இரண்டாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{WW2InfoBox}}
'''இரண்டாம் உலகப்போர்''' அல்லது '''உலகப்போர் <big>2</big>''' (''World War <big>II</big>'', அல்லது ''Second World War'') 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை [[அச்சு நாடுகள்]], [[நேச நாடுகள்]] என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். [[ஒட்டுமொத்த போர்]] என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. [[பெரும் இன அழிப்பு]], அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படித்திய போராகும்.<ref name="Sommerville 2008 5">{{Harvnb|Sommerville|2008|p=5}}.</ref>
 
செப்டம்பர் 1, 1939ல் [[நாசி ஜெர்மனி]]யின் [[போலந்து]] [[போலந்து படையெடுப்பு|படையெடுப்புடன்]] இப்போர் துவங்கியதாக பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு புறம் [[பிரிட்டன்]] அதன் [[பிரித்தானியப் பேரரசு|பேரரசில்]] இடம் பெற்றிருந்த நாடுகள் [[பிரான்சு]] ஆகியவை நேச நாட்டு அணியிலிருந்தன. மறுபுறம் [[நாசி ஜெர்மனி]] மற்றும் [[பாசிசம்|பாசிச]] [[இத்தாலி]] ஆகியவை சேர்ந்து அச்சு அணியை உருவாக்கின. 1939-41ல் அச்சுப் படைகள் [[மேற்கு ஐரோப்பா]] முழுவதையும் கைப்பற்றின. பிரிட்டன் மட்டும் அவற்றின் பிடியிலிருந்து தப்பியது. பின் [[வடக்கு ஆப்பிரிக்கா]]வைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன. ஜூன் 1941ல் அச்சுப் படைகள் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] மீது [[பர்பரோசா நடவடிக்கை|படையெடுத்ததால்]] சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது. 1930களின் துவக்கத்திலிருந்து [[சீனா]] மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த [[சப்பானியப் பேரரசு]]ம் அச்சு அணியில் இணைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது