இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[இந்திய விடுதலைப் போராட்டம்]] பெரும்பாலும் வன்முறையற்ற அறிவழிப் போராட்டமாக இருந்தது. இருப்பினும் ஆயுதமேந்திய புரட்சி இயக்கங்கள் அதில் '''குறிப்பிடத்தக்க பங்கு''' வகித்தன. வன்முறையின் துணையுடன் பிரித்தானிய ஆட்சியை ஒழிக்க முயன்ற இவ்வியக்கங்கள் வங்காளம், பஞ்சாப், பீகார், மகாராட்டிரம், உத்தரப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் தீவிரமாக இயங்கி வந்தன. இந்தியாவுக்கு வெளியிலிருந்தும் சில புரட்சி இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. [[அனுசீலன் சமித்தி]], (1902- வங்காளம்) [[யுகாந்தர்]] (1906- வங்காளம்), [[கதர் கட்சி]], (1913- கலிஃபோர்னியா), [[இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு]], (1924- பஞ்சாப்), [[இந்திய தேசிய ராணுவம்]] போன்றவை இத்தகைய புரட்சி இயக்கங்களில் குறிப்பிடத்தக்கவை.
 
19ம் நூற்றாண்டின் பிறபகுதியில்பிற்பகுதியில் [[பிரித்தானிய இந்தியா]]வில் மக்களிடையே தேசியவாத உணர்வுகள் பரவத்தொடங்கின. [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி இத்தேசிய எழுச்சிக்குத் தலைமை தாங்கியது. தொடக்கத்தில் காலனிய அரசிடம் முறையிட்டும், பேச்சுவார்த்தை நடத்தியும், ஆட்சியிலும் நிருவாகத்திலும் இந்தியர்களுக்கு உரிய பங்கைப் பெறுவதே காங்கிரசின் நோக்கமாக இருந்தது. நாளடைவில் காங்கிரசின் தலைமையிலான இயக்கம், இந்தியாவுக்கு தன்னாட்சியும் முழு விடுதலையும் கோரத் தொடங்கியது. இவ்வியக்கத்தினர் பெருமளவு அமைதியான போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கோரிக்கைகள் விடுத்தல், இதழ்களில் செய்தி வெளியிடல் போன்ற வன்முறையற்ற வழிகளில் போராடினர். அதே காலகட்டத்தில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் பிரித்தானியரை இந்தியாவில் இருந்து வெளியேற்றவும் சில புரட்சி இயக்கங்கள் முயன்றன. '''இறுதியில் வெற்றியும் பெற்றன.'''
==அனுசீலசன் சமித்தி==
அனுசீலன் சமித்தி (அனுஷீலன் சமித்தி, வங்காள மொழி: অনুশীলন সমিতি) இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் வங்காளத்தில் செயல்பட்ட ஒரு புரட்சி இயக்கம். 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் கிழக்கு இந்தியாவின் முக்கிய ஆயுதமேந்திய புரட்சி இயக்கமாக இருந்தது. [[வங்காளப் பிரிவினை]]யால் வங்காளத்திலும் அதன் அருகிலிருந்த பகுதிகளிலும் ஆயுதப் போராட்டம் புகழ்பெற்றது. இவ்வியக்கமும் இதிலிருந்து பிரிந்த யுகாந்தர் அமைப்பும், புறநகர் உடற்பயிற்சி கழகங்கள் என்ற போர்வையில் பிரித்தானிய அரசுக்கு எதிராக ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தருவதே இதன் குறிக்கோள். ஆரம்ப காலத்தில் கொல்கத்தா, டாக்கா போன்ற நகர்புறங்களில் பரவிய இவ்வமைப்பு விரைவில் வங்காளத்தின் ஊர்ப்புறங்களிலும் வேரூன்றியது. 1902ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு பலமுறை பிளவுற்று, சில முறை புனரமைக்கப்பட்டது. வெடி குண்டு தயாரித்தல், பிரித்தானிய ஆட்சியாளர்களையும் அவர்களது இந்திய ஆதரவாளர்களையும் படுகொலை செய்தல், மக்களிடையே புரட்சிக் கருத்துகளைப் பரப்புதல், அரசு பணத்தைக் கொள்ளையடித்தல் போன்ற செயல்களில் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.
==யுகாந்தர்==
ஜுகாந்தர் அல்லது யுகாந்தர் (வங்காள மொழி:যুগান্তর) இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் வங்காளத்தில் செயல்பட்ட ஒரு புரட்சி இயக்கம். ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தருவதே இதன் குறிக்கோள். அனுசீலன் சமித்தி என்ற புரட்சி அமைப்பிலிருந்து பிரிந்து 1906ஆம் ஆண்டு உருவானது. [[அரவிந்தர்]], அவரது சகோதரர் பாரின் கோஷ், புபேந்திரநாத் தத்தா, ராஜா சுபோத் மாலிக் ஆகியோர் இதனைத் தொடங்கினர். இவ்வமைப்பும் அனுசீலன் சமித்தியும் புறநகர் உடற்பயிற்சி கழகங்கள் என்ற போர்வையில் பிரித்தானிய அரசுக்கு எதிராக ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அலிப்பூர் வெடிகுண்டு சதி வழக்கு, இந்து-ஜெர்மானிய சதி ஆகிய புரட்சி நடவடிக்கைகளில் யுகாந்தர் ஈடுபட்டது. இதன் பல உறுப்பினர்கள் காலனிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் இவ்வியக்கம் முடக்கப்பட்டு சிறு குழுக்களாகப் பிளவுண்டது.
 
==கதர் கட்சி==
கதர் இயக்கம் அல்லது கதர் கட்சி (Ghadar Party, தேவநாகரி: ग़दर पार्टी, நாட்டலீக்கு: غدر پارٹی, பஞ்சாபி: ਗ਼ਦਰ ਪਾਰਟੀ) அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வாழ்ந்த பஞ்சாபி இந்தியர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமாகும். இவ்வியக்கம் அமைதிப்பெருங்கடற்பகுதியில் பணியாற்றிய இந்தியர்களால் தொடங்கப்பட்டது. மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, சப்பான், ஆப்கானித்தான், செருமனி, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த இந்தியர்கள் அங்கிருந்தபடியே பிரித்தானியருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய நாட்டின் விடுதலைக்கு உதவிடும் நோக்கில் பல அமைப்புகளை உருவாக்கினர். அவற்றில் ஒன்று கதர் இயக்கமாகும். லாலா ஹர்தயாள், [[ராஷ் பிஹாரி போஸ்]] (இந்தியத் தேசப் படையை நிறுவியவர்), சசீந்திர சன்யால், கணேஷ் பிங்காலே, ஷோகன் சிங் வாக்னா, தோஹி கத்தார் சிங் ஆகியோர் இந்திய விடுதலைக்காக வெளியிலிருந்து உதவும் பொருட்டு இவ்வமைப்பைத் தொடங்கினர்.
பொருளடக்கம்
 
கதர் இயக்கமும் ஆங்கிலேயரும்
வரி 32 ⟶ 31:
 
இந்த அமைப்பின் கொள்கை விளக்கம்:
“ அதிகாரபூர்வமான தீவிரவாதத்தினை எதிர்த் தீவிரவாதத்தால்தான் சந்திக்க வேண்டும். நாட்டின் எல்லாப் பக்கங்களிலும் முழுமையான உதவாக்கரைத் தன்மை பரவிக் கிடக்கிறது. தீவிரவாதந்தான் மக்களிடையே தேவையான எழுச்சியை ஏற்படுத்தப் பயனுள்ள வழியாகும்... சரியான தருணத்தில் மரண அடியை கொடுப்பதற்காகத் தான் இப்புரட்சி அமைப்பு தீவிரவாதப் பிரச்சாரத்தில் தற்சமயம் வேண்டுமென்றே கலந்து கொள்ளாமல் இருக்கிறது... தேவையான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் தீவிரவாதப் பிரச்சாரத்தை முழு வீச்சில் நடத்த இவ்வியக்கம் எந்தவொரு தயக்கமும் காட்டாது. அப்பொழுது அன்னிய ஆட்சிக்குத் துணைபோகும் அதிகாரிகளும் தனி மனிதர்களும் தாங்கொணாத் துயரத்துக்கு ஆளாவார்கள்... ”
 
“ ரயில் மற்றும் ஏனைய போக்குவரத்துத் துறைகள், தொடர்புத் துறைகள், சுரங்கங்கள், பிற பெரிய அளவிலான தொழிற்சாலைகள்... அனைத்தும் தேசியமயமாக்கப் படவேண்டும்... ஒழுங்குபடுத்தப்படாத தனியார் வர்த்தக நிறுவனங்கள் ஒழிக்கப்பட்டு கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ”
வரி 72 ⟶ 71:
இந்திய தேசிய ராணுவம் (Indian National Army - INA, Azad Hind Fauj) என்பது இரண்டம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்திய அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு படை. இது சப்பானியப் பேரரசின் உதவியுடன் இந்தியாவின் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இந்திய ராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்த சென்றவர்கள் ஆகிய தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர்.
 
1942 இல் சிங்கப்பூர் சப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், [[ராஷ் பிஹாரி போஸ்]] என்பவரால் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. இதன் படைத்தலைவர் மோகன் சிங் ஆவார். ஆனால் விரைவில் அது ஆதரவின்றி கலைந்து போனது. மீண்டும் 1943 இல் [[சுபாஷ் சந்திர போஸ்]] நேதாஜி சுபாஷ் சந்திர போசினால் புத்துயிர் அளிக்கப்பட்டு மீட்டுருவாக்கப்பட்டது. போசின் இந்திய இடைக்கால அரசின் படைத்துறையாக செயலாற்றியது. சப்பானியப் படைகளுக்குத் துணையாக மலேசியா மற்றும் பர்மா போர்த்தொடர்களில் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகப் போரிட்டது. சப்பானிய மற்றும் பிரித்தானியத் தரப்புகள் தங்களது பரப்புரைத் தேவைகளுக்கு இப்படையினை பெரிய அளவில் பயன்படுத்துக்கொண்டன. சுமார் 43,000 உறுப்பினர்களைக் கொண்ட இப்படை போர்க்களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இதன் உறுப்பினர்கள் மீது பிரித்தானிய அரசு சாட்டிய குற்றங்களும், அது தொடர்பான வழக்குகளும் இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. '''குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை, அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரிட்டிஷாரின் வெளியேறுவது என்ற திட்டத்தை உருவாக்கியது, இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேனும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.'''
{{இந்திய விடுதலை இயக்கம்}}