொண்ட ஒரு குறும்படத்தை உருவாக்கினார். இந்தக் குறும்படத்தின் துவக்கக் காட்சியில், ஒரு சவரக் கத்தியை நன்கு கூர் தீட்டி, ஒரு பெண்ணின் கருவிழியின் மத்தியப் பகுதி கிழிப்பதாகவும், விழிக்கோளம் சிதைந்து சதைகள் தொங்குவதாகவும், அந்தக் காட்சிகள் அப்படியே நிலவை, இருட்டு இரன்டாக கிழிப்பதாகவும் தொகுக்கப்பட்டு படமாக்கப் பட்டு [[அடிமன வெளிப்பாட்டியம்|அடிமன வெளிப்பாட்டியத்]] தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் காட்சி அமைப்பு இன்றும் வெகுவாக பேசப்படுகிறது. லூயி புனுவலுடன் சேர்ந்து மேலும் சில திரைப்படங்களில் பணி புரிந்தார்.
 
அதேபோல,[[ஆல்பிரட் ஹிட்ச்காக்|ஆல்பிரட் ஹிட்ச்காக்குடனும்]] இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஹிட்ச்காக்கினுடைய ஸ்பெல்பவுண்ட் என்ற திரைப்படத்தின் கனவுக் காட்சிகளை வடிவமைத்தவர் டாலி தான்.
 
[[வால்ட் டிஸ்னி]]யுடன் சேர்ந்து [[அக்கடமி விருது]]க்கு முன்மொழியப்பட்ட ''டெஸ்டினோ'' எனப்படும் குறுங் கார்ட்டூன் படம் ஒன்றைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார் எனினும் இது முற்றுப்பெறும் முன்னரே இவர் இறந்து விட்டார். இதன்பின் இப்படம் முழுமையாக்கப்பட்டு 2003 இல் வெளியிடப்பட்டது.
 
==டாலியின் மீசை==
[[Image:Salvador Dali NYWTS.jpg|thumb|right|டாலியின் மீசை]]
சல்வடார் டாலியின் மீசை உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது. [[ஸ்பெயின்]] நாட்டைச் சேர்ந்த 17ஆம் நூற்றாண்டு ஓவியர் தியாகோ வெலாஸ்க்யூசின் மீசை இவருடைய மீசைக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது. டாலியின் மீசை [[அடிமன வெளிப்பாட்டியம்|அடிமன வெளிப்பாட்டியத்தின்]] ஒரு குறியீடாகவே திகழ்கிறது. தமிழ்த் திரைப்படம் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியின் மீசை வடிவமைப்பு இவருடைய மீசையை ஒத்ததே.
 
==சல்வடோர் டாலியின் சில படைப்புகள்==
அடிமன வெளிப்பாட்டியப் பாணியில் கிறித்தவக் கருத்துகளைக் கலையாக்கி சல்வடோர் டாலி படைத்தவை சில:
"https://ta.wikipedia.org/wiki/சால்வதோர்_தாலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது