லாலா லஜபதி ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
 
== அரசியல் வாழ்க்கை ==
இவர் 1888 ஆம் ஆண்டில் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார். அக்காலத்தில், தீவிரமான இந்து தேசியவாதிகளாக விளங்கிப் போராட்டக் காலத்திலேயே தமது உயிர்களைக் கொடுத்த முக்கியமான மூவருள் இவரும் ஒருவர். ஏனையோர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த [[பால கங்காதர திலகர்|பால கங்காதர திலகரும்]], வங்காளத்தைச் சேர்ந்த [[பிபின் சந்திர பால்|பிபின் சந்திர பாலும்]] ஆவர். கூட்டாக இம்மூவரையும் லால்-பால்-பால் என அழைப்பர். ராய், இன்றைய இந்து தேசியவாதக் கட்சியான [[பாரதீய ஜனதாக் கட்சி]]யின் முன்னோடியான [[இந்து மகா சபை]]யின் உறுப்பினராகவும் இருந்தார்.
 
1905 ஆம் ஆண்டின் [[வங்காளப் பிரிவினை]] இவரது [[தேசிய உணர்வு|தேசிய உணர்வைத்]] தூண்டியதுடன், விடுதலைக்காகப் போராடும் பாதையில் அவரை உறுதியாக நிற்கவும் வைத்தது. பிரித்தானிய அரசின் அடக்கு முறைகள், மக்கள் மத்தியில் தேசிய எழுச்சியையும், [[தன்மானம்|தன்மான]] உணர்வையும் தூண்டுவதில் அவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்தது. லாலா உள்ளிட்ட முன் குறிப்பிட்ட மூவரும், பிரித்தானியரிடம் இருந்து ஓரளவு [[தன்னாட்சி]]யைக் கோரினர். இது அக்காலத்தில் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. முழுமையான அரசியல் விடுதலையை முதன் முதலில் கோரியவர்களும் இவர்களே.
 
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
வரி 24 ⟶ 26:
[[பகுப்பு:1865 பிறப்புகள்]]
[[பகுப்பு:1928 இறப்புகள்]]
 
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
"https://ta.wikipedia.org/wiki/லாலா_லஜபதி_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது