புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம், கண்டன்விளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
உலகிலேயே [[லிசியே நகரின் தெரேசா|புனித குழந்தை இயேசுவின் திரேசாளுக்கு]] கட்டபட்ட முதல் ஆலயம் [[கண்டன்விளை]]யில் அமைந்துள்ள '''புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம்'''. 1929-ஆம் ஆண்டு இவ்வாலயம் அர்ச்சிக்கப்பட்டு அதே ஆண்டு திருவிழாவும் கொண்டாடப்பட்டது. இந்த ஆலயம் [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்]]-[[திங்கள்நகர்]] நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் ஒலிக்கும் மணிகள் திரேசாளின் சொந்த சகோதரிகளால் வாங்கி அனுப்பப் பட்டவை. புனிதையின் பேரொளிக்கம் மக்களின் வணக்கத்திற்காக ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழா செப்டம்பர் மாதம் கடைசி வெள்ளி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
====
== புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ==
*[[லிசியே நகரின் தெரேசா]]
மரி ஃப்ரான்சுவா தெரேஸ் மார்த்தின் (Marie-Françoise-Thérèse Martin) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் துறவற சபையில் குழந்தை இயேசு மற்றும் இயேசுவின் திருமுகத்தின் தெரேசா என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார். குழந்தை இயேசுவின் தெரேசா என்னும் பெயரும், இயேசுவின் சிறு மலர் என்னும் பெயரும் இவருக்குச் சிறப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.
 
15 வயதே நிரம்பிய தெரேசா தம் இளம் பருவத்திலேயே இறை அழைத்தலுக்குச் செவிமடுத்து, 1888 இல், பல்வேறு தடைகளையும் தாண்டி, கார்மேல் சபையில் சேர்ந்தார். அவர் புகுந்த அடைப்புநிலை (cloistered) கார்மேல் சபை மடம் பிரான்சு நாட்டில் நோர்மாண்டி மாநிலத்தில் லிசியே (Lisieux) நகரில் அமைந்திருந்தது. அத்துறவற இல்லத்தில் தெரேசா ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு திருப்பணிக் காப்பகப் பொறுப்பாளர்(sacristan), பயிற்சிநிலைத் துறவியரின் துணைப் பயிற்சியாளர் போன்ற பல பணிகளை ஆற்றினார். அவர்தம் வாழ்க்கையின் இறுதி பதினெட்டு மாதங்களில் அவர் "இறைநம்பிக்கையின் இருண்ட கால" வேதனையை அனுபவித்தார். அவர் காச நோயால் பீடிக்கப்பட்டு, தம் 24ஆம் அகவையில் இறையடி எய்தினார்.
இவரின் ஓர் ஆன்மாவின் வரலாறு என்னும் தன்வரலாற்று நூலை இவரின் இறப்புக்கு பின் சிறிதளவே அச்சிட்டு வெளியிட்டனர். ஆனாலும் அது பலராலும் படிக்கப்பட்டு, இவரை 20-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் புனிதருள் ஒருவராகப் பிறர் கண்டுணர வழிவகுத்தது. இவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923இலும், புனிதர் பட்டம் 1925இலும் வழங்கப்பட்டது. பதினொன்றாம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி, இவரைத் தம் ஆட்சியின் விண்மீன் ஆக்கினார் என்பர்.[2]
1927-இல் குழந்தை இயேசுவின் புனித தெரேசா '''மறை பரப்பு நாடுகளின் துணை பாதுகாவலியாக''' பிரான்சிஸ் சவேரியாருடன் அறிவிக்கப்பட்டார். 1944-இல் பிரான்சு நாட்டின் பாதுகாவலியாக ஜோன் ஆஃப் ஆர்கோடு அறிவிக்கப்பட்டார். 19 அக்டோபர் 1997-இல் இரண்டாம் யோவான் பவுல் இவரை '''கத்தோலிக்க திருச்சபையின் 33-ஆம் மறைவல்லுநராக''' அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இவரே வயதால் மிக இளையவரும், மூன்றாவது பெண்ணும் ஆவார்.
== ஆலயத்தில் திருப்பலி ==
வார நாட்களில் (ஞாயிறு,வியாழன் தவிர)- காலை 6.15 மணி.