அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Interwiki: He
தொடக்கம்
வரிசை 1:
'''அறிவியலுக்கான பொது நூலகம் (அ.பொ.நூ)''' என்பது '''Public Library of Science ( PLoS)''' என்பதின் தமிழாக்கம். இந்த அறிவியலுக்கான பொது நூலகம் என்பது [[இலாப நோக்கமற்ற நிறுவனம்]]. இது அறிவியலாளர்களுக்கும் மருத்துவர்களுக்குமான அறிவியல் ஆய்விதழ்களும், பிற அறிவியல் கருத்தடக்கங்களும் கொண்ட [[இணையம்|இணையவழியான]] நூலகம் ஒன்றை யாரும் இலவசமாகப் படித்துப் பயன்படுத்த்துமாறு நிறுவப்பட்டதாகும். இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் ஆய்விதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை யாரும் பணம் ஏதும் கட்டாமல் இலவசமாகப் படித்துப் பயன்படுத்தவும் படியெடுக்கவும் (copy), தேவைக்கு ஏற்றார்போல மாற்றவும் உரிமைகொண்ட [[திறந்த கருத்தடக்கம்]], [[கட்டற்ற அணுக்கம்]] கொண்டவைகளாகும். 2006 ஆம் ஆண்டுக் கணக்குப்படி அ.பொ.நூ வெளியிடும் அறிவியல் மருத்துவ இயல் ஆய்விதழ்கள் பின் வருவனவாகும்: அ.பொ.நூ உயிரியல் (PLoS Biology), அ.பொ.நூ மருத்துவம் (PLoS Medicine), அ.பொ.நூ கணிப்பீட்டு உயிரியல் (PLoS Computational Biology), அ.பொ.நூ மரபணவியல் (PLoS Genetics ), அ.பொ.நூ நோயூட்டிகள் (PLoS Pathogens). 2006 ல் இருந்து தனிச்சிறப்பான ''அ.பொ.நூ ஒன்று'' PLoS ONE என்னும் ஒரு ஆய்விதழும் வெளியிடுகின்றது.
அதிஉயர் தர அறிவியல் ஏடுகள் திறந்த நிலையில் இலவசமாக அனைவருக்கும் படிக்க கிடைக்கவேண்டும் என்ற நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பே '''பொது விஞ்ஞான நூலகம் (Public Library of Science)''' ஆகும். [[உயிரியல்]], [[மருத்துவம்]] ஆகிய துறைகளில் முக்கிய, தரம் கொண்ட ஏடுகளை இந்நூலகம் வெளியிடுகின்றது. இவ் அமைப்பு மூடிய அல்லது கட்டணம் கோரும் மரபு சார் அறிவியல் ஏடுகளுக்கு ஒரு மாற்று ஆகும்.
[[பகுப்பு:திறந்த கல்வி அமைப்புகள்]]
[[பகுப்பு:உயிரியல்]]
[[பகுப்பு:மருத்துவம்]]
 
== வரலாறு ==
[[ca:Public Library of Science]]
அறிவியலுக்கான பொது நூலகம் (அ.பொ.நூ) 2001 ஆம் ஆண்டு அறிவியல் அறிஞர்களை நோக்கி இணையத்தில் வெளிப்படையாக துவங்கி வெளியிடப்பட்ட வேட்பு மணு ஒன்றில் இருந்து உருவானது. இந்த வேட்பு மணுவின் முக்கிய கருத்துக்கள் என்னவென்றால், செப்டம்பர் 2001 இல் இருந்து ஒருவர் வெளியிடும் ஆய்வுக் கட்டுரை முழுவதையும் யாருக்கும், எந்தவிதமான தடைகளும் விதிக்காமல் இலவசமாக உடனேயோ அல்லது சில மாத இடைவெளிக்குப் பின்னரோ வழங்கா\விட்டால் ஆய்வுக்கட்டுரையை அத்தகைய ஆய்விதழ்களுக்கு யாரும் அனுப்பாதீர்கள் என்று கேட்கப்பட்டார்கள். இவ் இணைய வேட்பு மணுவை [[ஸ்டான்’வோர்டு பல்கலைகழக்ம்|ஸ்டான்’வோர்டு பல்கலைக் கழகத்தைச்]] சேர்ந்த ''பேட்ரிக் பிரௌன்'' (Patrick Brown) என்னும் உயிர்வேதியல் அறிஞரும், பெர்க்கிலியில் உள்ள [[கலி’வோர்னியா பல்கலைகழகம்|கலி’வோர்னியா பல்கலைக்கழகத்தையும்]], [[லாரன்ஸ் பெர்க்கிலி நாடளாவிய ஆய்வகம்|லாரன்ஸ் பெர்க்கிலி நாடளாவிய ஆய்வகத்தையும்]] சேர்ந்த கணிப்பீட்டு உயிரியல் அறிஞர் ''மைக்கேல் ஐசன்'' (Michael Eisen) என்பவரும் சேர்ந்து முன் வைத்தனர். தற்பொழுது ''உயிரியல்-மருத்துவ நடுவகம்'' (BioMed Central (BMC) என்று அழைக்கப்படும் குழுவில் அடங்கிய பல அய்விதழ்கள் உடனேயே படிக்கக்கூடிய திறந்த அணுக்கம் கொண்டவையாகும். சில ஆய்விதழ்கள் 6 மாத இடைவெளிக்கோ அல்லது அதைவிட குறுகிய இடைவெளிக்கோ பின்னர் திறந்த அணுக்கம் கொண்டவைகளாக இயங்கி வருகின்றது. Proceedings of the National Academy of Sciences. போன்ற ஆய்விதழும் இப்படிப்பட்ட இடைவெளிக்குப் பின்னர் யாரும் இலவசமாக அணுகி படிக்கவல்லதாகும்.
[[de:Public Library of Science]]
 
[[en:Public Library of Science]]
== வெளி இணைப்புகள் ==
[[es:Public Library of Science]]
[[he:PLoS]]
[[fr:Public Library of Science]]
[[nl:Public Library of Science]]
[[pl:Public Library of Science]]
[[pt:Public Library of Science]]