ஒட்டக்கூத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (clean up)
காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டின்]] [[திருச்சி]] மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய [[திருவெறும்பூர்|திருவரம்பூரில்]]) பிறந்தார். [[திருநாவுக்கரசர்]] பாடிய [[திருவெறும்பூர்|திருவெறும்பியூர்]] என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் [[தாழ்ப்பாள்]] ” என்பது வாய்மொழி வழக்கு.
 
[[நளவெண்பா]] இயற்றிய [[புகழேந்தி]]ப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், சில நூற்றாண்டுகள் பின் வாழ்ந்தவர் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. இதே போல [[கம்பர்|கம்பரும்]] ஒட்டக்கூத்தருக்குப் பின் வாழ்ந்தவர் என்னும் கருத்து உள்ளது.
 
இவர் இயற்றிய [[குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்]] என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும். <ref>http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202152.htm</ref>
 
==பெயர்ப் பொருள்==
''கூத்தர்'' என்பதுதான் இவரது பெயர் என்றாலும் இவர் 'ஒட்டம்' (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார். <ref>ஒட்டக்கூத்தர் அரும்பைத் தொள்ளாயிரம் பாடும்போது, அதில் லரும் ஒரு பாடலை ஒட்டி மற்றொரு பாடலைப் பாடுமாறு விக்கிரம சோழன் கேட்டதாகவும், ஒட்டக்கூத்தர் சோழன் விருப்பப்படி ஒட்டிப் பாடியதால் ‘ஒட்டக்கூத்தர்’ என்னும் பெயரைப் பெற்றார் என்னும் செய்தியும் கூறப்படுகிறது. - *[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005</ref>
 
==ஒட்டக்கூத்தரின் நூல்கள்==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1496307" இருந்து மீள்விக்கப்பட்டது