பக்தி யோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பக்தி யோகம்''' :- பக்தி யோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:44, 10 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

பக்தி யோகம்  :- பக்தி யோகம் குறித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பகவத் கீதையில் அருச்சுனனுக்கு அத்தியாயம் 12இல் விளக்கமாக எடுத்துரைக்கிறார். பக்தியோகம் என்பது ஐந்து வகையான சாதனங்களின் தொகுப்பாகும்.

பக்தியோகத்தின் ஐந்து படிகள்

  1. பற்றுடன் கூடிய பக்தி
  2. பற்றில்லாமல் கூடிய பக்தி
  3. சகுன உபாசன (தியானம்) பக்தி
  4. நிர்குண உபாசன (தியானம்) பக்தி
  5. ஞானயோக பக்தி

பற்றுடன் கூடிய பக்தி

பக்தன் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான, இறைவன் மீது பக்தி செலுத்துதல் என்பது காம்ய பக்தியாகும்.

பற்றில்லாமல் கூடிய பக்தி

பக்தன் தனது நன்மைக்கு அன்றி உலக நன்மைக்காக, இறைவன் மீது செய்யும் பக்திக்கு நிஷ்காம்ய பக்தியாகும்

சகுண உபாசன (தியானம்) பக்தி

பக்தன் பெயர், உருவத்துடன் கூடிய இறைவனை மனதில் நிலைநிறுத்தி செய்யும் (தியானத்தை) பக்தியை சகுண பிரம்ம உபாசனையாகும்.

நிர்குண உபாசன (தியானம்) பக்தி

பக்தன் பெயர், உருவம் அற்ற பிரம்மத்தை மனதில் நிலைநிறுத்தி செய்யும் (தியானத்தை) பக்தியை நிர்குண உபாசனையாகும்

ஞானயோக பக்தி

பக்தன் தனது குரு மற்றும் வேதாந்த சாத்திரங்களின் துணை கொண்டு, வேதாந்த அறிவினால் பிரம்மத்தை அடையும் ஞானத்திற்கு ஞானயோக பக்தியாகும்.

உசாத்துணை

  • பகவத் கீதை

வெளி இணைப்புகள்

  • பக்தியோகம் [1] and [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தி_யோகம்&oldid=1494347" இலிருந்து மீள்விக்கப்பட்டது