ஆன்மா (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
[[இந்து சமயம்|இந்துத் தத்துவத்தில்]] தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே '''ஆன்மா''' அல்லது '''ஆத்துமா''' எனப்படுகிறது. ''ஆன்மா'' என்ற [[வடமொழி]]ச் சொல்லின் வேர்ச்சொல்லான ‘ஆத்மன்’ ‘அன்’ (மூச்சுவிடு) என்ற வினைச்சொல்லிலிருந்து உருவானது. [[அத்வைதம் |அத்வைத]] நூல்களோ [[ஆதி சங்கரர்]] வழித்தோன்றல்களோ ஆன்மாவைப் பற்றித் தரும் விளக்கங்கள் இங்கே கொடுக்கப் படுகின்றன.
 
==நான் யார்==
வரிசை 8:
==அது நீ==
 
''[[தத்துவமஸி என்ற மகாவாக்கியம் | தத் த்வம் அஸி]]'' என்னும் உபநிடத மகாவாக்கியம் ‘அது நீ’ என்று பொருள் தருகிறது. உள்முகமாக மனம் திரும்பி இதயத்தில் ஆழ்ந்து அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்த சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ, அது [[பிரம்மம்]] என்பதே. மனப்பக்குவம் அடையாத மானிடர்களைக் குறித்து சொல்லப்படும் ‘அது நீ’ என்ற உபதேசம், என்றும் அதுவே தானாய் அமர்ந்திருக்கும் பிரம்மநிலையை நோக்கி மனிதன் முன்னேறவேண்டும் என்ற நோக்குடன் சொல்லப்பட்டது.
இம்மகாவாக்கியம் [[சாந்தோக்ய உப்நிடதம் |சாந்தோக்ய உபநிடதத்தில்]] 6.8.7 இல் சுவேதகேது என்ற வாலிபனுக்கும் அவன் தந்தை உத்தாலக ஆருணிக்கும் நடக்கும் சம்பாஷணையில் திருப்பித் திருப்பிச் சொல்லப்படுகிறது.
 
==அறிவதுமில்லை, அறியப்படுவதுமில்லை==
 
இருத்தலே ஆன்மாவின் உண்மை. ‘நான் ஆன்மாவை அறியேன்’ என்றோ ‘நான் ஆன்மாவை அறிந்தேன்’ என்றோ சொல்வது பொருந்தாது. ஏனென்றால் தன்னைத் தனக்கு அறிபடு பொருளாக்குவதனால் இரண்டு பொருள் இருப்பதாக ஆகிவிடும். இது அத்வைதத்திற்கு ஒவ்வாது.
 
==அத்வைத-விசிஷ்டாத்வைத வேறுபாடு==
 
ஆன்மாவைப்பற்றிய [[விசிஷ்டாத்வைதம் |விசிஷ்டாத்வைத]] வேதாந்தக் கூற்று அத்வைதத்தில் சொல்லப் படுவதிலிருந்து சிறிது வித்தியாசப் படுகிறது. ஆன்மா என்பது பிரும்மத்தினுடைய ஒரு அம்சம்தான். எப்படி ஆன்மாவுக்கும் அது குடியிருக்கும் இந்த உடம்பிற்கும் ஒரு தனிப்பட்ட உறவு உள்ளதோ அதே மாதிரி உறவு பிரம்மத்திற்கும் ஆன்மாவுக்கும் உள்ளது என்பது விசிஷ்டாத்வைத சித்தாந்தம்.
 
==ஆன்மாவை விளக்கும் சில பொன்மொழிகள்==
 
''அத்ருஷ்டோ த்ரஷ்டா அச்ருத: ச்ரோதா அமதோ மந்தா அவிஞ்ஞாதோ விஞ்ஞாதா நான்ய: அதோ’ஸ்தி த்ரஷ்டா நான்ய: அதோ’ஸ்தி ச்ரோதா'' ''நான்ய: அதோ’ஸ்தி மந்தா நான்ய: அதோ’ஸ்தி விஞ்ஞாதா ஏஷ தே ஆன்மா அந்தர்யாமி அம்ருத: அத: அன்யத் ஆர்த்தம்''. [[பிருகதாரண்யக உபநிஷத் ]] 3 – 7 – 23.
பார்க்கப்படாமல் பார்க்கும்; கேட்கப்படாமல் கேட்கும்; நினைக்கப்படாமல் நினைக்கும்; அறியப்படாமல் அறியும். அதைத்தவிர வேறு பார்ப்பவரில்லை; வேறு கேட்பவரில்லை; வேறு நினைப்பவரில்லை; வேறு அறிபவரில்லை. அது தான் உனது ஆன்மா, உள்ளுறைபவன், அழியாதவன். மற்றதெல்லாம் கேடு.
 
வரிசை 48:
* [http://www.kamakoti.org/tamil/part4kural291.htm அத்வைதத்தில் நிஜ நாம்]
* [http://www.shastranethralaya.org Shastra Nethralaya, Himalayas]
 
{{இந்து தர்மம்}}
 
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
[[பகுப்பு:சைவ சித்தாந்தம்]]
{{இந்து தர்மம்}}
"https://ta.wikipedia.org/wiki/ஆன்மா_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது