ஜெஹோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

20,669 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொடர்ச்சி
சி (தொடர்ச்சி)
[[File:Authorized King James Version.png|thumb|சேம்சு அரசன் விவிலிய மொழிபெயர்ப்பில் "Jehovah" என்னும் சொல் விடுதலைப் பயணம் நூல்6:3இல் வருவது காட்டப்படுகிறது. (ஆண்டு: 1611)]]
 
'''''ஜெஹோவா''''' {{IPAc-en|dʒ|ɨ|ˈ|h|oʊ|v|ə}} (அல்லது) '''''யாவே''''' என்பது கடவுளைக் குறிக்க எபிரேய விவிலியத்தில் பயன்படுத்தப்படுகின்ற சொல் ஆகும். ஆயினும் அதை எவ்வாறு ஒலிப்பது என்பது குறித்து சர்ச்சை நிலவுகிறது.
 
'''ஜெஹோவா''' என்னும் பெயர்வடிவம் எபிரேய மூலச் சொல்லான {{hebrew|יהוה}} (YHWH) என்னும் "நாலெழுத்து" வடிவப் பெயரின் (Tetragrammaton) திபேரிய ஒலிப்பின் ({{hebrew|יְהֹוָה}}) இலத்தீன் உருமாற்றுச் சொல் ஆகும். <ref>Gérard Gertoux, [http://www.lifespurpose.net/divinename/NameofGod1.htm THE NAME OF GOD YeHoWaH. ITS STORY] - Retrieved 2 July 2012.</ref><ref>[http://www.bible-researcher.com/nasb-preface.html Preface to the New American Standard Bible]</ref>
ஒருசில அறிஞர் கருத்துப்படி '''ஜெஹோவா''' என்னும் ஒலிப்பு முறை கி.பி. 5ஆம் நூற்றாண்டிலேயே தோன்றியது. '''ஜெஹோவா/யெஹோவா''' என்னும் வடிவமும் '''யாவே''' என்னும் வடிவமும் அக்காலத்திலிருந்தே உள்ளன.<ref name=Kotansky>(Roy Kotansky, Jeffrey Spier, "The 'Horned Hunter' on a Lost Gnostic Gem", ''The Harvard Theological Review'', Vol. 88, No. 3 (Jul., 1995), p. 318.)</ref><ref name="This pp. 40, 41">யெஹோவா என்னும் ஒலிமுறை இருந்ததற்கு விவிலியத்தின் கிரேக்க மற்றும் அரமேய மொழிபெயர்ப்புகளும் [[சாக்கடல் சுவடிகள் (விவிலியம்)|சாக்கடல் சுவடிகளும்]] திருத்தந்தையர் சொற்பயன்பாடும் ஆதாரமாக உள்ளன என்பர்.(George Wesley Buchanan, "The Tower of Siloam", ''The Expository Times'' 2003; 115: 37; pp. 40, 41)</ref>
 
யெஹோவா என்னும் ஒலிப்புமுறை இருந்தாலும் அந்த ஒலிப்பு கி.மு. 3-2 நூற்றாண்டுகளில் வழக்கொழிந்தது. கடவுளுக்குச் செலுத்த வேண்டிய வணக்கத்தையும் மரியாதையையும் முன்னிட்டு, மக்கள் கடவுளின் "நாலெழுத்து" பெயரை ஒலிக்க தயங்கினார்கள். அதற்குப் பதிலாக "என் ஆண்டவர்" என்னும் பெயர் கொண்ட "Adonai" என்னும் எபிரேயச் சொல்லை ஒலித்தார்கள்.
 
==எபிரேய மொழியில் கடவுளின் பெயர்==
==ஜெஹோவா பெயர் ஒலிப்பது பற்றி அறிஞர்==
 
[[File:Sør-Fron church, IEHOVA.jpg|thumb|நோர்வேஜிய நாட்டுக் கோவில் ஒன்றில் ''Iehova'' என்னும் பெயர் பொறிக்கப்பட்டிருத்தல்.<ref>Source: [http://www.divinename.no/sorfron.htm The Divine Name in Norway],</ref>]]
எபிரேய அரிச்சுவடியில் 22 மெய்யெழுத்துக்கள் மட்டுமே இருந்தன. சுவடியில் எபிரேயத்தில் எழுதியபோது உயிரெழுத்துகளை எழுதவில்லை. ஆனால் உயிரெழுத்துகளின் துணையின்றி மெய்யெழுத்துகளை மட்டுமே ஒலித்தல் இயலாது.
 
எபிரேய மொழியில் கடவுளின் பெயரை மெய்யெழுத்துகளால் மட்டுமே எழுதினர். அது நான்கு எழுத்துகளால் ஆனதால் "நாலெழுத்து" என்றும் பின்னர் அழைக்கப்பட்டது (கிரேக்கத்தில் ''tetragrammaton''). அந்த நான்கு மெய்யெழுத்துகளால் ஆன சொல் JHVH (அல்லது YHWH) என்பதாம். இந்த நாலெழுத்தை எவ்வாறு ஒலிப்பது என்பது பிரச்சினை. அதை ஜஹாவா,ஜுஹோவாஹா, ஜிஹிவா என்று வெவ்வேறு விதங்களில் ஒலிக்க முடியும். எது சரியான ஒலிப்பு என்ற பிரச்சனை தொடர்ந்தது.
 
கடவுளின் பெயரை ஒலிக்கும் முறை தந்தையிடமிருந்து மகனுக்கு என்று தலைமுறை தலைமுறையாய் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு காலக்கட்டத்தில் கடவுளின் பெயர் மட்டில் மக்கள் கொண்ட வணக்கம் மற்றும் மரியாதையின் அடிப்படையில் அப்பெயரை ஒலிப்பது முறையல்ல என்று அவர்கள் நினைத்தனர். ஆண்டுக்கு ஒருமுறை எருசலேம் கோவில் வழிபாட்டில் மட்டுமே கடவுளின் பெயர் ஒலிக்கப்பட்டது.
 
அதே நேரத்தில் விவிலியத்தை வாசித்த போதும் அதை அறிக்கையிட்ட போதும் மக்கள் கடவுளின் பெயரை ஒலிக்க வேண்டிய தேவை எழுந்தது. பழைய ஏற்பாட்டு நூல்களில் கடவுளின் பெயர் சுமார் 6800 தடவை வருவதால் அப்பெயரை ஒலிப்பதைத் தவிர்க்க முடியாது. எனவே ஒரு தீர்வு காணப்பட்டது. அதாவது கடவுளைக் குறிக்க "ஆண்டவர்" (''Lord''; ''Master'') "தலைவர்" என்று பொருள்படுகின்ற "Adonai" என்னும் சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர். சில வேளைகளில் அதே பொருளுடைய "எலோகிம்" (''Elohim'')
{{clear}}
என்னும் சொல்லைக் கையாண்டனர்.
 
கி.பி. 70ஆம் ஆண்டளவில் எருசலேம் கோவில் உரோமைப் படையினரால் அழிவுண்டது. அதன் பின்னர் எருசலேம் கோவிலில் வழிபாடும் நிகழவில்லை, எபிரேயர் கடவுளைக் குறிக்க பயன்படுத்திய JHVH (YHWH) என்னும் சொல்லின் உயிரெழுத்துக்களும் எனவே ஒலிப்பும் மறைந்தது. எபிரேய விவிலியத்தில் கடவுளின் பெயர் JHVH (YHWH) என்று மெய்யெழுத்துத் தொகுப்பாக, "நாலெழுத்தாக" மட்டுமே இருக்கலாயிற்று.
 
==உயிரெழுத்துக்கள் சேர்க்கப்படுதல்==
 
கி.பி. சுமார் 500ஆம் ஆண்டளவில் எபிரேய அறிஞர்கள் எபிரேய மொழியை எழுதுவதில் ஒரு சீர்திருத்தம் கொணர்ந்தார்கள். எபிரேயச் சொற்களின் ஒலிப்பு சரியாகப் பாதுகாக்கப்படுவதற்கு உயிரெழுத்துக்களையும் இணைத்து எழுத வேண்டும் என்று முடிவுசெய்தார்கள். எனவே எபிரேயத்தில் உயிரெழுத்துக்களைக் குறிக்கின்ற அடையாளங்கள் புகுத்தப்பட்டன. இந்த சீர்திருத்தத்தைச் செய்த அறிஞர்கள் "மசோரெத்தியர்" என்னும் பொதுப்பெயரால் அறியப்படுகின்றனர். அச்சொல் "மரபு பேணுபவர்" என்னும் பொருளில் வழங்கப்படுகிறது.
 
இத்தகைய மசோரெத்திய அறிஞர்கள் எபிரேய விவிலியத்தில் உயிரெழுத்துக் குறியீடுகளைச் சேர்த்ததோடு, சில ஒலிப்பு விளக்கங்களையும் ஓரத்தில் எழுதினர். இதற்கு [[மசோரெத்திய பாடம் (விவிலியம்)|விவிலிய மசோரெத்திய பாடம்]] என்று பெயர்.
 
அவர்கள் கொணர்ந்த எழுத்து மற்றும் ஒலிப்பு சீர்திருத்தம் இரு தூண்கள் மேல் எழுந்தது. அவர்கள் விவிலிய பாடத்தின் வடிவத்தை எந்த விதத்திலும் மாற்றவில்லை; உயிரெழுத்து குறியீடுகளை மட்டுமே சேர்த்து சொற்களை ஒலிப்பதற்கு வழிகாட்டினர். மேலும், அவர்கள் தம் காலத்தில் வழக்கத்திலிருந்த ஒலிப்பு முறைக்கு ஏற்ப அந்த உயிரெழுத்துக் குறியீடுகளைச் சேர்த்தனர்.
 
ஆனால் JHVH (YHWH) என்னும் சொல் பண்டை நாள்களில் எவ்வாறு ஒலித்தது என்பதை அவர்கள் துல்லியமாக அறிந்திருக்கவில்லை. மேலும் யூதர்களின் தொழுகைக் கூடங்களில் கி.பி. 500களில், விவிலியத்தில் எங்கெல்லாம் JHVH (YHWH) என்னும் சொல் வந்ததோ அங்கெல்லாம் "Adonai" அல்லது "Elohim" என்னும் சொல்லே உச்சரிக்கப்பட்டது.
 
நிலைமை இவ்வாறு இருந்ததால், மசோரெத்திய அறிஞர்கள் JHVH (YHWH) என்னும் சொல்லை எவ்வாறு ஒலிக்கலாம் என்பதற்கு ஒரு வழிமுறை கண்டார்கள். அவர்கள் கடவுளைக் குறிக்கும் JHVH (YHWH) என்ற சொல்லின் மெய்யெழுத்துக்களை அப்படியே வைத்துவிட்டு, அந்த எழுத்துக்களுக்கு "Adonai" (அல்லது "Elohim")("ஆண்டவர்", "தலைவர்") என்னும் சொல்லிலுள்ள a (e), o, a (i) (அ (எ), ஓ, ஆ (இ)) என்னும் மூன்று உயிரெழுத்துக்களையும் சேர்த்தார்கள். இவ்வாறு உயிரெழுத்துக்களைச் சேர்த்ததால், விவிலிய வாசகர்கள் JHVH (YHWH) என்னும் சொல்லை விவிலியத்தில் கண்டபோது அதை "அதோனாய்" அல்லது "எலோகிம்" என்று ஒலித்தார்கள்.
 
அந்த ஒலிப்பிலிருந்து "ஜெஹோவா" என்னும் ஒலிப்பு பிறந்தது. அதாவது, கடவுளைக் குறிக்க எபிரேய விவிலியத்தில் பயன்படுத்தப்பட்ட JHVH (YHWH) என்னும் சொல்லை எவ்வாறு ஒலிக்கலாம் என்று கிறித்தவ இறையியலார் சிந்திக்கலாயினர். ஒருசிலர் தெரியாமலோ வேண்டுமென்றோ "Adonai" ("ஆண்டவர்", "தலைவர்") என்று கடவுளைக் குறிக்க பயன்பட்ட சொல்லிலிருந்து எடுக்கப்பட்டு, JHVH (YHWH) என்னும் பெயரோடு சேர்க்கப்பட்ட உயிரெழுத்துக்களை அப்படியே கூட்டி ஒலிக்கத் தொடங்கினார்கள். எபிரேய மொழியின் புணர்ச்சி விதிகளுக்கு ஏற்ப முதல் உயிரெழுத்தான "அ" "எ" என்று மாறியது. இவ்வாறு எ, ஓ, ஆ என்னும் மூன்று உயிரெழுத்துக்களும் JHVH (YHWH) என்னும் மெய்யெழுத்துத் தொகுதியோடு சேர்ந்து "ஜெஹோவா" என்னும் ஒலிப்பு பிறக்கலாயிற்று.
 
இவ்வாறு ஒரு சொல்லின் மெய்யெழுத்துக்களும் மற்றொரு சொல்லின் உயிரெழுத்துக்களும் இணைந்து ஒரு புதிய சொல் உருவாயிற்று. அதுவே "Jehova" ("ஜெஹோவா").
 
==மொழிபெயர்ப்புகள்==
 
விடுதலைப் பயணம் ("Exodus") நூல் 6:3 பகுதி ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டதைக் கீழ்வரும் பட்டியல் காட்டுகிறது. அதில்:
*எபிரேயத்தில் கடவுளின் பெயர் ({{hebrew|יְהֹוָה}}) என்றிருப்பதைப் பார்க்கலாம்.
*அந்த மூல பாடத்தை யூத வெளியீட்டுக் கழகம் (JPS) YHWH என்று ஆங்கிலத்தில் பெயர்ப்பதைப் பார்க்கலாம்.
*அதையே புது அமெரிக்க விவிலியம் (NAB) LORD என்று பெயர்த்து பெரிய எழுத்துகளில் தருகிறது.
*சேம்சு அரசன் (King James) விவிலியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு அதை "யேகோவா" என்று அளிக்கிறது.
*1994இல் வெளியான திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) "ஆண்டவர்" என்று பெயர்க்கிறது.
 
{{Navbox
|name = விவிலிய மொழிபெயர்ப்புகள் - விடுதலைப் பயணம் 6:3
|basestyle = background-color:#FFFF66
|titlestyle = background-color:#FFFF66
|state = <noinclude>expanded</noinclude>
|title = விவிலிய மொழிபெயர்ப்புகள் - விடுதலைப் பயணம் 6:3
|listclass = hlist
|group1 = எபிரேய மூல பாடம்
|list1 = וָאֵרָא, אֶל-אַבְרָהָם אֶל-יִצְחָק וְאֶל-יַעֲקֹב--בְּאֵל שַׁדָּי; וּשְׁמִי יְהוָה, לֹא נוֹדַעְתִּי לָהֶם
 
|group2 = JPS (Jewish Publication Society) ஆங்கில மொழிபெயர்ப்பு
|list2 = and I appeared unto Abraham, unto Isaac, and unto Jacob, as God Almighty, but by My name YHWH I made Me not known to them.
 
|group3 = NAB (New American Bible) ஆங்கில மொழிபெயர்ப்பு
|list3 = As God the Almighty I appeared to Abraham, Isaac and Jacob, but my name, LORD, I did not make known to them.
 
|group4 = சேம்சு அரசன் விவிலியம் தமிழ் மொழிபெயர்ப்பு
|list4 = சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன். ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
 
|group5 = திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு
|list5 = நானே ஆண்டவர். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் "ஆண்டவர்" என்ற என் பெயரால் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லையெனினும், எல்லாம் வல்ல கடவுளாகக் காட்சியளித்தவர் நானே!
 
|belowclass = hlist
|below =
}}
==சரியான ஒலிப்பு எது?==
 
எபிரேய விவிலியத்தில் கடவுளைக் குறிக்கப் பயன்படும் சொல்லான JHVH (YHWH) என்பதை எவ்வாறு ஒலிப்பது அல்லது மொழிபெயர்ப்பது என்பதில் கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவுகிறது.
*ஜெஹோவா என்று சேம்சு அரசன் ஆங்கில மற்றும் தமிழ் பெயர்ப்புகளில் ("யெகோவா") உள்ளது. 1901இல் வெளியான American Standard Version என்னுப் பெயர்ப்பிலும் அவ்வாறே உள்ளது. குறிப்பாக, [[யெகோவாவின் சாட்சிகள்|"ஜெஹோவாவின் (யெகோவாவின்) சாட்சிகள்"]] என்று அழைக்கப்படும் பிரிவினர் ("Jehovah's Witnesses") இப்பெயரைப் பயன்படுத்துகின்றனர்.
*இக்கருத்துக்கு எதிராக உள்ளோர் பின்வரும் காரணங்களைக் காட்டுகின்றனர்: 1) ஒரு சொல்லிலிருந்து மெய்யெழுத்துக்களையும் மற்றொரு சொல்லிலிருந்து உயிரெழுத்துக்களையும் எடுத்து இணைத்து ஒரு புதிய சொல்/ஒலிப்பு உண்டாக்குவது முறையற்றது. 2) அதோனாய் என்னும் சொல்லின் உயிரெழுத்துக்களைப் பெரும்பாலும் சேர்த்தாலும், சில வேளைகளில் எலோகிம் என்னும் சொல்லில் உயிரெழுத்துக்களையும் சேர்ப்பதால் ஜெஹோவா, ஜெஹோவி என மாறிவிடும். இது முரண்பாடாக உள்ளது. 3) ஜெஹோவா (யெகோவா) என்பது ஒரு கூட்டுச்சொல்லாக/ஒலிப்பாக இருந்த பிறகும் அதையே கடவுளின் தனிப்பட்ட பெயராகக் கொள்வது முரண்பாடு ஆகும்.
*இரண்டாவது குழுவினர் ஜெஹோவா (யெகோவா) என்பது சரியான ஒலிபெயர்ப்பு அல்ல என்பதோடு, "யாவே" (Yahweh/Yahveh/Yahaveh) சரியான ஒலிப்பு ஆகும் என்பர். இதற்கு அவர்கள் எபிரேய மொழியியல் விதிகளை ஆதாரமாகக் காட்டுவர்.
*மூன்றாவது குழுவினர் "யாவே" என்னும் ஒலிப்பும் சரியல்ல என்று வாதாடுவர். அவர்கள் கருத்துப்படி, மொழியியல் அடிப்படையில் கடவுளின் பெயரை நிர்ணயிப்பது முறையாகாது. எனவே, எங்கெல்லாம் "நாலெழுத்தாகிய" JHVH/YHWH என்பது விவிலியத்தில் வருகிறதோ, அங்கே அச்சொல்லை "ஆண்டவர்" (LORD), அல்லது "கடவுள்" (GOD) என்று குறிப்பதே சரி.<ref>[http://www.karaite-korner.org/yhwh_2.pdf Nehemia Gordon, ''The Pronunciation of the Name'',p. 8]</ref><ref>[http://www.karaite-korner.org/yhwh_2.pdf Nehemia Gordon, ''The Pronunciation of the Name'',p. 11]</ref>
 
[[File:Tetragrammaton-related-Masoretic-vowel-points.png|thumb|எபிரேய விவிலியத்தில் கடவுளைக் குறிக்கும் நாலெழுத்துச் சொல் {{hebrew|יהוה}} என்பது "அதொனாய்", "எலோகிம்" என்னும் சொற்களில் வரும் உயிரெழுத்துகள் ஏற்றி ஒலிப்பதைக் காட்டும் படம். உயிரெழுத்துக் குறியீடுகள் சிவப்பு நிறத்தில் உள்ளன.]]
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1491367" இருந்து மீள்விக்கப்பட்டது