நூறாண்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
==இப்போரின் முக்கியத்துவம்==
 
நூறாண்டுப் போர் விரைவான இராணுவ முறைகளின் வளர்ச்சி காலமாக இருந்தது. ஆயுத பயன்பாடு, உத்திகள், இராணுவ கட்டமைப்பு மற்றும் போர் குறித்த சமூக நோக்கம் ஆகியவை அனைத்தும் இக்காலத்தில் மக்களிடையே பெருமாற்றம் கண்டது. இதற்கு ஓரளவுக்கு தொழில்நுட்ப முன்னேற்றமும், ஓரளவுக்கு போரினால் கற்ற பாடமும், ஓரளவுக்கு போருக்காகும் செலவுகளும் காரணமாயின. நூறாண்டு போருக்கு முன், அதிக குதிரைப்படை உடைய நாடு இராணுவ சக்திவாய்ந்ததாகக் கருதப்பட்டது, ஆனால் இப்போரின் இறுதியில், இந்த நம்பிக்கை மாற்றப்பட்டது. குதிரைப்படையின் பயன்பாடு துப்பாக்கி மற்றும், நீண்ட தூரம் பாயும் ஆயுதங்கள் மூலம் தேவையற்றவை ஆயின. இப்போர்களின் போது மூன்றான் எட்வர்டு, தனது குதிரைப்படையினை வழிபோக்கிற்காகவும் துரத்திச்செல்லவும் மட்டுமே பயன்படுத்த தொடங்கினார்.<ref name=powicke189>{{harvnb|Powicke|1962|p=189}}</ref> இப்போர்களின் இருதியின் அதிகமாக கவசம் அணிந்த போர்வீரர்களின் தேவை இல்லாமல் போனது.<ref name="RolandPreston1991">{{harvnb|Preston|Wise|Werner|1991|p=84}}</ref>
 
இப்போரினால் பிரான்சு தேசம் மிகவும் சேதமடந்தாலும், இது பிரெஞ்சுக்கரர்களிடையே தேசிய உணர்வினை தூண்ட காரணமாயிருந்தது. நிலப்பிரபுத்துவ முடியாட்சியாக இருந்த பிரான்சை மக்களாட்சிக்கு கொண்டுவர இவை பெரிதும் உதவின. இது ஆங்கில மற்றும் பிரஞ்சு அரசர்களின் மேதலாக மட்டும் இல்லாமல், ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்கரர்களிடையே இடையே இருக்கும் மோதலாக மாறியது. ஒருவர் மற்றவரின் மொழியினை அழிக்க முற்பட்டுள்ளனர் என்னும் வதந்தி பரவிதால், தேசிய உணர்வும் மொழிப்பற்றும் மக்களிடையே வெளிகொணரப்பட்டது. ஆட்சியாளர்களின் மொழியாக விளங்கிய பிரஞ்சு மொழி இங்கிலாந்தில் வீழ்ச்சியடைய இது காரணமானது.<ref name=holmes61>{{harvnb|Holmes|Urban|Schutz|1948|p=61}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நூறாண்டுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது