டெலஸ்ஃபோருஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 40:
*"உன்னதங்களிலே" கீதத்தைத் திருப்பலியின்போது பாடுதல்.
 
"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) தருகின்ற மேற்கூறிய தகவலுக்குப் போதிய வரலாற்று ஆதாரம் இல்லை என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
 
==இயேசுவின் உயிர்த்தெழுதல் கொண்டாடும் நாள் பற்றிய விவாதம்==
 
யூசேபியஸ் என்னும் பண்டைய கிறித்தவ அறிஞர் கீழ்வரும் செய்தியைக் குறித்துள்ளார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயேசுவின் உயிர்த்தெழுதலை எந்நாளில் கொண்டாடுவது என்பது குறித்து விவாதம் எழுந்தது. அப்பொருள் குறித்து புனித இரனேயஸ் என்னும் பண்டைய கிறித்தவ அறிஞர் [[முதலாம் விக்டர் (திருத்தந்தை)|திருத்தந்தை முதலாம் விக்டர்]] என்பவருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு சிறு பகுதியின் படி, டெலஸ்ஃபோர் இயேசுவின் உயிர்த்தெழுதலை ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடிய உரோமை ஆயர்களுள் ஒருவர் ஆவார். வேறு பலர் அவ்விழாவை யூத நாட்காட்டியைப் பின்பற்றி, பாஸ்கா விழாவாக வாரத்தின் பிற நாள்களில் கொண்டாடினர். இருப்பினும் விக்டரைப் போலன்றி, டெலஸ்ஃபோருஸ் வேறு நாள்களில் உயிர்த்தெழுதல் விழாவைக் கொண்டாடியவர்களோடும் நல்லுறவு கொண்டிருந்தார்.
 
==கார்மேல் சபையின் பாதுகாவலர்==
 
ஒரு மரபுப்படி, டெலஸ்ஃபோருஸ் பழைய ஏற்பாட்டில் வரும் கார்மேல் மலையில் வனத்துறவியாக வாழ்ந்தார். எனவே, கார்மேல் சபைத் துறவியர் அவரைத் தம் சபையின் பாதுகாவலர்களுள் ஒருவராகக் கருதி மதிக்கின்றனர்.
 
திருத்தந்தை டெலஸ்ஃபோருஸ் [[புனித பேதுரு பெருங்கோவில்|புனித பேதுரு பெருங்கோவிலில்]] அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/டெலஸ்ஃபோருஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது