வங்காளதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 68:
'''வங்காளத்தேசம்''' (Bangladesh) ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. [[இந்தியா]], [[மியான்மர்]] ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். [[டாக்கா]] இதன் தலைநகரமாகும். இந்தியாவின் [[மேற்கு வங்காளம்]] மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் [[வங்காள மொழி]]யே பேசப்படுகிறது.
 
இந்நாட்டின் எல்லைகள் 1947ஆம் ஆண்டு [[வங்காளப் பிரிவினை]]யின் போது நிறுவப்பட்டது. 1947 ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின், இப்பகுதி [[கிழக்கு பாக்கிஸ்தான்]] என்ற பெயரில் [[பாக்கிஸ்தான்]] நாட்டின் பகுதியாக‌ இருந்தது. இருப்பினும், இப்பகுதிக்கும் மேற்கு பாக்கிஸ்தான் பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 1600 கிலோமீட்டர். மேற்கு பாக்கிஸ்தானுக்கும் கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் இடையான எந்த போக்குவரத்தும் இந்தியாவின் வழியாகவே நடைபெறவேண்டும் என்ற நிலையில், மொழி வேறுபாடு காரணமாகவும், பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும், கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. தனிநாடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாக்கிஸ்தான் பகுதி இந்தியாவின் துணைக் கொண்டு [[வங்காளதேச விடுதலைப் போர்|வங்காளதேச விடுதலைப் போருக்குப்]] பின் ''வங்காளத் தேசம்'' என்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
 
இதன்பின், வங்காள தேசம், ஏழ்மை, இயற்கை அழிவுகள், பஞ்சம் ஆகிய பல இன்னல்களை மட்டுமல்லாது, அரசியல் களத்திலும் [[இராணுவ ஆட்சி]], பேச்சுரிமை மறுக்கப்பட்ட நிலை, [[ஊழல்]] போன்ற பல துயர்களைக் கடந்து வந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு மீண்டும் [[மக்களாட்சி]] மலர்ந்துள்ள நிலையில் சிறிதளவு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது