அதிர்வெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sine waves different frequencies.png|thumb|right|360px|வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட [[சைன் (முக்கோணவியல்)|சைன்]] அலைகள் மேலே உள்ளன. ஒவ்வொரு அலையும் தனக்கு மேலே உள்ள அலையை விட கூடுதல் அதிர்வெண் உடையது.]]
'''அதிர்வெண்''' அல்லது '''அலைவெண்''' (Frequency) என்பது ஒரு குறிப்பிட்ட நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி [[நிகழ்வு]] நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும். இதனை எளிமையாக விளக்க ஓர் ஊஞ்சலை எடுத்துக்கொள்ளலாம். ஊஞ்சலை ஆட்டிவிட்டால் அது அசையாது நிற்கும் நிலையில் இருந்து முன்னே நகர்ந்து எட்ட விலகி ஓர் எல்லைக்குப் போய், பிறகு மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வந்து, பின் எதிர்ப்புறமாகப் போய்ப் பின்னர் தொடங்கிய இடத்துக்கே வரும் பொழுது அது ஒரு சுழற்சி அடைந்ததுஅடைகிறது. ஆனால் அது மேலும் முன்னும் பின்னுமாய் அலையும். ஒரு மணித்துளி நேரத்தை ஓர் அலகுநேரம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனை முழுச் சுழற்சிகள் அந்த நேரத்தில் நிகழ்ந்தன என்பது அதிர்வெண் அல்லது அலைவெண் ஆகும். ஒரு நொடிக்கு ஒரு முழு சுழற்சி என்னும் கணக்கு ஓர் [[ஏர்ட்சு]] (Hertz) என்று கூறப்பெறுகின்றது. முன்னர் இதனை நொடிக்கு ஒரு சுழற்சி (cycle per second) என்று குறித்தனர்.
 
[[ஒலியலை|ஒலியலைகளும்]], [[ஒளியலை|ஒளியலைகளும்]] ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் நாம் உணருமாறு பண்புகள் கொண்டிருக்கும். ஒலியினது அதிர்வெண் அதன் சுருதியைசுருதியைத் தீர்மானிக்க உதவுகின்றது. அதிக அல்லது உயர்ந்த அதிர்வெண் கொண்ட துடிப்பலைகள் "கீச்" என்று உணரப்படும். உயர்ந்த சுருதியுடையனவாகவும், குறைந்த அதிர்வெண்கள் கொண்ட ஒலியலைகள் (அடிவயிற்றில் இருந்து எழுவதுபோன்ற ஒலியாகிய) தாழ்ந்த சுருதி உடையனவாகவும் இருக்கும்.
 
இதே போல ஒளியலையின் அதிர்வெண்ணைப் பொருத்துபொறுத்து, அதன் நிறம் தென்படுகின்றது. அதிக அதிர்வெண் கொண்ட காணக்கூடிய ஒளி அலைகள் நீலமாகவும், குறைந்த அதிர்வெண் கொண்ட அலைகள் சிவப்பு நிறமாகவும் கண்ணுக்குத் தெரியும்.
[[File:EM spectrum.svg|thumb|right|400px|ஒளி அலைகளின் அதிர்வெண்ணும் அலைநீளமும். சிவப்பு நிறம் குறைந்த அதிர்வெண், நீல நிறம் அதிக அதிர்வெண்]]
== அளவீட்டு முறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அதிர்வெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது