இயேசுவின் சாவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 30:
==எருசலேம் கோவிலை இயேசு தூய்மைப்படுத்தியது அவருடைய சாவுக்குக் காரணமாதல்==
 
இது மட்டுமல்ல, [[இயேசு]] [[எருசலேம்|எருசலேம் கோவிலுள்]] நுழைந்து அங்கு விற்பதிலும் வாங்குவதிலும் ஈடுபட்டிருந்தவர்களை வெளியே துரத்திய நிகழ்ச்சி ஒரு பெரிய புயலையே கிளப்பிவிட்டிருந்தது. யூதருக்கு மிகத் தூய இடமாகிய கோவிலின் மீது [[இயேசு]] அதிகாரம் காட்டியதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
 
இந்நிகழ்ச்சி நடந்த சிறிது காலத்துக்குப் பின், யூத தலைமைச் சங்கத்தினர் இயேசுவின் மீது சாத்திய குற்றச்சாட்டைப் பார்ப்போம். ''மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்'' என்று அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று கூறினர்<sup>(மாற்கு 14: 58)</sup>. இக்குற்றச்சாட்டுக்கு அடிப்படைக் காரணம் இயேசு எருசலேம் கோவிலில் வர்த்தகம் நடந்ததைக் கேள்விக்கு உள்ளாக்கியதுதான்.
 
ஆக, மறைநூல் அறிஞர், மூப்பர், தலைமைக் குருக்கள் ஆகிய '''சமயத் தலைவர்களும்''', உரோமை ஆளுநர் பிலாத்து போன்ற '''அரசியல் ஆட்சியாளரும்''' இயேசுவின் நடவடிக்கைகள் பற்றி சந்தேகம் கொண்டதற்கும், அவருக்கு எதிராக எழுந்ததற்கும் போதிய ஆதாரங்களை இயேசுவே ஒருவிதத்தில் அவர்களுக்கு அளித்திருந்தார் என்று கூறலாம்.
 
==இயேசுவின் சாவுக்குப் பொறுப்பு யார்?==
 
சட்டமுறைப்படி பார்த்தால், இயேசுவைக் கொலைத் தண்டனைக்கு உள்ளாக்கியதற்கு இறுதிப் பொறுப்பு பொந்தியு பிலாத்துவையே சேரும். பிலாத்துவின் ஆட்சிக் காலத்தில் யூதர்கள் யாருக்கும் கொலைத் தண்டனை விதிக்கும் அதிகாரம் கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது <sup>(காண் யோவான் 18:31)</sup>. அப்படியே அவர்களுக்கு அந்த அதிகாரம் இருந்தது என்றே வைத்துக்கொண்டாலும், கடவுளைப் பழித்துரைத்தோருக்கு அளிக்கப்பட்ட தண்டனை சிலுவை மரணமன்று, மாறாக, கல்லால் எறிந்து கொல்வதுதான்<sup>(காண் மாற்கு 14:64; லேவியர் 24:16)</sup>.
 
குற்றவாளிகளைச் சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனை முறையைக் கடைப்பிடித்தவர்கள் உரோமையர்தாம். அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்களுக்கும், அடிமைகளுக்கும் வழங்கப்பட்ட தண்டனைதான் சிலுவை மரணம். இந்தத் தண்டனை முறையைக் கையாண்டதற்கு ஒரு காரணம் இருந்தது. கொடூரமான இத்தண்டனையைப் பிறருக்குப் பாடம் படிப்பிக்கும் கருவியாகவும் அவர்கள் பயன்படுத்தினர்.
 
==சிலுவை என்பது கொடூரத்தின் சின்னம்==
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_சாவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது