"கலிலேயக் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
''கெனசரேத்து ஏரி'' என்னும் பெயர் [[லூக்கா நற்செய்தி|லூக்கா 5:1இல்]] வருகிறது. மேலும், [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்]] பல பகுதிகளிலும் இப்பெயர் ''கினரேத்துக் கடல்'' (Kinnereth/Chinnereth) என்றுள்ளது (காண்க: [[எண்ணிக்கை (நூல்)|எண்ணிக்கை 34:11]], [[யோசுவா (நூல்)|யோசுவா 13:27]]).
 
''கின்னர்'' என்னும் எபிரேயச் சொல்லுக்கு ''யாழ்'' என்று பொருள். இந்த ஏரி யாழ் வடிவில் உள்ளதால் அப்பெயர் பெற்றிருக்கலாம்.
 
==இயற்கைச் சூழல்==
 
அழகிய நீல நிறத்துடன் தோன்றும் இந்த ஏரியின் கரையில் பல பழவகை மரங்களும், வண்ண மலர்ச்செடிகளும் அமைந்து இதற்கு அழகூட்டுகிறன. இதன் கரையில் சிறு மலைகள் இருக்கின்றன. இப்பகுதி மிகவும் செழிப்பான இடம். கண்ணைப் பறிக்கும் வண்ண மலர்களும், பசுமையான செடி கொடிகளும் பார்ப்பவர்களுக்குப் பரவசமூட்டுகின்றன. மிதமான வெப்பமுடைய நீர் இந்த ஏரியிலுள்ளதும் இதற்குக் காரணம்.
 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரியில் மீன்பிடிக்கும் தொழில் செழித்தோங்கி வந்துள்ளது. 230 படகுகள் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்ததாக முதல் நூற்றாண்டு வரலாற்றாசிரியர் ஃபிளாவியுஸ் ஜோசேஃபஸ் (''Flavius Josephus'') என்பவர் கூறுகிறார். இந்த ஏரியில் காணப்படும் திலாப்பியா மீனுக்கு தூய பேதுரு மீன் (''St. Peter's Fish'') என்னும் சிறப்புப் பெயர் உண்டு.
 
அமைதியே உருவான அழகிய கடல் இது. ஆனால், எர்மோன் மலையிலிருந்து வரும் குளிர்ந்த காற்று, திடீரென இதன் அலைகளைப் படைகளாகத் திரட்டி, பேரொலிகளையும் பேரலைகளையும் எழுப்பிப் புயலாக மாற்றிவிடுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் [[இயேசு]] பணிசெய்த காலத்திலேயே கலிலேயக் கடல் மிகவும் பேர்போன இடமாக இருந்தது. ”கடலோர நெடுஞ்சாலை” (''Via Maris'') என்னும் பெயர்கொண்ட வணிகப் பாதை அவ்வழியே சென்று, எகிப்து நாட்டையும் வடக்கு அரசுகளையும் இணைத்தது. அந்த ஏரிக்கரையில் உரோமையர் பல நகர்களை நிறுவினர். கதாரா (''Gadara''), ஹிப்போஸ் (''Hippos''), திபேரியாஸ் (''Tiberias'') என்னும் அந்நகரங்களில் வாணிகம் செழித்தது.
இயேசு பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இந்த ஏரிக்கரையில் மீனவர் குடியிருப்புகள் பல இருந்தன. அங்கு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது.
 
இயேசு தமது முதல் [[திருத்தூதர்|திருத்தூதர்களை]] அழைத்தபோது, இக்கடலில்தான் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர் ([[மத்தேயு|மத்தேயு 4:18-22]]; [[மாற்கு|மாற்கு 1:14-20]]; [[லூக்கா நற்செய்தி|லூக்கா 5:1-11]]). இவ்வாறு, மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்றவர்கள் திருத்தூதர்கள் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவும்]] அவர்தம் உடன்பிறப்பு [[அந்திரேயா (திருத்தூதர்)|அந்திரேயாவும்]], மற்றும் [[யோவான்]], அவர்தம் உடன்பிறப்பு யாக்கோபு என்பவரும் ஆவர்.
 
கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாக [[மத்தேயு|மத்தேயு நற்செய்தியாளர்]] குறித்துள்ளார் (காண்க: [[மத்தேயு|மத்தேயு 5:1-7:28]]). இது [[மலைப்பொழிவு]] என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது.
 
===அதிசய மீன்பாடு புதுமை===
இயேசு கலிலேயக் கடல்மீது நடந்தார் என்னும் செய்தியை நற்செய்தியாளர் பதிவுசெய்துள்ளனர் (காண்க: [[மத்தேயு|மத்தேயு 14:26-33]], [[மாற்கு|மாற்கு 4:45-52]], [[யோவான்|யோவான் 6:16-21]]).
 
கலிலேயக் கடலில் ஏற்பட்ட புயலை இயேசு அடக்கிய நிகழ்ச்சியையும் நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் (காண்க: [[மத்தேயு|மத்தேயு 8:23-27]], [[மாற்கு|மாற்கு 4:35-41]], [[லூக்கா நற்செய்தி|லூக்கா 8:22-25]]).
 
[[Image:Rembrandt Christ in the Storm on the Lake of Galilee.jpg|thumb|right|இயேசு கலிலேயக் கடலில் புயலை அடக்குகிறார். ஓவியர்: ரெம்ப்ராண்ட். ஆண்டு: 1633.]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1496359" இருந்து மீள்விக்கப்பட்டது