இறையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பொருளற்ற இடுகை நீக்கம்
சி clean up
வரிசை 17:
 
== இறையியல் என்னும் சொல்லின் வரலாறு ==
தமிழில் இறையியல் என்னும் சொல் பெரும்பாலும் கிறித்தவப் பின்னணியில் உருவானது. பழைய வழக்குப்படி, இது ''தேவ சாஸ்திரம்'' அல்லது ''வேத சாஸ்திரம்'' என்றும் ''மறையியல்'' என்றும் அழைக்கப்பட்டது.
 
ஆங்கிலத்தில் theology என்னும் சொல் கிரேக்க மொழியில் theologia (θεολογία) என்னும் கூட்டுச்சொல்லிலிருந்து பிறந்தது. <ref>[http://en.wikipedia.org/wiki/Theology இறையியல்]</ref> இலத்தீனிலும் theologia என்னும் சொல்லே பயன்படுத்தப்படுகிறது. θεολογία (theologia) என்னும் கிரேக்கச் சொல் θεός = theos (= கடவுள்), λόγος (logos) (= சொல், உரை, விளக்கம், இயல்) என்னும் இரு மூலச் சொற்களால் ஆனது. தொடக்க காலக் கிறித்தவ அறிஞரும் இடைக்காலக் கிறித்தவ அறிஞரும் இச்சொல்லுக்கு அளித்த பொருள் கிறித்தவ மரபில் ஊன்றியது. பின்னர் பிற சமயங்களும் தம் சமய மரபு ஆய்வைக் குறிக்க ''இறையியல்'' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாயின.
 
* ''இறையியல்'' என்னும் சொல் கிறித்தவ சமய வழக்கில் கையாளப்படுவதற்கு முன்னர் பண்டைய கிரேக்க கலாச்சாரத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டது. தத்துவ அறிஞர் பிளேட்டோ (கி.மு. 428/427 - கி.மு. 348/347) <ref>[http://en.wikipedia.org/wiki/Plato பிளேட்டோ]</ref> கிறித்து பிறப்பதற்கு முற்பட்ட நான்காம் நூற்றாண்டிலேயே இச்சொல்லைக் கையாண்டார். அதற்கு ''தெய்வம் (தெய்வங்கள்) பற்றிய விளக்கம்'' என்னும் பொருள் கொடுத்தார். பிளேட்டோவின் தலைசிறந்த மாணவரான அரிசுட்டாட்டில் (கி.மு. 384 - கி.மு. 322) <ref>[http://en.wikipedia.org/wiki/Aristotle அரிசுட்டாட்டில்]</ref> என்னும் தத்துவ அறிஞர் இச்சொல்லுக்கு மெய்யியல் சார்ந்த பொருள் வழங்கினார். அவர் சிந்தனைப்படி மனித அறிவு சார்ந்த அனைத்துத் துறைகளும் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அடங்கும். அவையாவன: 1) கணிதவியல் (mathematike), 2) இயற்பியல் (physike),3) இறையியல் (theologike). இந்த இறையியல் என்னும் பிரிவில் ''இயற்பியல் கடந்த இயல்'' (metaphysics) உள்ளடங்கும். அதன் உட்பிரிவாக கடவுள் (கடவுளர்) பற்றிய விளக்கம் அடங்கும். இதுவே அரிசுட்டாட்டிலின் தத்துவப் பார்வை.
வரிசை 27:
* ''கடவுள் அருளிய சொல்'' (λόγον τοῦ θεοῦ = logon tou theou = word of God) என்னும் தொடர் விவிலியத்தின் இறுதி நூலாகிய '''திருவெளிப்பாடு''' நூலில் வருகிறது <sup>(காண்க: திருவெளிப்பாடு 1:2)</sup>.
 
* கிறித்தவ அறிஞர் தெர்த்தூல்லியன் (கி.பி. சுமார் 160 - சுமார் 220) <ref>[http://en.wikipedia.org/wiki/Tertullian தெர்த்தூல்லியன்]</ref> மேற்குறிப்பிட்ட வார்ரோ என்பவரின் புரிதலையே கொண்டிருந்தார். புனித அகுஸ்தீன் (கி.பி. 354 - 430) <ref>[http://en.wikipedia.org/wiki/Augustine_of_Hippo புனித அகுஸ்தீன்]</ref> என்னும் அறிஞரும் அக்கருத்தை ஏற்றார். அது தவிர, பொதுப்பொருளில் ''இறையியல்'' என்றால் ''கடவுள் பற்றிய சிந்தனை, விவாதம்'' எனவும் கொண்டார்.
 
* நடுக்கால அறிஞர் சிலர் theologia என்னும் சொல்லுக்கு ''கடவுளின் வார்த்தை'' என்று பொருள்கொடுத்து அதை விவிலியத்தைக் குறிக்கப் பயன்படுத்தினர்.
வரிசை 33:
* கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பொயேத்தியுசு (Boethius) என்னும் அறிஞர் ''இறையியல்'' என்பது மெய்யியலின் ஒரு பகுதி என்று பொருள்கொண்டார். அசையும் பொருள்களைப் பற்றிய ஆய்வு ''இயற்பியல்'' என்றால் அசையாப் பொருள் பற்றிய ஆய்வு ''இறையியல்'' என்பது அவர் கருத்து. கடவுள் இயற்கைப் பொருள்களைப் போன்று மாற்றங்களுக்கு உட்பட்டவர் அல்லர் என்னும் கருத்தின் அடிப்படையில் ''அசையாப் பொருள்'' என்று குறிக்கப்பட்டார்.
 
* நடுக்கால கிறித்தவ அறிஞர்கள் கிறித்தவ சமய நம்பிக்கைகளை ஆயும் கல்வித்துறையாக இறையியலை வரையறுத்தார்கள்.
 
* 17ஆம் நூற்றாண்டிலிருந்து பொதுவாக சமயம் சார்ந்த கருத்துகளை ஆயும் இயல் ''இறையியல்'' என்னும் பொருள் எழுந்தது. இவ்வாறு "இயற்கை இறையியல்" (Natural Theology) என்னும் தொடர் எழுந்தது. கிறித்தவ வெளிப்பாட்டை நேரடியாக எடுத்து ஆயாமல், இயற்கையே இறைவன் பற்றி எதை எடுத்துரைக்கிறது என்று ஆயும் பாடம் இது.
வரிசை 47:
* '''இசுலாமிய மரபில்''' [[கலாம்]] <ref>[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D கலாம்]</ref> என்னும் சொல் இறையியலையும் மெய்யியலையும் குறிக்கிறது. திருக்குரான் பற்றிய ஆய்வும், இசுலாமிய சட்ட முறை பற்றிய் ஆய்வும் அதில் உள்ளடங்கும்.<ref>[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D இசுலாமிய மெய்யியல்]</ref>
 
* '''யூத இறையியல்''' என்பது கிறித்தவ இறையியலுக்கும் இசுலாமிய இறையியலுக்கும் ஒருவிதத்தில் முன்னோடியாக இருந்தது. யூத சமயச் சட்டத்தையும், (எபிரேய, யூத) விவிலியத்தையும் விளக்கியுரைக்கும் செயலே பெரும்பாலும் யூத சமய ஆய்வு அல்லது யூத இறையியல் ஆகும் என்பது சில அறிஞர் கருத்து. ஆங்கிலத்தில் இது Judaism என அழைக்கப்படுகிறது. <ref>[http://en.wikipedia.org/wiki/Judaism யூத இறையியல்]</ref>
 
== வரலாற்றில் இறையியல் ஆய்வுத்துறைகள் ==
 
* கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் இந்தியாவில் (இன்றைய பாகிசுத்தான்) தட்சசீலம் (வடமொழி: तक्षशिला; இந்தி: तक्षिला)<ref>[http://en.wikipedia.org/wiki/Taxila தட்சசீலம்]</ref> என்னும் பழம்பெரும் நகரில் அமைந்திருந்த உயர் கல்வி நிறுவனத்தில் வேதங்களும் புத்த சமயக் கொள்கைகளும் கற்பிக்கப்பட்டன.
 
* கிரேக்க நாட்டில் மெய்யியலார் பிளேட்டோ கி.மு. நான்காம் நூற்றாண்டில் நிறுவிய ''அக்காதெமி'' (Academy) என்னும் கல்வியகத்தில் மெய்யியலோடு இறையியலும் கற்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 
* சீனாவில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கன்ஃபூசிய இறையியல் '''தைக்சு''' Taixue (சீனம்: 太学) என்னும் உயர் கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்பட்டது. <ref>[http://en.wikipedia.org/wiki/Taixue தைக்சு பல்கலைக் கழகம்]</ref>
 
* பண்டைக்கால அசீரிய நகரான நிசிபிசு (Nisibis) என்னும் நகரில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் ஒரு கிறித்தவ உயர் கல்விக் கழகம் சிறப்பாகச் செயல்பட்டது. அங்கே கிறித்தவ இறையியல் கற்பிக்கப்பட்டது. அந்நகர் இன்றைய துருக்கி நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது.
வரிசை 61:
* கி.பி. 5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பீகார் மாநிலத்தில் இருந்த நாளந்தா (नालंदा)<ref>[http://en.wikipedia.org/wiki/Nalanda நாளந்தா பல்கலைக் கழகம்]</ref> என்னும் பண்டைய நகரில் புத்த சமயக் கொள்கைகள் தொடர்பான ஆய்வு நிகழ்த்திய பல்கலைக்கழகம் செயல்பட்டது.
 
* மொரோக்கோ நாட்டில் கி.பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே அல்-கராவ்வியின் (Al-Karouine)<ref>[http://en.wikipedia.org/wiki/University_of_Al-Karaouine அல்-கராவ்வியின் பல்கலைக் கழகம்]</ref> என்னும் நகரில் இசுலாமிய இறையியல் கற்பிக்கப்பட்ட பல்கலைக் கழகம் இருந்து வருகிறது. அதுபோலவே கெய்ரோ நகரில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அல்-ஆசார் (Al-Azhar) பல்கலைக்கழகத்தில் இசுலாமிய சமய ஆய்வுகள் நிகழ்ந்தன.
 
* இன்றைய மேலை நாட்டு முறையில் அமைந்த பல்கலைக் கழகங்கள் ஐரோப்பாவில் நடுக்காலத்தில் கிறித்தவத் துறவியரால் நடத்தப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து வளர்ச்சி பெற்றவையே. அவற்றுள் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்கலைக் கழகங்கள் பொலோஞ்ஞா (Bologna), பாரிசு, ஆக்சுஃபோர்டு போன்றவை ஆகும். இந்நிறுவனங்களில் இறையியல் பாடங்கள் கற்பிக்கப்பட்டன; விரிவான இறையியல் ஆய்வுகள் நிகழ்ந்தன. அக்காலத்தில் இறையியல் ''மனித அறிவியல் துறைகளின் அரசி'' என்னும் சிறப்பிடம் பெற்றிருந்தது. பிற பாடத்துறைகள் இறையியல் படிப்புக்குத் துணையாக அமைந்தன.
"https://ta.wikipedia.org/wiki/இறையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது