உரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
==வரலாறு==
ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ட்ராய் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது அங்கிருந்து ஓடிவந்த மன்னன், லிதியம் என்கிற ஆற்றின் கரையிலிருந்த வேறொரு மன்னிடம் தஞ்சமடைந்தான். பிறகு, அம்மன்னனின் மகளையே மணம் செய்து கொண்டான். அந்த வம்சாவழியில் வந்த ஒரு பெண் ரியா சில்வியா, அவள் செவ்வாய் கிரகத்தால் கருவுற்று இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றாள். ஆனால், அந்த நேரத்தில் அவளின் மாமன் அந்த நகரத்தை கைப்பற்றியதால், தன் குழந்தைகளை காக்க ஒரு கூடையில் அவர்களை வைத்து டைபர் ஆற்றில் வி்ட்டுவிட்டாள். ஆற்றில் சென்ற குழந்தைகளை ஓநாய் ஒன்று இழுத்து வந்து, தன் பாலை சொறிந்து அவர்களை காத்தது. ஓநாயிடம் இருந்த குழந்தைகளை, அவ்வழியாக சென்ற மாடு மேய்ப்பவன் காப்பாற்றி வளர்த்து வந்தான். அவர்களே ரோமுலசு மற்றும் ரேமசு. இதன் அடையாளமாக ஓநாய் பாலூட்டும் இரட்டையர் சிலை ரோமானியா முழுவதும் இடம் பெற்றிருக்கும்.
 
[[File:0 Lupa Capitolina (2).JPG|thumb|left|ஓநாய் பாலூட்டும் ரேமஸ்,ரோமுலஸ்]]
 
இரட்டையர்களாகிய ரோமுலஸ், ரேமஸ் ஆகியோர் இணைந்து கி.மு. 753ல் ரோம் நகரத்தை நிறுவியதாக ஒரு தொல்மரபு கூறுகின்றது. அகழ்வாராய்ச்சியின் படியும் சுமார் கி.மு 8 ஆம் நூற்றாண்டு வாக்கில் இருந்து தொடர்ந்து மக்கள் இன்று ரோம் நகரம் உள்ள பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/உரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது