ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி clean up |
||
வரிசை 31:
== தொடக்க காலம் ==
'''ஆன்டனியோ கிஸ்லியரி''' என்ற இயற்பெயர் கொண்ட '''5ம் பயஸ்''', [[இத்தாலி]]யின் [[மிலான்]] நகரில் போஸ்கோ என்ற இடத்தில் 1504 ஜனவரி 17ந்தேதி பிறந்தார். சிறு வயது முதலே கிறிஸ்தவ விசுவாசத்திலும் பக்தியிலும் வளர்ந்தார்.
14 வயதில் டொமினிக்கன் துறவற சபையில் நுழைந்தபோது, '''மைக்கேல் கிஸ்லியரி''' என்ற பெயரைப் பெற்றார். 1528ல் ஜெனோவா நகரில் குருப்பட்டம் பெற்றார். அதன்பின், பவியா நகருக்கு சென்று 16 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணி ஆற்றினார். 1550ல் ரோம் திரும்பிய இவர், திருத்தந்தையின் விநியோக அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டார்.
வரிசை 38:
==திருத்தந்தையாக==
திருத்தந்தை நான்காம் பயஸ் (1559-65) மறைந்ததும் [[திருத்தந்தை]]யாக தேர்வு செய்யப்பட்ட கர்தினால் மைக்கேல் கிஸ்லியரி, '''ஐந்தாம் பயஸ்''' ([[இத்தாலிய மொழி|இத்தாலியன்]]: '''Pio V''') என்னும் பெயரை ஏற்றுக்கொண்டார். இவர் தனது 62வது வயதில், திருச்சபையின் 225வது திருத்தந்தையாக 1566 ஜனவரி 17ந்தேதி பொறுப்பேற்றார்.
திருத்தந்தையர் வெள்ளை அங்கி அணியும் வழக்கத்தை இவரே தொடங்கி வைத்தார். அதற்கு முன்பு திருத்தந்தையர் சிவப்பு அங்கியை அணிவதே வழக்கமாய் இருந்தது. அதிக நேரம் செபம் செய்வது இவர் வழக்கமாக இருந்தது. அரசியல் குறுக்கீடுகளால் [[கத்தோலிக்க திருச்சபை]]யில் நுழைந்திருந்த தவறான வழக்கங்களை ஒழிக்க திருத்தந்தை ஐந்தாம் பயஸ் பெரிதும் விரும்பினார்.
வரிசை 44:
==செயல்பாடுகள்==
திருத்தந்தை 5ம் பயஸ் திருச்சபையின் பதவிகளை உறவு முறைப்படி பெறுவதையும், ஆன்மீகக் காரியங்களை விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தையும் ஒழிக்கப் பாடுபட்டார். திரெந்து நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற பொதுச்சங்கத்தின் தீர்மானங்களை செயல்படுத்தி திருச்சபையில் சீர்திருத்தம் ஏற்பட வழிவகுத்தார்.
திருச்சபையின் உண்மையான விசுவாசத்தை நிலை நிறுத்தவும், பிரிவினையாளர்களின் தவறான போதனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு ஒன்றைத் தயாரித்தார். திருப்பலியை முறைப்படுத்தும் வகையில் 1570ல் ரோமன் [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி]] புத்தகத்தை அறிமுகம் செய்து உலகெங்கும் உள்ள [[கத்தோலிக்க திருச்சபை]]யின் பொது திருப்பலி நூலாக்கினார்.
இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத், இத்தாலி அரசன் 2ஆம் மேக்சிமிலியன் ஆகியோரின் எதிர்ப்புகளை சந்தித்தார். பிரான்ஸ், ஹாலந்து நாடுகளின் கொந்தளிப்பிற்கு இடையே துருக்கியரின் தாக்குதல்களையும் எதிர்கொண்டார்.
|