இயேசுவின் உயிர்த்தெழுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 3:
'''இயேசுவின் உயிர்த்தெழுதல்''' (''Resurrection of Jesus'') என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனாவில்]] வாழ்ந்து, கடவுளாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, [[இயேசுவின் சிலுவைச் சாவு|சிலுவையில் அறையுண்டு இறந்த]] [[இயேசு]] கல்லறையினின்று மீண்டும் மாட்சிமையான உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்னும் கிறித்தவ நம்பிக்கை ஆகும். இதை [[இயேசு கிறித்து]]வின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற [[நற்செய்தி நூல்]]கள் பதிவு செய்துள்ளன<ref>[http://en.wikipedia.org/wiki/Resurrection_of_Jesus இயேசுவின் உயிர்த்தெழுதல்]</ref>.
 
இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் [[இயேசுவின் விண்ணேற்றம்|விண்ணேற்றமடைந்த]] நிகழ்ச்சியிலிருந்து (''Ascension of Jesus'') வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறித்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என [[கிறித்தவம்|கிறித்தவர்கள்]] நம்புகின்றனர்.<ref>J. E. L. Newbigin, ''The Gospel In a Pluralist Society'' (London: SPCK, 1989), p.66.</ref> இது அவர்கள்தம் [[நம்பிக்கை]]யின் (விசுவாசத்தின்) மையமும் ஆகும்.
 
==விவிலிய ஆதாரம்==
வரிசை 19:
== கிறித்தவரின் நம்பிக்கைக்கு அடிப்படை ==
 
இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்துறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட பிறகும், சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்பது கிறித்தவர்களின் உறுதியான நம்பிக்கை. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் [[பாலத்தீனம்|பாலத்தீன]] நாட்டில் வாழ்ந்து இறந்த [[இயேசு]] இன்றும் ஒரு புதிய முறையில் கடவுளோடு இணைந்து உயிர் வாழ்கின்றார் என்பது அவர்கள் கோட்பாடு.
 
திருச்சபையில் [[திருமுழுக்கு (கிறித்தவம்)|திருமுழுக்கு]] (ஞானஸ்நானம்) பெறுவோர் உயிர்த்தெழுந்த இயேசுவின் புதிய வாழ்வில் பங்குபெற்று, புது மனிதராய் மாறுகிறார்கள் எனவும், இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட அவர்கள் நன்னடத்தையிலும் நன்னெறியிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் [[புனித பவுல்]] அறிவுறுத்துகிறார்:
வரிசை 29:
 
*மத்தேயு 28:1-10
{{cquote|ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.
 
அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, "நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்று, "இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்" என்றார்.
 
அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.
 
திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார்.}}
 
2012ஆம் ஆண்டு இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஏப்பிரல் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வழிபாட்டு மூன்று ஆண்டு சுழற்சியில் இரண்டாம் ஆண்டாகக் கருதப்படுவதால், இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தி மாற்கு 16:1-7 பகுதியிலிருந்து எடுக்கப்படும். யோவான் 20:1-9 பகுதியையும் பயன்படுத்தலாம்.
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_உயிர்த்தெழுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது